இலங்கை

புலம்பெயர்ந்தோருக்கான பணப்பரிமாற்றத்தை அதிகரிக்க நடவடிக்கை!

  • May 20, 2023
  • 0 Comments

புலம்பெயர்ந்தோருக்கான பணப்பரிமாற்றத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மனுஷ நாணயக்கார மற்றுமொரு அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். இதன்படி, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் நேரடி ஒப்பந்தங்கள் மூலம் வெளிநாட்டு சேவைகளை ஏற்றுமதி செய்பவர்களும், அமெரிக்க டொலர்களில் சம்பளம் பெறுபவர்களும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் திட்டத்திற்கு தகுதியுடையவர்களாக மாற்றப்பட வேண்டும் என்று நாணயக்கார கேட்டுக்கொண்டார். ட்விட்டரில், அமைச்சர், இதுபோன்ற ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள், இது தொடர்பாக ‘ஒரு பொறிமுறையைப் பற்றி விவாதிக்க’ Ministrylife@gmail.com என்ற […]

பொழுதுபோக்கு

முடித்துக்காட்டிய பாலா! பயங்கர வேகமெடுத்துள்ள “வணங்கான்” சூர்யாவுக்கு பதிலடி

  • May 20, 2023
  • 0 Comments

ஆரம்ப காலத்தில் சில தோல்வி திரைப்படங்களை கொடுத்து தடுமாறி வந்த சூர்யாவுக்கு பாலா தான் ஒரு முகவரியை கொடுத்தார். அவரின் இயக்கத்தில் வெளிவந்த நந்தா படத்தை தொடர்ந்து பிதாமகன் படமும் சூர்யாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதனாலேயே இந்த கூட்டணி மீண்டும் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தது. எனினும் இந்த படப்பிடிப்பில் சில கருத்து வேறுபாடுகள் உருவானது. அதன் காரணமாக சூர்யா இந்த படத்தில் இருந்து விலகினார். இது பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அருண் விஜய், சூர்யா நடித்து வந்த […]

இந்தியா செய்தி

சிக்கிமில் நிலச்சரிவில் சிக்கி தவித்த 500 சுற்றுலா பயணிகள்!

  • May 20, 2023
  • 0 Comments

சிக்கிம் மாநிலத்தில் உள்ள லாச்சுங் மற்றும் லாச்சென் பள்ளத்தாக்கு பகுதி சிறந்த சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் ரோடுகள் சேதமாகி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா வந்த சுமார் 500 பேர் சுங்தாங் பகுதியில் சிக்கி கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்த […]

இந்தியா

ஜம்மு – காஷ்மீரின் 15 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

  • May 20, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுக்கு சிலர் நிதி உதவி அளித்துவருகின்ற நிலையில், என்.ஐ.ஏ.  அதிகாரிகள் இன்று சோதனை நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றனர். இவர்களை ஒடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பயங்கரவாத செயலில் ஈடுபடும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுக்கு சிலர் நிதி உதவி அளித்து வருகின்றனர். ஆதரவு தெரிவித்த இவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி  […]

பொழுதுபோக்கு

ஹிந்தியில் பட்டையை கிளப்பும் ரஷ்மிகா!! யாருடன் இணைந்துள்ளார் தெரியுமா?

  • May 20, 2023
  • 0 Comments

ஷாஹித் கபூர் மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் முதல் முறையாக இணையும் புதிய படத்த்திற்காக ஆகஸ்ட் 1 ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முன்னணி செய்தி இணையதளத்தின் அறிக்கையின்படி, நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஷாஹித் ஒரு நகைச்சுவையான நடிப்பை வெளியிட ஆர்வமாக உள்ளதாகவும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதில் நடிகர் அனீஸ் பாஸ்மிக்கு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை மொத்த தேதிகளை ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இப்படத்தில் […]

இலங்கை

நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு !!

  • May 20, 2023
  • 0 Comments

இலங்கையில் நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள 370 வைத்திய அதிகாரி பிரிவுகளில் 59 டெங்கு அபாய பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கூறியுள்ளது. இலங்கையில் 50 வீதமான […]

ஆசியா

இம்ரான் கான் வீட்டில் பொலிஸார் அதிரடி சோதனை; சிக்கிய 6 பயங்கரவாதிகள்!

  • May 20, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் அங்கு சோதனை நடத்தினர். அண்மையில், இம்ரான் கான் வீட்டில் 40 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்களை 24 மணி நேரத்திற்குள் ஒப்படைக்கும்படியும் அவரது கட்சிக்கு, பொலிஸார் அறிவுறுத்தினர். இந்நிலையில், வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து, லாகூரிலுள்ள இம்ரான் வீட்டில், அதிரடியாக உள்ளே நுழைந்து பொலிஸார் சோதனை நடத்தினர்.அப்போது வீட்டின் முன்பக்க மற்றும் பின்பக்க வாயில் என அனைத்து இடங்களிலும் […]

பொழுதுபோக்கு

கமல்ஹாசனின் “வேட்டையாடு விளையாடு” ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ஜூன் மாதம் ரெடியா இருங்க…

  • May 20, 2023
  • 0 Comments

நடிகர், தயாரிப்பாளர், கவிஞர் என பல முகங்களை கொண்டுள்ள உலகநாயகன் கமல்ஹாசனின் திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில், கமலில் மைல்கல் படங்களில் ஒன்றான ‘வேட்டையாடு விளையாடு’ குறித்து ரசிகர்களுக்கு இதோ ஒரு மகிழ்ச்சியான அப்டேட். இந்த படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் புதிய போஸ்டர் ஜூன் மாதம் படத்தின் மறு வெளியீட்டை அறிவிப்பதற்காக தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது, இருப்பினும், புதிய டீசர் அல்லது டிரெய்லர் கட் […]

ஐரோப்பா

F-16 ரக போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்கினால் பெரிய அபாயங்கள் ஏற்படும் – ரஷ்யா எச்சரிக்கை!

  • May 20, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானங்களை வழங்க மேற்குலக நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பெரிய அபாயங்கள் ஏற்படும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை வழங்கினால், “பெரிய ஆபத்துக்களை” எதிர்கொள்ளும் என்று ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோவை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. F-16 போர் விமானங்களில் உக்ரேனிய விமானிகளுக்கான கூட்டு நேச நாட்டுப் பயிற்சித் திட்டங்களை வாஷிங்டன் ஆதரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ […]

இலங்கை

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை!

  • May 20, 2023
  • 0 Comments

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக பதிவாகி வருகின்ற இளம் தலைமுறையினருடன் தொடர்புடைய சட்ட விரோத சம்பவங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார். எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக சகல பாடசாலைகளினதும் ஒத்துழைப்புடன் இந்த புலனாய்வுப் பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பொது சேவையின் தரத்தை உயர்த்துவதுடன் தற்போதுள்ள […]

error: Content is protected !!