பொழுதுபோக்கு

விவாகரத்து ஆன குஷியில் குத்தாட்டம் போட்ட சர்ச்சை நடிகை..

  • June 21, 2023
  • 0 Comments

ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராக்கி சாவந்த் பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருகின்றார். ராக்கி சாவந்துக்கு பெரும்பாலும் கவர்ச்சி வேடங்கள் தான் சினிமாவில் கிடைத்தன. இவர் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த கம்பீரம் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். நடிகை ராக்கி சாவந்த் 2008ம் ஆண்டு தனக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க சுயம் வரம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி பரபரப்பை கிளப்பினார். பின்னர் அந்நிகழ்ச்சியின் […]

பொழுதுபோக்கு

போர் தொழில் படத்திற்காக அசோக் செல்வன் வாங்கிய சம்பளம் எவ்ளோ இவ்வளவா! அதிர்ச்சியில் ரசிகர்கள்

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ’போர் தொழில்’ . இத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல ஆதரவைப் பெற்றதால் அதிக திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். சுமார் ரூ 6 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூபாய் 28 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது. இதில் பொலிஸ் அதிகாரிகளாக அசோக் செல்வன், சரத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். […]

ஐரோப்பா

ககோவ்கா அணை உடைந்ததில்  41 பேர் உயிரிழப்பு – ரஷ்யா!

  • June 21, 2023
  • 0 Comments

ககோவ்கா அணை உடைந்ததில்  41 பேர் கொல்லப்பட்டதாகவும், 121 பேருக்கு சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும்,  ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலை அமைச்சர் கூறியுள்ளார். விளாடிமிர் புடின் தலைமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது , அலெக்சாண்டர் குரென்கோவ் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதியிலிருந்து 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டதாகக் கூறினார். டினிப்ரோ ஆற்றின் ரஷ்ய ஆக்கிரமிப்புக் கரையில் உள்ள அணை ஜூன் 6 அன்று உடைந்ததில் குறைந்தது 52 பேர் இறந்ததாக முந்தைய அறிக்கைகள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவும் உக்ரைனும் அழிவுக்கு ஒருவரையொருவர் […]

ஐரோப்பா

பணம் கொடுத்து இந்திய குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யக் கூறிய இங்கிலாந்து ஆசிரியர்!

  • June 21, 2023
  • 0 Comments

இளவரசர் வில்லியமின் மகனுக்கு கல்விக் கற்றுக்கொடுத்த ஆசிரியர் மீது, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ய இந்திய இளைஞர்களுக்கு  பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த மேத்யூ ஸ்மித் என்ற ஆசிரியர்,  இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு பணம் கொடுத்து குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் படி கேட்டுக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மேத்யூ கடந்த நவம்பர் மாதம் 2022 இல் தேசிய குற்றவியல் ஏஜன்சியால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட […]

ஐரோப்பா

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

  • June 21, 2023
  • 0 Comments

உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த வாரத்தின் பிற்பகுதியில், எழுத்துப்பூர்வ நடைமுறையின் மூலம் தடைகள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் போது, எவ்வாறான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விவரங்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப். 24, 2022 அன்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது படைகளை உக்ரைனுக்குள் அனுப்ப உத்தரவிட்டதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது 10 சுற்று தடைகளை விதித்துள்ளது. இதனால் ரஷ்யா மிகப் […]

இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த அல்லிராஜா சுபாஸ்கரன்: கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை லைக்கா (Lyca) குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று முன்தினம் (19) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இச் சந்திப்பு தொடர்பில் பத்திரிகையொன்று செய்தி வௌியிட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அல்லிராஜா சுபாஸ்கரன் வலியுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அதன் […]

இலங்கை

Dupuy de Lôme’ கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

பிரெஞ்சு கடற்படைக் கப்பலான Dupuy de Lôme இன்று (ஜூன் 21, 2023) முறையான விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். Dupuy de Lôme என்பது 102.40மீ நீளமுள்ள மின்காந்த ஆராய்ச்சிக் கப்பலாகும், இதில் 107 பேர் கொண்ட குழுவினர் உள்ளனர். இந்த கப்பல் தளபதி அகஸ்டின் பிளான்செட் என்பவரால் வழிநடத்தப்படுகிறது. அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் போது, Dupuy de Lôme இன் […]

இந்தியா

நாட்டின் பிரதமர் பெயரை அறிந்திருக்காததால் மணமகனுடன் உறவை முறித்துக் கொண்ட மணமகள்!

  • June 21, 2023
  • 0 Comments

நாட்டின் பிரதமர் பெயரை கூட மணமகன் அறிந்திருக்காததால், அவருடனான திருமண உறவை மணமகள் முறித்துக் கொண்டார். இதற்கிடையே புது மாப்பிள்ளையின் தம்பியுடன் அந்தப் பெண்ணுக்கு மீண்டும் திருமணம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் காஜிபூர் அடுத்த நசிர்பூர் கிராமத்தில் வசிக்கும் சிவசங்கர் ராம் என்பவருக்கும், கரண்டாவைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. குடும்ப பழக்க வழக்கத்தின்படி திருமண ஊர்வலம் நடந்தது. மணமகனின் வீட்டிற்கு மணப்பெண்ணை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு […]

இந்தியா

நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு – திருமாவளவன்!

  • June 21, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், விஜயின் செயற்பாடுகள் அமைந்திருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ,  மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கிய விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,  பொது வாழ்க்கைக்கு வரக் கூடியவர்கள் எந்த பருவத்தில் வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக […]

தமிழ்நாடு

தொலைபேசி மீதிருந்த மோகத்தால் மாணவி செய்த செயல் ; காப்பாற்றிய பொலிஸார்!

  • June 21, 2023
  • 0 Comments

தமிழகம், காரைக்குடியில் செல்போனுக்காக 2வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற 17 வயது சிறுமியை பொலிஸார் கடும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைஞர் சாலையில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன். இவரது 17 வயது மகள் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லுாரிக்கு செல்ல இருந்தார்.மாணவி எந்நேரமும் மொபைலில் மூழ்கியிருப்பதைகண்ட தந்தை , கடுப்பாகி மொபைலை பறித்து வைத்த நிலையில் மகள் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து […]

error: Content is protected !!