ஆசியா

தலிபான் அரசு விதித்துள்ள புதிய தடை; அதிர்ச்சியில் பெண்கள்!

  • July 4, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருவதுடன் அங்கு கடுமையான பழமைவாத சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . இதற்காக உலகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் நிலையில் அழகு சாதன நிலையங்களை நடத்துவதற்கும் தலிபான் அரசு தடை விதித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான் அரசின் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகத்தின் அமைச்சர் முகமது அக்கிப் மஹ்ஜர் செய்தியாளர்களின் சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அழகு கலை கலைஞர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இந்த சட்டம் […]

புகைப்பட தொகுப்பு

தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை

  • July 4, 2023
  • 0 Comments

2023ம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். கண்டி பிலிமதலாவ மத்திய கல்லூரியில் இம்மாதம் 1, 2, 3 ஆகிய தினங்களில் நடைபெற்ற இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட பளு தூக்கல் போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி கோசியா திருமேனன் 45 கிலோ எடை பிரிவில் 87 கிலோ எடை தூக்கி இரண்டாம் இடத்தையும், ஏ.கவியாழினி 80 கிலோ எடைப்பிரிவில் 65 கிலோ எடை தூக்கி நான்காம் […]

ஐரோப்பா

பிரபல ரஷ்ய பெண் பத்திரிகையாளரைத் தாக்கி மொட்டை அடித்து கொடூரம்!

  • July 4, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் செச்சன்யா குடியரசின் வருகையின்போது பிரபல ரஷ்ய பத்திரிகையாளர் மற்றும் வழக்கறிஞர் மோசமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் பிரபல பெண் பத்திரிகையாளர் யெலினா மிலாஷினா மற்றும் வழக்கறிஞர் அலெக்ஸாண்டர் நெமோவ் ஆகியோர், செச்சென் தலைநகர் Groznyக்கு வருகை தந்தனர். செச்சென் ஆர்வலரின் தாயாரின் நீதிமன்ற விசாரணையில் கலந்துகொள்ள அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வரும் வழியில், ஆயுதமேந்திய குழு ஒன்றால் அவர்களின் கார் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அந்த குழு மிலாஷினா மற்றும் […]

இலங்கை

வவுனியாவில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட திருவுருவங்கள் விகாரையில் புதைப்பு

வவுனியா- போகஸ்வெவ சபுமல்கஸ்கட ரஜமஹா விகாரையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட திருவுருவங்களை விகாரையில் வைக்கும் பணி நேற்று (03) இடம்பெற்றது. வவுனியா, போகஸ்வெவ சபுமல்கஸ்கட ரஜமஹா விகாரையின் வடமாகாண தலைவர் சங்கநாயக்க வணக்கத்துக்குரிய கல்கமுவ சாந்தபோதி பீடாதிபதிகள் இணைந்து தாகபேயின் திருவுருவங்களை வைக்கும் தொண்டு பணிகளை ஏற்பாடு செய்திருந்தனர். அநுராதபுரம் ருவன்வெலி மஹா சயாவில் இருந்து 80 பிக்குகள் நான்கு நாட்கள் ஊர்வலமாக திருவுருவங்களை எடுத்து சென்றதுடன் பின்னர் தாகபேயில் திருவுருவங்களை வைக்கும் தொண்டு பணிகளையும் மேற்கொண்டனர். […]

வட அமெரிக்கா

இளைஞர்களை பாதித்துவரும் மர்ம நோய்; கனடிய மருத்துவர்கள் கவலை

  • July 4, 2023
  • 0 Comments

கனடாவின் New Brunswick மாகாணத்தில் ஒரு மர்ம மூளை நோய் மக்களை பாதித்துவருவதால் சுகாதார அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர். இந்த மூளைப் பிரச்சினையானது, இல்லாததை இருப்பதுபோல் தோன்றச் செய்வது, தசைச் சிதைவு, பார்வை பிரச்சினைகள், நினைவாற்றல் இழப்பு மற்றும் சில நரம்பியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த மூளை பிரச்சினை குறிப்பாக இளைஞர்களை பாதித்து வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர். நரம்பியல் நிபுணரான Dr. Alier Marrero மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், கிளைபோசேட் என்னும் களைக்கொல்லி இந்த மூளை பிரச்சினைகளுக்கு […]

பொழுதுபோக்கு

ஹன்சிகா மோத்வானி குறித்து கருத்து தெரிவித்த ரோபோ ஷங்கர்! மன்னிப்பு கோரிய படக்குழு

நடிகை ஹன்சிகா மோத்வானி, ஆதி பினிசெட்டியுடன் இணைந்து தனது அடுத்த படமான ‘பார்ட்னர்’ ரிலீசுக்கு தயாராகி வருகிறார். மனோஜ் தாமோதரன் இயக்கும் இப்படத்தில் யோகி பாபு, ரோபோ சங்கர், பால்க் லால்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த ஜூலை 3ஆம் திகதி சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஹன்சிகா மோத்வானி குறித்து ரோபோ சங்கர் கூறிய கருத்து நெட்டிசன்களை கொதிப்படைய செய்துள்ளது. நடிகை ஹன்சிகா மோத்வானியின் காலைத் தொட வேண்டிய ஒரு திரைப்படக் காட்சியைப் பற்றி […]

செய்தி

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் முதல் தடவையாக நடத்தப்பட்ட மன்னார் பிறிமியர் லீக்

  • July 4, 2023
  • 0 Comments

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் மன்னார் பிறிமியர் லீக்(MPL) என்ற சுற்றுப்போட்டி கடந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக நடத்தப்பட்டது. குறித்த போட்டியின் 2வது சீசன் (SEASON-02 )நேற்று (3) செவ்வாய்க்கிழமை மாலை மின்னொளியில் ஆரம்பமானது. குறித்த சுற்றுப்போட்டியில் 12 உதைபந்தாட்ட கழகங்களை சேர்ந்த 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.மன்னார் மாவட்ட வீரர்கள் தேசியத்திலும்,சர்வதேச மட்டத்திலும் தமது திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக அச் சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வாக நேற்று திங்கட்கிழமை(3) மாலை மன்னார் […]

இலங்கை

இன்றைய மாற்று விகிதங்கள்! இலங்கை மத்திய வங்கி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (ஜூலை 04) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 314.98 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 299.87 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வளைகுடா நாணயங்கள் உட்பட பிற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.

அரசியல் இலங்கை

இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் கட்ட சசாதகமான பதில் கிடைத்தது

  • July 4, 2023
  • 0 Comments

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும் கலந்துரையாடல் மேற்கொண்டார். BOI ஆடைகள் பூங்கா குறித்தும் , திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழிற்பூங்காவில் முதலீட்டாளர்களை தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்திர மாநில அரசிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார். இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் பக்தர்கள் […]

இந்தியா

ஆன்மீக தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது! பிரதமர் மோடி

நாட்டில் ஆன்மீக மையங்கள் புத்துயிர் பெற்று வரும் நிலையில், தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டர் திறப்பு விழாவின் போது மோடி தனது மெய்நிகர் உரையில், மொத்த நிகழ்நேர ஆன்லைன் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுவதாக கூறினார். மேலும், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது என்றும் […]

error: Content is protected !!