அரசாங்கத்திற்கு எதிராக அரசியல்வாதிகள் தான் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் -பிரசன்ன ரணதுங்க
அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்கள் எவரும் போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள். அரசியல்வாதிகள் மாத்திரமே போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் இன்று (03) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் எட்டாம் திகதி நாட்டு மக்களை ஒன்றுத்திரட்டுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் போராட்டத்தை நாங்களும் எதிர்பார்த்த வண்ணம் […]













