3 ஆண்டுகளுக்கு பின் ஸ்வீடன் கடற்கரைக்கு வந்த ரஷ்ய உளவு திமிங்கலம்!
மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் ஸ்வீடன் கடற்கரையின் மேற்பரப்புக்கு ரஷ்ய ‘உளவு’ திமிங்கலம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2019ஆம் ஆண்டில் நோர்வே கடற்கரையில் காணப்பட்டு தலைப்புச் செய்திகளில் வந்த திமிங்கலம், இப்போது 3 ஆண்டுகளுக்கும் பின்னர் ஸ்வீடன் கடற்கரையில் சுற்றித்திரிவதாக அச்சம் எழுந்துள்ளது. ரஷ்ய கடற்படையால் பயிற்சி பெற்ற உளவாளி என்று சந்தேகிக்கப்படும் பெலுகா திமிங்கலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) ஸ்வீடன் கடற்கரையில் தோன்றியதாக கூறப்படுகிறது.திமிங்கலம் சுற்றித் திரிவதைக் கண்ட கடல் உயிரியலாளர்கள் இது தொடர்பில் தகவல் […]













