விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர ஒருவருக்கு விளக்கமறியல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவா் இந்தியாவில் தலைமறைவாகியிருந்தபோது, இலங்கை அரசினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலின் பிரகாரம், சர்வதேச காவல்துறையினாினால் கைது செய்யப்பட்டு, நாடுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் விடுத்திருந்த ஆலோசனைக்கு அமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர், அவரை 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்தியதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தொிவித்திருந்தனா். […]













