இலங்கை

ஐந்து வருடத்தில் 17 பில்லியன் கடன்களை மறுசீரமைக்க எதிர்பார்ப்பு – ஜனாதிபதி!

  • June 27, 2023
  • 0 Comments

இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன்களில் ஐந்து வருடங்களில் 17 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளதாக,  ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி மொத்த வெளிநாட்டு கடன்களான 41.5 பில்லியன் டொலர்களில் 17 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டு கடனும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி […]

இலங்கை

விடுமுறை நாட்களில் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

  • June 27, 2023
  • 0 Comments

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தை சனிக்கிழமை (ஜூலை 01) காலை 9.30 மணிக்கு கூட்டுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். கடன் மறுசீரமைப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதால், கொழும்பிற்கு வெளியே பயணிக்க வேண்டாம் என ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே   கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நாளைய தினம் (28) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அது வெள்ளிக்கிழமை (30) பாராளுமன்றத்திலும் பொது நிதிக் குழுவின் (COPF) முன்னிலையிலும் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க […]

இலங்கை

மடு- 2ம் கட்டை பகுதியில் கத்தி முனையில் கொள்ளை சம்பவம்..!

  • June 27, 2023
  • 0 Comments

மடு பொலிஸ் பிரிவில் உள்ள மடு 2ஆம் கட்டை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை(26)  இரவு நேர ஆராதனை யை முடித்துக் கொண்டு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிறிஸ்தவ மத போதகர் ஆமோஸ் என்பவரின் மோட்டார் சைக்கிளை இடை மறித்த நபர்கள் அவர்களிடம் இருந்த பெறுமதியான பொருட்களை கத்தி முனையில் பறித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து கிறிஸ்தவ மத போதகர் ஆமோஸ் மேலும் தெரிவிக்கையில், மடு 2ஆம் கட்டை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை(26) […]

இலங்கை

நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு : வவுனியாவில் மக்கள் போராட்டம்

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா-ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது. இன்று (27.06) காலை 9.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் அவ் வீதியூடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு […]

இலங்கை புகைப்பட தொகுப்பு

ஐந்து தலை நாகம் படமெடுக்க கிழக்கிலங்கையில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கின்றாள் நாககன்னி…

  • June 27, 2023
  • 0 Comments

திருகோணமலை – அலஸ்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தான்தோன்றி ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயம் மிகவும் சக்திவாய்ந்ததாகும். இவ்வாலயத்தின் வருடாந்த கும்பாபிஷேகம் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதாவது 27 அடி உயரமான நாகம்மன் சிலை இலங்கையின் திருகோணமலையில் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளதாக பிரதம குரு தெரிவித்தார். ஐந்து தலை நாகம் படமெடுப்பதும், அம்மன் நாகத்தின் மேல் அமர்ந்து காட்சி தருவதும் பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாகவும், கண்கொள்ளா காட்சியாகவும் உள்ளது.    

இலங்கை

கட்டுநாயக்கவில் 15 பெரிய தங்க ஜெல்களுடன் கைதான ஐவர்

  • June 27, 2023
  • 0 Comments

15 பெரிய தங்க ஜெல்களை தயாரித்து மலக்குடலில் மறைத்து வைத்திருந்த 05 வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியேறும் முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். என்று சுங்க ஊடகப் பேச்சாளரும், பிரதி சுங்கப் பணிப்பாளருமான .சுதத்த சில்வா தெரிவித்தார். இவர்கள் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட 05 வர்த்தகர்களாவர்.இன்று பிற்பகல் 01.55 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E.1176 […]

இலங்கை

போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் குச்சவெளி பிரதேச மக்கள்

  • June 27, 2023
  • 0 Comments

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கள்ளம்பத்தை பகுதியில் உள்ள மக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர். தமது கிராமத்திலிருந்து நோயாளர்களை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்வதற்கு 1500 ரூபாய் பணம் கொடுத்தும் சாரதிகள் உரிய நேரத்துக்கு வராத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இக்கிரமத்தில் அதிகளவிலான வயோதிபர்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் மாதத்திற்கு இரண்டு முறை கிளினிக் செல்ல வேண்டியுள்ளதாகவும் செல்வதற்கு போக்குவரத்து இல்லாமையினால் அவதிப்பட்டு வருவதாகவும் அக்கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர். அரசாங்கத்தினால் அரச […]

இலங்கை

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை மன்னார் மடு திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் உட்பட அழைக்கப்பட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக இராணுவம்,பொலிஸ் அதிகாரிகள் […]

வட அமெரிக்கா

ஆற்றில் கை கழுவ முற்பட்ட மீனவருக்கு நேர்ந்த கதி!

  • June 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நேசனல் எவர்கிளேட்ஸ் என்ற பெயரில் பூங்கா ஒன்று உள்ளது. இதில், மீனவரான நபர் ஒருவர் தனது நண்பர் மைக்கேல் ரஸ்சோ என்பவருடன் ஆற்றில் படகு சவாரி செய்து உள்ளார். அப்போது, ஆற்று நீரில் அந்நபர் கையை கழுவ முயன்று உள்ளார். ஆனால், உடனிருந்த அவரது நண்பர் மைக்கேல் ரஸ்சோ, ஆற்றில் சுறா மீன்கள் இருக்கும். அதனால் தாக்கப்பட கூடிய ஆபத்து உள்ளது என கூறி எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதனை அந்த நபர் […]

தமிழ்நாடு

ரத்தம் வழிந்த கத்தியோடு சாலையில் அலறிபடி ஓடி வந்த வாலிபர்..!

  • June 27, 2023
  • 0 Comments

நான் கொலை செய்து விட்டேன்’ என்று ரத்தம் வழிந்த கத்தியோடு சாலையில் அலறி கத்திய வாலிபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்தவர் கொளஞ்சி (45). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் அவினாஷ் (22). இவரும் கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக கொளஞ்சியும், அவினாஷும் சேர்ந்து கட்டிட வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு தரமணியில் உள்ள லிங்க் ரோடு அருகே அவினாஷ் […]

error: Content is protected !!