இந்தியா செய்தி

( update) ஒடிஸா மாநில ரயில் விபத்து : பலி எண்ணிக்கை 280 ஐக் கடந்தது!

  • June 3, 2023
  • 0 Comments

இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் 850க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய 2 ரெயில்களிலும் 132 தமிழக பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்களில்,  35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில்  விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிக்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை,  ஓமந்தூரார் மருத்துவமனை,  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 […]

பொழுதுபோக்கு

முடிவுக்கு வருகின்றதா பாக்கியலட்சுமி சீரியல்…

  • June 3, 2023
  • 0 Comments

விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ள பாக்கியலட்சுமி தொடர் விறுவிறுப்பான எபிசோட்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடரான பாக்கியலட்சுமி, குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பு செய்து வருகிறது. இந்தத் தொடர் பெங்காலியில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஸ்ரீமோயி என்ற தொடரை ரீமேக் செய்து ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் ரசிகர்களுக்கு தகுந்தபடி இந்தத் தொடரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொடரில் […]

வட அமெரிக்கா

கனேடிய இளம்பெண்ணின் கமெராவில் சிக்கிய அதிரவைக்கும் காட்சி

  • June 3, 2023
  • 0 Comments

கனேடிய இளம்பெண் ஒருவரின் கமெராவில், அரை நிர்வாணப் பெண்கள் இருவர் இறந்த மானின் உடல் ஒன்றைத் தின்னும் காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், அவர்கள் சூனியக்காரிகளாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Powell River என்னுமிடத்தில் வாழும் Corinea Stanhope (36) என்னும் இளம்பெண், தன் தோட்டத்தில் மான் ஒன்று இறந்துகிடப்பதைக் கண்டுள்ளார். விலங்குகள் ஆர்வலர்களான கொரைனியாவும் அவரது தாத்தாவும், அந்த மானை உண்ண ஏதாவது விலங்குகள் வரலாம் என்பதால், அவற்றைப் படம் பிடிக்க […]

இலங்கை

கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜை நாடு கடத்தப்படவுள்ளதாக அறிவிப்பு!

  • June 3, 2023
  • 0 Comments

கடவுச்சீட்டு மோசடி செய்ததாக குறிப்பிடப்படும் சீன நாட்டு பிரஜையை நாடு கடத்த உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்தார். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  கடந்த மாதம் நாட்டுக்கு வருகை தந்த சீன நாட்டுப் பிரஜை கடவுச்சீட்டு மோசடி செய்தார் என குறிப்பிடப்படும் விவகாரம் தொடர்பில் உரிய விசாரணை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் […]

வட அமெரிக்கா

அணு ஆயுதம் குறித்த தரவுகளை ரஷ்யாவுக்கு பரிமாற போவதில்லை – அமெரிக்கா திட்டவட்டம்

  • June 3, 2023
  • 0 Comments

அணு ஆயுதங்களை குறைப்பதற்காக ‘நியூ ஸ்டார்ட்’ New START அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் அமெரிக்கா- ரஷ்யா இடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அணு ஆயுதம் எங்கு உள்ளது, எங்கிருந்து ஏவப்படுகிறது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போன்ற தரவுகளை பகிர்வது உள்ளிட்டவை ஆகும். இதன்படி இரு நாடுகளும் தங்களுக்குள் அணு ஆயுதங்கள் குறித்த தரவுகளை பகிர்ந்து கொண்டிருந்தன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து அமெரிக்கா- ரஷ்யா இடையிலான உறவில் […]

ஆசியா

சீன மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம்! அடுத்த வாரம் அதிகரிக்கும் அபாயம்

  • June 3, 2023
  • 0 Comments

சீனாவில் மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம் அடுத்துவரும் சில வாரங்களுக்குக் கடுமையாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2 மாதங்களாகச் சீனாவில் மக்கள் வரலாறு காணாத வெப்பத்தை அனுபவித்துவருகின்றனர். வீடுகளில் வெப்பத்தைச் சமாளிக்க மக்கள் குளிர்சாதன இயந்திரங்களை அதிகமாகப் பயன்படுத்திவருகின்றனர். இதனால் சீனாவின் தெற்கில் மின்சார விநியோகம் அதிகரித்து மின்கம்பங்களில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. வணிகத் தளங்களிலும் குளிர்சாதன இயந்திரங்கள் வழக்கத்துக்கு மாறாக நீண்டநேரம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அவற்றுக்கான மின்சாரத் தேவையும் வெகுவாக அதிகரித்துள்ளது. அடுத்துவரும் சில […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் புன்னகைக்கும் நீர்நாய் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

  • June 3, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் புன்னகை நீர்நாய் ஒன்று பிரபலமடைந்துள்ளது. ஏலி (Ely) நகரின் River Cam நதிக்கரையில் நீர்நாய் குளிர்காயும் படங்களை ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தார். குளிர்காய்வதில் அது காட்டிய இன்பம் இணையவாசிகளைக் கவர்ந்தது. திங்கட்கிழமை Sophie Bell என்ற பெண் குடும்பத்துடன் படகில் பயணம் மேற்கொண்டார். வட்டாரத்தில் நீர்நாய் இருப்பதாகச் சுற்றுலாக் குழுவினர் கூறியிருந்தனர். அதைப் பார்ப்பதற்குச் சென்ற குடும்பம் நீர்நாயைக் கரையில் படுத்துக் கிடப்பதைக் கண்டுபிடித்ததாக குறிப்பிட்டுளு்ளனர். அப்போது நீர்நாயின் முகத்தில் புன்னகை இருந்தது. […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம்!

  • June 3, 2023
  • 0 Comments

மெல்போர்னில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரெலிய நேரப்படி இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் மார்னிங்டன் பகுதியில் 2.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது பூமிக்குள் சுமார் 08 கிலோமீற்றர் ஆழத்தில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. கடந்த 29ம் திகதி இரவு 11.40 மணியளவில் சன்பரி பகுதியை மையமாக கொண்டு 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது போரோனியா பகுதிக்கு அருகே கடந்த 30ம் […]

பொழுதுபோக்கு

அம்மா வயது நடிகைக்கு அம்மாவாகும் சமந்தா?

  • June 3, 2023
  • 0 Comments

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த சமந்தா இப்போது பாலிவுட்டையும் அசரடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் வெப் சீரிஸ் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தது. தி பேமிலி வெப் சீரிஸில் சமந்தாவின் கேரக்டர் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல், சில காட்சிகளில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கே சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் ராஜ் & டிகே இயக்கும் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்து வருகிறார் சமந்தா. […]

இலங்கை

இலங்கையில் நாளை நள்ளிரவு முதல் விலை குறையும் லிட்ரோ எரிவாயு

  • June 3, 2023
  • 0 Comments

இலங்கையில் நாளை நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் இதனை அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 300 ரூபாய்க்கும் அதிக தொகையில், குறைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினம், விடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!