ஆசியா

சீனாவிற்கு விஜயம் செய்யும் முதல் அமெரிக்க அதிகாரி பிளிங்கன்!

  • June 18, 2023
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் – சீனாவிற்கும் இடையில் நிலவிவரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று (18) சீனாவிற்கு பயணித்துள்ளார். சீனாவில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் அவர்  அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இடம்பெறவேண்டிய இந்த விஜயம்  சீனாவின் உளவு பலூன் விவகாரத்தினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 2021 ஜனவரியில் ஜனாதிபதி ஜோ பிடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு சீனாவிற்கு விஜயம் செய்யும் முதல் அமெரிக்க அரசாங்க அதிகாரி பிளிங்கன் […]

வட அமெரிக்கா

விரைவில் வெளிவரவுள்ள ஸ்மார்ட் டி.விகளுக்கான ட்டுவிட்டர் வீடியோ செயலி ; எலான் மஸ்க்

  • June 18, 2023
  • 0 Comments

எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் ட்விட்டரை தன்வசப்படுத்தி கொண்டார். அதன் உரிமையாளரானதும் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். உயர் பதவி வகித்த ஊழியர்கள் உள்பட பலரை பணியில் இருந்து நீக்கினார். ட்விட்டருக்கு கட்டண தொகை செலுத்தும் சந்தாதாரர் வசதியையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், ட்விட்டரில் ராபின்சன் என்ற கணக்கின் பெயர் கொண்ட பயனாளர் ஒருவர், ஸ்மார்ட் டி.விகளுக்கான ட்விட்டர் வீடியோ செயலி ஒன்று உண்மையில் எங்களுக்கு தேவையாக உள்ளது. ட்விட்டரில் ஒரு மணிநேரம் ஓட கூடிய […]

ஆசியா

நடுக்கடலில் தீ பற்றி எரிந்த பயணிகள் படகு

  • June 18, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் நாட்டின் சிக்யூஜொர் மாகாணத்தில் இருந்து பொஹல் மாகாணத்திற்கு இன்று பயணிகள் படகு சென்றுகொண்டிருந்தது. அந்த படகில் 120க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது படகில் திடீரென தீ பிடித்தது. தீ மளமளவென படகு முழுவதும் பரவியது. இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தங்கள் உயிரை காப்பாற்ற முயற்சித்தனர். இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் படகில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 120 பேர் பயணித்த படகில் தீ விபத்து […]

ஐரோப்பா

பிரான்ஸில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த ஊழியருக்கு நேர்ந்த பரிதாப நிலை!

  • June 18, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். தலைநகர் பாரிசில் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள du bassin d’Austerlitz ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு கட்டுமானப்பணியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஊழியர் ஒருவர் மீது கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனம் ஒன்று மோதியுள்ளது. பின்பக்கமாகச் சென்ற வாகனத்துக்குள் சிக்குண்டு ஊழியர் பலியாகியுள்ளார். உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அத்துடன், மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் […]

இலங்கை

இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவுகள் வெளியானது

  • June 18, 2023
  • 0 Comments

இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவுகள் வெளியானது இலங்கையில்குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவு 76,124 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய திட்டத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டுக்கான தரவுகளின் படி இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பீடத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவு 63,820 ரூபாவாக இருந்தது. குறித்த அறிக்கைக்கு அமைய, குடும்பம் ஒன்று, மாதாந்த […]

பொழுதுபோக்கு

ஒரே ஒரு போஸ்டர்… ஒட்டுமொத்த மாமன்னன் டிரெய்லரும் சைலன்டாகி விட்டது!!

  • June 18, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜின் ட்வீட்டும் அதை தொடர்ந்து வெளியான லியோ போஸ்டரும் மாமன்னன் டிரெய்லர் டிரெண்டிங்கை டோட்டலாக காலி செய்தது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தின் டிரெய்லர் இசை வெளியீட்டு விழாவில் வெளியாகாமல் நேற்று பிரத்யேகமாக வெளியானது. இந்த நிலையில், நடிகர் விஜய் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களில் […]

ஐரோப்பா

பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • June 18, 2023
  • 0 Comments

பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளுக்கு வறட்சி எச்சரிக்கையே விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, Paris, Hauts-de-Seine, Seine-Saint-Denis மற்றும் Val-de-Marne ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இல் து பிரான்சுக்குள் கடந்த மே மாதத்தில் இருந்து மழை வீழ்ச்சி குறைந்துள்ளதாலும், அதிக வெப்பம் நிலவுவதாலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் நான்கு வரையுள்ள எச்சரிக்கை பிரிவுகளில் இது முதலாவது கட்ட எச்சரிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

பொழுதுபோக்கு

விஜயை பார்க்க முடியாமல் அழுத மாணவர்கள்!! தரமான செயல்…

  • June 18, 2023
  • 0 Comments

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார். சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல் மூன்று இடங்களை பிடித்த சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நடந்த இடம் அரசியல் காட்சி மாநாடு நடைபெறும் இடம் […]

இலங்கை

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய சட்டம் – வெளிவந்த முக்கிய தகவல்

  • June 18, 2023
  • 0 Comments

இலங்கையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சிக்கலான சட்டங்களுக்குப் பதிலாக இந்த வருட இறுதிக்குள் முதலீடுகள் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அடுத்த வருடம் முதல் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள சிக்கலான நிலைமைகள் நீக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான அனுமதிப்பத்திரங்களைப் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் நடந்த விபரீதம்

  • June 18, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் எஸன் நகரத்தில் 5வது மாடியில் இருந்து 15 வயது சிறுமி ஒருவர் கீழே விழுந்துள்ளார். ஜெர்மனியின் எஸன் நகரத்தில் 5 ஆவது மாடியில் இருந்து 15 வயதுடைய சிறுமியானவர் கீழே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 13ஆம் திகதி குறித்த சிறுமி அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவர் நிலத்தில் விழுந்ததால் மிகவும் படுங்காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது. இதேவேளையில் பொலிஸார் இச்சமபவம் […]

error: Content is protected !!