உலகம் விளையாட்டு

உலகக்கோப்பைக்கான தகுதி வாய்ப்பை இழந்த ஜிம்பாப்வே அணி

  • July 4, 2023
  • 0 Comments

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்பேயில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மீதமுள்ள 1 இடத்துக்கு ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதையடுத்து இன்று நடைபெற்று வரும் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஜிம்பாப்வே […]

பொழுதுபோக்கு

உத்தியோகப்பூர்வ அறிவிப்பு…. கமல்ஹாசனின் #KH233 படத்தின் சுடச்சுட அப்டேட்

  • July 4, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. . இந்த நிலையில் உலகநாயகன் அடுத்ததாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் இயக்குனர் எச் வினோத்துடன் இணைவதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தயாரிப்பாளர்கள் இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர், இது தற்காலிகமாக ‘கேஎச் 233’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் எச்.வினோத்துடன் நடிக்கும் படமும் […]

பொழுதுபோக்கு

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படம் எப்போது வெளியாகவுள்ளது! படக்குழு வெளியிட்ட அறிவிப்பு

விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், விஷாலுடன் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் செப்டம்பர் 19, 2023 அன்று விநாயகர் சதுர்த்திக்கு திரைக்கு வர உள்ளது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘மார்க் ஆண்டனி’ படத்தில் […]

இலங்கை

இலங்கைக்கான பெல்ஜியத்தூதுவருக்கும் அமைச்சர் நஸீர் அஹமட்க்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்

புது டில்லியில் இருந்து பணியாற்றும் இலங்கைக்கான பெல்ஜியத்தூதுவர் Diier Vanderhasseltக்கும் அமைச்சர் நஸீர் அஹமட்க்கும் இடையில் பரஸ்பர கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுற்றாடல் அமைச்சில் இன்று(04) இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கிடையிலான சுற்றாடல் அனுபவங்கள், வரலாற்று ரீதியிலான நல்லுறவு என்பன தொடர்பாகவும் கருத்துப்பரிமாறிக் கொண்டனர். இலங்கையின் பொருளாதார சிக்கல் இத்தீர்வுக்கான IMF இன் ஒத்துழைப்புக்கும் பெல்ஜியத்தின் பங்களிப்பு தொடர்பாக அமைச்சர் நஸீர் அஹமட் நன்றி தெரிவித்தார்.

ஆசியா செய்தி

ஜெனினில் கார் மோதல் மற்றும் கத்தி குத்து தாக்குதலில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

  • July 4, 2023
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனினில் இஸ்ரேலின் மிகப்பெரிய இராணுவத் தாக்குதலின் இரண்டாவது நாளில், டெல் அவிவில் கார் மோதி மற்றும் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலிய பொலிசார் வடக்கு டெல் அவிவில் “சிவிலியன்கள் பலரை தாக்கிய ஒரு கார்” பற்றிய புகாரைப் பெற்றதாகவும், சந்தேக நபர் “நடுநிலைப்படுத்தப்பட்டதாகவும்” தெரிவித்தனர். சம்பவ இடத்தில் அவரைப் பரிசோதித்த மருத்துவர், அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். “சந்தேக நபர் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்ற […]

இலங்கை

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் சென்னை பயணம்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கெடுக்க மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் சென்னை பயணம். மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் சென்னையில் நடைபெற இருக்கும் பதினொராவது(11) உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கெடுப்பதற்கு சென்னைக்கு பயணமாகிறார். யூலை மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை சென்னை செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்தில் இம்மாநாடு இடம்பெறுகின்றது. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு ஐரோப்பியத் தமிழ் […]

இலங்கை

35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55% நிவாரணத்தை பெற்றுக்கொடுத்தது! கஞ்சன விஜேசேகர

பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55% நிவாரணத்தை பெற்றுக்கொடுத்திருந்தாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் […]

ஐரோப்பா

ரஷ்ய MIG-31 விமானம் விபத்தில் சிக்கியது – இருவரை காணவில்லை!

  • July 4, 2023
  • 0 Comments

ரஷ்ய MIG-31 விமானம் பசுபிக் கடற்கரையில் விபத்துக்குள்ளாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான பயிற்சியின்போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும், அதில் பயணித்த இருவரின் நிலை குறித்து தெரியவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கம்சட்கா தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள அவாச்சா விரிகுடாவில் விமானம் விழுந்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. மீட்புக் குழுக்கள் அதன் இரண்டு பணியாளர்களைத் தேடி வருவதாகவும், விமானத்தில் ஆயுதங்கள் இல்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த விவரங்கள் எதுவும் […]

ஐரோப்பா

பிரான்சில் நஹெலை கொலை செய்த பொலிஸ் அதிகாரிக்கு ஆதரவாக 01 மில்லியன் நிதி திரட்டிய மக்கள்!

  • July 4, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நஹெல் என்ற ஆப்பிரிக்க இளைஞர் போக்குவரத்து விதிகளை மீறியதாக தெரிவித்து பொலிஸ் அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து பிரான்ஸ் முழுவதும் கலவரங்கள் வெடித்தன. பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையத்தில் வைரலாகி வரும் வீடியோக்களில் பிரான் முழுவதும் போர்களமாக காட்சியளிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இதற்கிடையே நஹெலை சுட்டுக் கொலை செய்த பிரஞ்சு அதிகாரியான ஃப்ளோரியனிற்கும் ஆதரவு அதிகரித்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக சில சிலர் நிதி சேகரித்துள்ளனர். இதன்படி இதுவரையில் பொலிஸ் அதிகாரிக்கு ஆதரவாக ஒரு மில்லியன் யூரோ […]

இலங்கை

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை புதன்கிழமை (ஜூலை 05) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பிரதேசத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை மூடப்படும் என வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!