இலங்கை

இலங்கையில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்க நடவடிக்கை!

  • June 5, 2023
  • 0 Comments

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். நுவரெலியா கிரேண்ட ஹோட்டலில் நடைபெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவிகள் வழங்குவதை தடுப்பதற்காக காணப்படும் சட்டதிட்டங்களின் இடைவெளிகளை விரைவில் கண்டறிய வேண்டியது அவசியமாகும். அவ்வாறு செய்யத் தவறும் […]

இந்தியா

ஒடிசா ரயில் விபத்து : பிணவறையில் உயிருடன் இருந்த மகனை மீட்ட தந்தையின் பாசப் போராட்டம்!

  • June 5, 2023
  • 0 Comments

மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 280 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் ஹவுராவில் கடை வைத்திருக்கும் பிஸ்வஜித் என்பரும் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது. இதனை நம்ப மறுத்த அவருடைய தந்தையான ஹெலராம் மாலிக், சுமார் 230 கிமீ தூரம் பாலசோருக்குப் பயணித்து பிணவறையில் மயங்கிய நிலையில், இருந்த தனது மகனை மீட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

உலகம்

நைஜீரியாவில் ஆயுததாரிகளின் தாக்குதலில் 30 பேர் பலி

நைஜீரியாவில் 6 கிராமங்கள் மீது கடந்த வார இறுதியில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரகா எனும் கிராமத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர் என பொலிஸ் பேச்சாளர் அஹ்மத் ருஃபாய் இன்று தெரிவித்துள்ளார் பிலிங்கவா கிராமத்தில் 7 பேரும் ஜபா கிராத்தில் அறுவரும் தபாகி கிராமத்தில் நால்வரும் ரகா துஸ்தே கிராமத்தில் மூவரும் சலாவேவா கிராமத்தில் இருவரும் கொல்லப்பட்டனர் என  அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், 36 பேர் கொல்லப்பட்டதாகவும், 36 […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 160 ஆண்டுகள் பழமையான தேவாலயத்திற்கு மின்னலால் நேர்ந்த கதி (வீடியோ)

  • June 5, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று மின்னல் தாக்கியதில் தீ விபத்துக்குள்ளாகி உள்ளது. அமெரிக்காவின் மாசசூசெட்ஸின் ஸ்பென்சரில் உள்ள முதல் காங்கிரேஷனல் யுனைடெட் என்ற 160 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் மின்னல் தாக்கி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேவாலயத்தில் பொருத்தப்பட்டு இருந்த அபாய கருவியின் எச்சரிக்கை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து தீயணைக்கும் பணியில் இறங்கினர்.ஆனால் அதற்குள் தீ தேவாலயத்தின் தரை தளம் முதல் கோபுரம் வரை பரவியது, இதில் தேவாலயத்தின் மேல் கோபுரம் […]

இலங்கை

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்கள் கையளிப்பு!

  • June 5, 2023
  • 0 Comments

புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் பலருக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட நீதிபதிகள் டி. பிரபாகரன், பி.கே. பரண கமகே, பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே ஜயதிலக மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி கே.டி.ஒய்.எம். உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நயனி நிர்மலா கஸ்தூரிரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

கவர்ச்சி நாயகி சன்னி லியோனின் புதிய வீடியோ… அவரே வெளியிட்டுள்ளார்….

  • June 5, 2023
  • 0 Comments

சன்னி லியோன் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் விடுமுறையை கழிக்கும் பொருட்டு அவர்கள் சென்ற இடங்களை வீடியோவுடன் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார். அவர் தனது வீடியோவைப் பகிர்ந்தவுடன், எல்லா தரப்பிலிருந்தும் விருப்பங்களும் கருத்துகளும் கொட்டின. அவரது ரசிகர்களில் ஒருவர் ‘நல்ல குடும்பம்’ என்று எழுதினார், மற்றொருவர், ‘கிழக்கு அல்லது மேற்கு சன்னி லியோன் சிறந்தவர்’ என்று கூறினார். மற்றவர்கள் சிவப்பு இதய இமோஜிகளை இடுகையில் கைவிட்டனர். சன்னி இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குனர் […]

பொழுதுபோக்கு

ரஜினியின் எந்திரன் 3ஆம் பாகம் வெளிவருமா?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படம் பெரிய வெற்றி பெற்றது. இதில் வசீகரன், சிட்டி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது. இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து. இந்த நிலையில் ரஜினியை வைத்து எந்திரன் படத்தின் மூன்றாம் பாகத்தை 3.0 என்ற பெயரில் படமாக்க ஷங்கர் ஆலோசித்து வருவதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. எந்திரன் […]

ஆசியா

அலுவலக நேரத்தின் போது கழிவறை சென்றதற்காக பதவிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்!

  • June 5, 2023
  • 0 Comments

சீனாவில் 6 மணிநேரம் அலுவலக கழிப்பறையில் நேரத்தை செலவிட்டதால் 26 ஆண்டுகளாக வேலை செய்த ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சீனாவைச் சேர்ந்தவர் வாங்(35). 26 ஆண்டுகளாக அங்குள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அவருக்கு வயிற்றில் சிறு சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக அடிக்கடி கழிப்பறை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உடல் நிலையைக் கருத்தில் எடுத்துக் கொண்ட நிர்வாகம் அதைப் பெரிதாக எடுத்துக் […]

இலங்கை

கோடிக்கணக்கான தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டு பிரஜை

எட்டு கோடி ரூபாயிக்கும் அதிக பெறுமதியான தங்கத்தினை நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்த வெளிநாட்டு பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த குறித்த சந்தேகநபர் 4.611 கிலோ கிராம் தங்கத்தினை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவர முயற்சித்துள்ளார். இலங்கை சுங்கத்தின் இரத்தின, ஆபரண மதிப்பீட்டு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதான குறித்த பிரான்ஸ் பிரஜை இதற்கு முன்னர் பல முறை இலங்கைக்கு […]

இலங்கை

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு கஜேந்திரகுமாருக்கு உத்தரவு!

  • June 5, 2023
  • 0 Comments

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளை (06)  ஆஜராகுமாறு தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,   நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிப்பேன் என தெரிவித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். சபாநாயகரை தொடர்புகொள்ள முயன்றேன் தொடர்புகொள்ள முடியவில்லை பிரதிசபாநாயகருக்கு இது குறித்து அறிவித்துள்ளேன் எனஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.    

error: Content is protected !!