இந்தியா முக்கிய செய்திகள்

ஒடிசாவில் பயங்கர ரயில் விபத்து!! சுமார் 50 பேர் பலி.. 400 பேரின் நிலை என்ன?

  • June 2, 2023
  • 0 Comments

கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் பயணிகள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. மீட்புக் குழு விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்றடைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 50 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன. உள்ளூர் […]

பொழுதுபோக்கு

ஸ்ரீதேவிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ்தான்!! போனி கபூர் பகிரங்க அறிவிப்பு

  • June 2, 2023
  • 0 Comments

பிரபல பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளரான போனி கபூர், அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். இந்த நிலையில், போனி கபூர் ஜூன் 1 ஆம் திகதி சென்னையில் நடந்த ‘மாமன்னன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதன்போது, பேசிய போனி கபூர், உதயநிதி மற்றும் ‘மாமன்னன்’ படக்குழுவினரை பாராட்டி பேசினார். போனி கபூர், நடிகை கீர்த்தி சுரேஷை மறைந்த தனது மனைவியும் பழம்பெரும் நடிகையுமான ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டுள்ளார். திறமையான நடிகை அவரது […]

பொழுதுபோக்கு

விஜய் சேதுபதியை பின்பற்றும் ஜெய் : அதுக்கும் டெரர் ஃபேஸ் வேணுமில்ல என்று புலம்பும் ரசிகர்கள்!

  • June 2, 2023
  • 0 Comments

நடிகர் ஜெய்யின் நடிப்பில் தீரா காதல் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. கடந்த சில காலமாக தோல்வி படங்களைக் கொடுத்துவந்த ஜெய்யிற்கு இந்த தீராக காதல் படம் நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த படத்தை  அடுத்து  நயன்தாரா படத்தில் நடிக்க இருக்கிறார். அத்துடன் ஒரு நிகழ்ச்சி மேடையில் தீரா காதல் இயக்குனரிடம் இதுதான் சமயம் என்று இவருக்கு இருந்த ஆசையை சொல்லிவிட்டார். அதாவது அஜித்தை வைத்து அடுத்து படம் எடுத்தால் எனக்கு கண்டிப்பாக வில்லன் வாய்ப்பு […]

இலங்கை

பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது – மைத்திரிபால சிறிசேன!

  • June 2, 2023
  • 0 Comments

பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்  ‘பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது. மொழிகளும் மதங்களும் வேறுப்பட்டாலும் ஒவ்வொரு மதங்களையும் மதிக்க மனிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். இதன் ஊடாக அரசியல் செய்ய பலரும் முயற்சிக்கிறார்கள். கடந்த காலங்களில் எல்லாம் இதுபோன்ற பல வரலாறுகள் காணப்படுகின்றன. […]

ஆரோக்கியம் வாழ்வியல்

மறந்தும் கூட அதிகமா குடிக்க கூடாத பானங்கள்…

  • June 2, 2023
  • 0 Comments

கோடை வெயில் நம் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மக்கள் பெரும் அவதியடைந்து வருகிறார்கள். பொதுவாக கோடை வெப்பம் நீரிழப்பு பிரச்சனையை அதிகம் ஏற்படுத்துகிறது மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அவற்றில் முக்கியமானது நீரிழப்பு பிரச்சனை. கோடை காலம் மட்டுமல்ல, எந்த பருவத்திலும் நம்மை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். அதற்கு நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீரேற்றம் ஆரோக்கியமான உடலை பராமரிக்க […]

இலங்கை

சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது இனவாதத்தை விதைப்பார்கள் – பிரசன்ன ரணதுங்க

  • June 2, 2023
  • 0 Comments

சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது அதன் பின்னணியில் உள்ள குழுக்கள் மதப்போராட்டத்திற்குத் தயாராகும்,  அதுவும் தோல்வியுற்றால் நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இன்று (2) ஆணைக்குழுவிற்கு வருகை தந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டை அராஜகம் செய்யும் இவ்வாறான குழுக்களுக்கு எதிராக யார் […]

வட அமெரிக்கா

சிப்பி உணவு தொடர்பில் கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தி

  • June 2, 2023
  • 0 Comments

கனேடியர்களுக்கு பிடித்த உணவான சிப்பி வகை உணவொன்றில் நோய்க்கிருமிகள் குறித்த எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.ஆய்ஸ்டர்ஸ் எனப்படும் சிப்பி உணவில் விப்ரியோ என்னும் நோய்க்கிருமி காணப்படும் அபாயம் குறித்து உணவு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். விப்ரியோ என்பது, கடல் நீரில் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா ஆகும். பருவநிலை மாற்றத்தால் கடலின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த விப்ரியோவின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதற்கு முன் பொதுவாக காணப்படாத இடங்களுக்கும் இந்த விப்ரியோ கிருமி பரவிவருகிறது. இந்த விப்ரியோ […]

இலங்கை விளையாட்டு

இலங்கை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி

  • June 2, 2023
  • 0 Comments

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 269 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19 பந்துகள் மீதமிருக்க நான்கு விக்கெட்டுகளை […]

ஐரோப்பா

பெர்டியன்ஸ்கில் உள்ள துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன் – 9 பேர் காயம்!

  • June 2, 2023
  • 0 Comments

பெர்டியன்ஸ்கில் உள்ள ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட துறைமுகத்தின் மீது உக்ரேனியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனின் சபோரிஜியா பகுதியில் உள்ள அசோவ் கடலில் அமைந்துள்ள துறைமுக நகரம் இன்று (02) நண்பகலில் குறிவைக்கப்பட்டதாக ரஷ்ய அதிகாரி  விளாடிமிர் ரோகோவ் கூறினார். இந்த தாக்குதலில்  ஒன்பது பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. ரஷ்ய ஆக்கிரமிப்பு ஜபோரிஜியாவில் “வி ஆர் டுகெதர் வித் ரஷ்யா” என்ற மாஸ்கோ சார்பு அமைப்பை வழிநடத்தும்  ரோகோவ், துறைமுகப் பகுதிக்கு அருகில் இருந்து சாம்பல் […]

இலங்கை

வடக்கில் மனைவிக்கு கணவன் செய்த கொடூர செயல்!

  • June 2, 2023
  • 0 Comments

கிளிநொச்சி – கோணாவில் பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு படுகாமடைந்த இளம் குடும்பப் பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிளிநொச்சி கோணாவில் மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் குடும்ப பெண் அவரது கணவரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு இரண்டு கண்கள் மற்றும் தலைப்பகுதியில் பல காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு […]

error: Content is protected !!