ஐரோப்பா

ஐ.நாவின் குற்றச்சாட்டை மறுக்கும் ரஷ்யா!

  • June 28, 2023
  • 0 Comments

ரஷ்யா உக்ரைனில் நிகழ்த்தி வரும் போரில், குழந்தைகள் மீது மேற்கொண்ட தாக்குதல் குறித்து ஐ.நா மனித உரிமை மீறல் குற்றசாட்டை சுமத்தியுள்ளது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்களை ரஷ்யா மறுத்துள்ளது.  இது குறித்து நேற்று (செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்ட அறி்க்கையொன்றில், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் போர் தொடங்கியதில் இருந்து 800இற்கும் மேற்பட்ட பொதுமக்களை ரஷ்யா கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 136 குழந்தைகள் உள்ளடங்குவதாகவும், 518 குழந்தைகள் காயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்களை மொஸ்கோ நிராகரித்துள்ளது. இது […]

இலங்கை

மட்டக்களப்பில் நெல் விலையினை உறுதிப்படுத்துமாறு கோரி விவசாயிகள் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளினால் நெல் விலையினை உறுதிப்படுத்துமாறு கோரி இன்று மாபெரும் ஆர்ப்பாட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடைகள் ஆரம்பித்துள்ள நிலையில் நெல் விலையினை அரசாங்கம் தீர்மானித்து அதனை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் நெல் கொள்வனவினை மேற்கொள்ளுமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரிலிருந்து ஊர்வலமாக விவசாயிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்று மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கிலோ நெல்லுக்கு 120ரூபா தீர்மானிக்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல் கொள்வனவில் […]

பொழுதுபோக்கு

துல்கர் சல்மானின் “King of Kotha” திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் வெளியானது!!

  • June 28, 2023
  • 0 Comments

Zee Studios மற்றும் Wayfarer Films’ வழங்கும் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு அறிவிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இறுதியாக தற்போது இப்படத்தின் இரத்தம் தெறிக்கும், அதிரடியான டீசரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். டீசரில் கோதா மக்கள் அரசனைக் காண்பது போல் மொத்தமாக ஒதுங்கி துல்கர் சல்மான் காருக்கு வழி விடுகின்றனர். ஸ்டைலான பழம்பெருமை மிகுந்த மெர்சிடிஸ் காரில் ‘தி கிங்’ (துல்கர் சல்மான்) வருவதைப் பார்க்கும்போது, நம் […]

இலங்கை

பலாங்கொடையில் புதையல் தோண்ட முற்பட்ட 17 பேர் கைது!

  • June 28, 2023
  • 0 Comments

பலங்கொட – சமனலவெவ பகுதியிலுள்ள வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமனலவெவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போதே குறித்த 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். 26 முதல் 54 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை

வவுனியாவில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்!

  • June 28, 2023
  • 0 Comments

வவுனியா காத்தார் சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டடுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞரின் பெற்றோர் புதன்கிழமை(28) வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடுதிரும்பியிருந்தனர். இதன்போது இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்தநிலையில் சடலமாக கிடந்தமை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார் . இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்

ஆசியா

சீன நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

  • June 28, 2023
  • 0 Comments

திருமணத்திற்கு மீறிய உறவு வைத்து கொள்ளும் ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேற்ற படுவார்கள் என சீன நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு பல்வேறு விதிகளை வகுக்கும், இந்த விதிகளில் நேரம் தவறாமை, விடுமுறைகளை முடிந்தவரை எடுக்காமல் இருப்பது, மற்றும் சரியான நேரத்தில் வேலையை முடிப்பது போன்றவை அடங்கும். ஆனால் சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தை தளமாக கொண்ட தொழில் நிறுவனம் ஒன்று கடந்த ஜூன் 9ம் திகதி வித்தியாசமான விதிமுறை ஒன்றை […]

இலங்கை

சிகிச்சைக்காக வந்த நோயாளி மீது அசிட் வீச்சு; ஐவர் காயம்

  • June 28, 2023
  • 0 Comments

சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் மீது அசிட் வீசியதில் நோயாளி உட்பட ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற வந்த நோயாளியை இலக்குவைத்தே அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவனெல்ல பிரதேசத்தில் இருந்து வந்த நோயாளர், அந்த பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவருடன் தவறான தொடர்பில் இருந்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவனே இவ்வாறு அசிட் வீசியுள்ளார். அசிட் வீச்சு நடத்திய நபரை பேராதனை போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் […]

இலங்கை

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்தியது. எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மெல்ல மீண்டு வருவதால், இலங்கை சர்வதேச கடன் வழங்குனர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் […]

ஐரோப்பா

புதிய சர்ச்சையில் சிக்கிய ரிஷி சுனக்!

  • June 28, 2023
  • 0 Comments

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புதிய சர்ச்சையொன்றில் சிக்கியுள்ளார். அதாவது ரிஷி சுனக் Pilot V” fountain என்ற பேனையை  பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த பேனையானது, எழுதிய சிலமணி நேரங்களில் அழியக்கூடிய தன்மையை கொண்டுள்ளது. இந்த பேனையை பயன்படுத்தி அவர் ஆவணங்களில் கையெழுத்திட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விடயத்தை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர்,  “இது சிவில் சேவையால் வழங்கப்பட்ட மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் […]

ஆசியா

கைப்பற்றப்பட்ட 5ஆயிரத்து 700 கிலோ போதைப்பொருட்களுக்கு தீயிட்ட கம்போடிய பொலிஸார்

  • June 28, 2023
  • 0 Comments

கம்போடியாவில் கடத்தல்கார்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5ஆயிரத்து 700 கிலோ போதைப்பொருகள் தீயிட்டு அழிக்கப்பட்டது. அந்நாட்டில் கடந்த ஒராண்டில் சுமார் 5ஆயிரத்து 700கிலோ அளவிலான கொக்கைன்கள்,ஹெரோயின்கள் ,மெத்தன்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி அந்நாட்டு உள்துறை அமைச்சர் முன்னிலையில் பொலிஸார் அவற்றை தீயிட்டு கொளுத்தினர். கம்போடியாவில் 80கிராமுக்கு மேல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தத்கது.

error: Content is protected !!