இலங்கையில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – அதிகரிக்கும் மரணங்கள்
இலங்கையில் இந்த வருடத்தில் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தொற்றுநோயியல் பிரிவின் தினசரி நிலைமை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த தினத்தில் 15 பேருக்கு கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், மூன்று உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, நாட்டில் சிகிச்சை பெறும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 61 ஆகவும், இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் […]













