நைஜீரியாவில் ஆயுததாரிகளின் தாக்குதலில் 30 பேர் பலி

நைஜீரியாவில் 6 கிராமங்கள் மீது கடந்த வார இறுதியில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரகா எனும் கிராமத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர் என பொலிஸ் பேச்சாளர் அஹ்மத் ருஃபாய் இன்று தெரிவித்துள்ளார்
பிலிங்கவா கிராமத்தில் 7 பேரும் ஜபா கிராத்தில் அறுவரும் தபாகி கிராமத்தில் நால்வரும் ரகா துஸ்தே கிராமத்தில் மூவரும் சலாவேவா கிராமத்தில் இருவரும் கொல்லப்பட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், 36 பேர் கொல்லப்பட்டதாகவும், 36 சடலங்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை தாம் புதைத்ததாகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கப்பம் வழங்க மறுத்ததால் இத்தர்ககுதல்கள் நடத்தப்பட்டதாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 26 times, 1 visits today)