வடக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன – சாள்ஸ்!
வடக்கிலே ஏறக்குறைய 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், வடக்கிலே நாங்கள் ஏறக்குறைய 194 பாடசாலைகளை மூடியிருக்கின்றோம். அதாவது பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணமென நாம் ஆராய்ந்த போது கிராமப்புறங்களிலிருந்து மாணவர்கள் நகரபுறங்களை நோக்கி செல்கின்றார்கள். இரண்டாவது காரணம் பிறப்பு விகிதம் குறைவு, […]













