இலங்கை

யாழ்ப்பாணத்தில் பரவும் மற்றுமொரு ஆபத்து! இருவர் மரணம்

  • December 2, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணப் பகுதியில் எலிக்காய்ச்சல் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். மழைக்காலம் என்பதால், மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறும், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுமாறும் […]

இலங்கை செய்தி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான உதவி அதிகரிப்பு

  • December 2, 2025
  • 0 Comments

பேரிடர் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள் மற்றும் சொத்துகளைச் சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் நிதி உதவித் தொகை ரூபாய் 10,000 இலிருந்து ரூபாய் 25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிதியமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த முடிவானது, ‘திட்வாஹ்’ சூறாவளியால் (Ditwah cyclone) பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்குடன் எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் டாக்டர். ஹர்ஷனா […]

இலங்கை செய்தி

நிலுவை பணம் சுழற்சி முறையில் அறவிடப்படும்: மின்சார சபை

  • December 2, 2025
  • 0 Comments

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது என்று இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board – CEB) பொது முகாமையாளர் ஷெர்லி குமார (Shirley Kumara) தெரிவித்துள்ளார். பேரிடறால் பாதிக்கப்படட பகுதிகளில் உள்ள மக்கள் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தாலும், அதற்காக மின்சாரம் துண்டிக்கப்படாது என்று அவர் உறுதி அளித்தார். நிலுவையில் உள்ள தொகைகள் அனைத்தும் எதிர்காலக் கட்டண சுழற்சிகளில் (future billing cycles) சேர்க்கப்படும் என்றும், இந்தச் சமயத்தில் எந்தவிதமான துண்டிப்புகளும் […]

இலங்கை

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்காவிற்கு விளக்கமறியல்!

  • December 2, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை டிசம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிபதி அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார். இன்று காலை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையான அவர் கைது செய்யப்பட்டப்பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சந்தேக நபர் விளையாட்டு அமைச்சகம், தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சகம் மற்றும்  உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சகத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக கைது […]

இலங்கை

நாடு முழுவதும் மீண்டும் மழை பெய்யும் அபாயம்

  • December 2, 2025
  • 0 Comments

அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. டித்வா புயலின் தாக்கம் இன்னும் ஓயாத நிலையில் மீண்டும் மழை அதிகரிக்கும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் பணியமர்த்தப்படும் இந்தியர்!

  • December 2, 2025
  • 0 Comments

ஆப்பிளின் செயற்கை நுண்ணறிவு மற்றும் AI உத்திக்கான  மூத்த துணைத் தலைவரான  ஜோன் கியானாண்ட்ரியா (John Giannandrea) பதவி விலகியுள்ளார்.  குறித்த பதவிக்கு புதிய தலைவராக மைக்ரோசாப்ட் AI நிர்வாகி அமர் சுப்பிரமணியா (Amar Subramanya) நியமிக்கப்பட்டுள்ளார்.  இரண்டு தசாப்தங்களாக இந்த துறையில் பணியாற்றிய அவர் AI, ஜெமினியின் வளர்ச்சியை மேற்பார்வையிட்டுள்ளார். ஜான் கியானாண்ட்ரியா (John Giannandrea) அடுத்த ஆண்டு  பதவி விலகும் வரை ஆப்பிளின் ஆலோசகராகத் தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து […]

இலங்கை செய்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில் 12,691 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

  • December 2, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 12691குடும்பங்களை சேர்ந்த 39193 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 656 குடும்பங்களை சேர்ந்த 2062 நபரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4400 குடும்பங்களை சேர்ந்த 13559 நபரும், ஒட்டுசுட்டான் […]

இலங்கை

களனி ஆற்றின் நீர்மட்டம் குறைவதாக அறிவிப்பு

  • December 2, 2025
  • 0 Comments

களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. களனி ஆற்றின் நாகலகம் வீதியின் அளவீட்டில் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் நீர்மட்டம் 6.9 அடியாக இருந்தது, பின்னர் பிற்பகல் 3:00 மணியளவில் 6.75 அடியாகக் குறைந்துள்ளது. இதேபோல், ஹன்வெல்ல அளவீட்டில் நீர்மட்டம் பிற்பகல் 2:00 மணியளவில் 7.14 அடியாக இருந்தது, பிற்பகல் 3:00 மணியளவில் 7.07 அடியாகக் குறைந்தது, இருப்பினும் இது ஆபத்தான மட்டத்தில் உள்ளது. கூடுதலாக, களு கங்கை மற்றும் மல்வத்து ஓயா […]

இலங்கை செய்தி

வெள்ளத்தால் கோம்பாவில் பாலம் சேதம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • December 2, 2025
  • 0 Comments

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பிரதான வீதியில் அமைந்துள்ள சிறி சுப்ரமணிய வித்தியாலயாசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள கோம்பாவில்லுக்கு செல்லும் பாலம் முழுமையாக துண்டிக்கப்பட்டு காணப்படுகிறது. அண்மைய நாட்களாக பெய்த கனமழையின் தாக்கத்தால் குறித்த பாலம் பிரதான வீதியில் இருந்து பிரிந்து இரு துண்டுகளாக பிரிந்து அதன் நடுவே நீர் வேகமாக பாய்ந்து கொண்டு உள்ளது. இதனால் குறித்த வீதியூடாக கோம்பாவில்லுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும் தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சிரமம் காரணமாக பாடசாலை மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் […]

இலங்கை

சிலாபம் வைத்தியசாலை நாளை மீண்டும் திறக்கப்படும்

  • December 2, 2025
  • 0 Comments

மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை நாளை (03) முதல் மீண்டும் திறக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை காரணமாக வைத்தியசாலை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், அதன் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று வைத்தியசாலைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று நீர் விநியோகமும் மீண்டும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சேதமடைந்த ஏனைய அனைத்து பிரிவுகளையும் படிப்படியாகவும் விரைவாகவும் மீட்டெடுக்கப்பட்டு […]

error: Content is protected !!