இலங்கை

மலேசியா – இலங்கைக்கு இடையில் விமான சேவைகளை அதிகரிக்க இணக்கம்!

  • June 22, 2023
  • 0 Comments

மலேசியா மற்றும் இலங்கைக்கிடையில் விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்த்தன விடுத்த கோரிக்கைக்க இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகள் இணக்கம் தெரிவித்துள்ளார். இதன்படி மேலும் இரு விமான சேவை நிறுவனங்கள் கோலாலம்பூர் மற்றும் கொழும்புக்கிடையில் விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவுக்கு வருடாந்தம் 70 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும் மேலதிக விமானங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களில் சில தரப்பினரை இலங்கைக்கு ஈர்க்க முடியும் எனவும் மலேசிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வட அமெரிக்கா

திறமையான இந்திய பணியாளர்களுக்கு விசாக்களை எளிமையாக்க அமெரிக்க அரசு திட்டம்

  • June 22, 2023
  • 0 Comments

அமெரிக்க அரசு, ஒவ்வோர் ஆண்டும் திறமையான வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிறுவனங்கள் வழங்குவதற்கான 65 ஆயிரம் விசாக்களை கிடைக்க அனுமதி அளிக்கிறது. இதுதவிர, கூடுதலாக 20 ஆயிரம் விசாக்களை பட்ட மேற்படிப்பு படித்த பணியாளர்களுக்கு அரசு வழங்குகிறது. 2022ம் நிதியாண்டின்படி, 4.42 லட்சம் எச்-1 பி விசாக்களை வழங்கியதில் 73 சதவீதம் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில், இரு நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு உறவை […]

இலங்கை

குப்பைத்தொட்டியில் வீசியெறியப்பட்ட குழந்தை! பொலிஸார் விசாரணை

குப்பைத்தொட்டியில் குழந்தையொன்றை வீசியெறிந்து கொலை செய்ய முயற்சித்த பெண் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 16 ஆம் திகதி தம்புத்தேகம பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். பின்னர் 20 ஆம் திகதி குழந்தை குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட நிலையில், பொது மக்களின் தகவலுக்கமைய பொலிஸாரால் ;மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டுள்ள குழந்தை தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச் செயல் தொடர்பில் சந்தேகநபரின் தாயாரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உலகம் வட அமெரிக்கா

அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கி … 4 நாட்களாக தொடரும் தேடுதல் பணி

  • June 22, 2023
  • 0 Comments

டைடானிக் கப்பலை பார்வையிடுவதற்காக 5 கோடீஸ்வர்ர்களை அயைத்து சென்று மாயமான நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் தீர்ந்து வரும் நிலையில் தேடுதல் பசிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுகிழமை அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கியை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு கடற்படையினர் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் 4 நாடகளாக தேடிவருகின்றனர். நீர்மூழ்கி கப்பல்கள் செல்ல முடியாத இடத்தில் கேமரா பொருத்தப்பட்ட ரோபோக்கள் மூலம் தேடுதல் பணிகள் நடைபெறுகின்றன. கடலுக்கடியில் ஏற்படும் சத்தங்களை கண்டுபிடிப்பதற்காக ஆங்காங்கே போடப்பட்ட மிதவைகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக […]

பொழுதுபோக்கு

அட்ராசக்க… வொண்டர் வுமனுக்கே வில்லியான பாலிவுட் குயின் ஆலியா பட்..

  • June 22, 2023
  • 0 Comments

ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளை தொடர்ந்து ஹாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார் நடிகை ஆலியா பட். ஹாலிவுட்டில் நடிகை பிரியங்கா சோப்ரா வில்லியாக டுவைன் ஜான்சனின் பேவாட்ச் படத்தின் மூலம் அறிமுகமானார். அவரைப் போலவே தற்போது நடிகை ஆலியா பட்டும் வில்லியாக வொண்டர் உமனாக நடித்து அசத்திய நடிகை கால் கடோட்டின் புதிய படத்தில் நடித்துள்ளார். ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தின் அட்டகாசமான டிரெய்லர் வெளியாகி உலக ரசிகர்களை மிரட்டி உள்ளது. […]

உலகம்

வாழ்வாதாரத்தின் அடிப்படையில் மக்கள் சிறப்பாக வாழ தகுதியான நகரங்கள்!

  • June 22, 2023
  • 0 Comments

2023 இல் மக்கள் சிறப்பாக வாழக்கூடிய நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி  வியன்னா,  மக்கள் வாழக்கூடிய நகரங்களில் சிறந்த நகரமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் வெளியிட்டுள்ள ஆய்வின் படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ஸ்திரத்தன்மை, கலாச்சாரம், பொழுதுபோக்கு நம்பகமான உள்கட்டமைப்பு மற்றும் முன்மாதிரியான கல்வி மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட நகரத்தின் வாழ்வாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வியன்னா பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து  டென்மார்க்கின் கோபன்ஹேகன் இரண்டாவது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் […]

ஐரோப்பா

இளம்பெண்ணை அடிமையாக்கி பலருக்கு விருந்தாக்கிய விவகாரம்; ஜேர்மன் பெண்ணுக்கு தண்டனை விதிப்பு

  • June 22, 2023
  • 0 Comments

இளம்பெண் ஒருவரை அடிமையாக்கி, தன் கணவர் உட்பட பலருக்கு விருந்தாக்கிய ஜேர்மன் பெண் மீதான வழக்கில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் நாட்டவரான Nadine K என்னும் பெண், யாஸிடி இன இளம்பெண்ணான Naveen al K (22) என்பவரை அடிமையாக்கி, தன் கணவர் உட்பட பலருக்கு விருந்க்க உதவியாக இருந்துள்ளார். Nadine, 2014ஆம் ஆண்டு, ஜேர்மனியிலிருந்து தன் கணவனுடன் சிரியாவுக்குச் சென்று IS அமைப்புடன் இணைந்து அங்கு நான்கு ஆண்டுகள் இருந்துள்ளார்.பின்னர் அவரது குடும்பம் ஈராக்குக்கு […]

இந்தியா

பா.ஜனதாவின் சார்பு அணிகளாக சி.பி.ஐ. அமலாக்கத்துறை செயல்படுகின்றன! உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

பா.ஜனதாவின் சார்பு அணிகளாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை செயல்படுகின்றன என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகை தனியார் கல்லூரி மைதானத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகை மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்ததாவது, அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் […]

இலங்கை

யாழ்- வல்லை பகுதியில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்

  • June 22, 2023
  • 0 Comments

யாழில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் வியாழக்கிழமை இன்று (22 )மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வல்லை – தொண்டமானாறு வீதியில் உள்ள வெளியில் சடலம் ஒன்று காணப்படுவதாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்படுகிற நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஐரோப்பா

ரஷ்யாவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான வாகனங்கள் : 8 பேர் பலி!

  • June 22, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் தாகெஸ்தான் பகுதியில் பயணிகள் பேருந்து, டிரக் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும், உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மாஸ்கோவிலிருந்து தெற்கே சுமார் 1,500 கிலோமீட்டர் (925 மைல்) தொலைவில் உள்ள காசாவ்யுர்ட் நகருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்துடன் மேற்படி வாகனங்கள் மோதியுள்ளன. விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!