பொழுதுபோக்கு

“ஒரு குட்டி பிரேக்” சமந்தாவின் அதிரடி தீர்மானம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்…

  • July 5, 2023
  • 0 Comments

நடிகை சமந்தா சினிமாவில் இருந்து அதிரடியாக ஒரு குட்டி பிரேக் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி சினிமா உலகத்தை பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது. மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட 8 மாத காலம் சினிமாவுக்கு பிரேக் விட்டு இருந்த சமந்தா தனது உடல் நிலையை சரி செய்து விட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். யசோதா, சாகுந்தலம் படங்களை தொடர்ந்து சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள குஷி படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், சிட்டாடல் வெப்சீரிஸிலும் சமந்தா […]

இலங்கை

காற்றின் வேகத்தினால் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்! இருவர் படுகாயம்

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கணவன் மற்றும் மனைவி காயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து-அனுராதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது காற்றின் வேகத்தினால் மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் வேகமாக வந்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பா

ஜேர்மனியில் இரு மாணவிகளை கத்தியால் குத்திய புகலிடக்கோரிக்கையாளர் !

  • July 5, 2023
  • 0 Comments

ஜேர்மன் நகரம் ஒன்றில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவிகள் இருவரைத் தாக்கிய புகலிடக்கோரிக்கையாளர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் நகரமான Illerkirchbergஇல், பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவிகளை மர்ம நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். கத்தியால் குத்தப்பட்ட 14 வயதுடைய மாணவி உயிரிழந்த நிலையில், அந்த 13 வயதுள்ள மாணவி காயங்களுடன் தப்பியோடினார். 27 வயதான அந்த நபர், எரித்ரியா நாட்டைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் என பின்னர் தெரியவந்தது. இந்நிலையில், பவேரியாவிலுள்ள Ulm நகரிலுள்ள நீதிமன்றம் […]

வட அமெரிக்கா

மனைவி மற்றும் 5 குழந்தைகள் கண் முன்னே மலையிலிருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் பலி!

அமெரிக்காவில் ஓரிகானின் மல்ட்னோமா நீர்வீழ்ச்சிக்கு அருகில் நடைபயணம் மேற்கொண்டபோது மனைவி மற்றும் 5 குழந்தைகள் கண் முன்னே மலையிலிருந்து தவறி விழுந்து 40 வயது நபர் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் ஜூலை 2 ஆம் திகதி மதியம் 2 மணியளவில் ஓரிகானின் மிக உயரமான 620 அடி நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு நடைபாதையான பென்சன் பாலத்திற்கு அருகில் நடந்துள்ளது. ஜெரார்டோ எங்கு விழுந்தார் என்பதை கண்டுபிடிக்க முடியாததால், மீட்பு படையினரும், தீ அணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். அதிகாரிகளின் […]

ஆசியா ஆஸ்திரேலியா

விமானநிலையத்தில் உடமைகள் சோதனை; காப்பாற்றப்பட்ட 16 சிறுவர்கள்

  • July 5, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியா- சிட்னி விமானநிலையத்தில் பயணியொருவரின் உடமைகளை சோதனையிட்டதன் காரணமாக 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திலிருந்து காப்பாற்ற முடிந்துள்ளதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட பாரிய சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் பிலிப்பைன்சில் 16 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்சின் வடக்குபகுதி நகரமொன்றில் வைத்து இந்த சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்சிலிருந்து நாடுதிரும்பிய குயின்லாந்தை சேர்ந்த நபரின் பயணப்பொதியை சிட்னி விமானநிலையத்தில் ஜனவரி மாதம் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர். இதன்போது […]

ஆசியா

பாகிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு!

  • July 5, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், 18 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை வரும் செப்டம்பர் மாதம் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். பாகிஸ்தானின் கலாச்சார தலைநகரான லாகூரில் கடந்த ஒன்பது மணிநேரத்தில் 272 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சாலைகள் வெள்ளநீர் தேங்கியிருப்பதாகவும். அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். லாகூர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு […]

இலங்கை

வவுனியா- விடுதி ஒன்றில் திடீர் சுற்றி வளைப்பு ; இளம் பெண் உட்பட நால்வர் கைது

  • July 5, 2023
  • 0 Comments

வவுனியா ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விருத்தினர் விடுதியில் விபச்சாரம் இடம்பெறுவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த விடுதியில் திடீர் சுற்றிவளைப்பினை முன்னெடுத்திருந்தனர். இதன் போது பாலியல் விபச்சாரத்தில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் விடுதியில் தங்கியிருந்த 20, 34 வயதுடைய இரு பெண்களும் […]

பொழுதுபோக்கு

ஆந்திர முதல்வரின் பயோபிக் படத்தில் ஜீவா: விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டு வரும் படம் ‘யாத்ரா 2’. இப்படத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்தில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 8ஆம் திகதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியை வைத்து ‘யாத்ரா’ படத்தை இயக்கிய மஹி வி. ராகவ் இயக்கிய சுயசரிதை படம் பிப்ரவரி 2024 இல் திரையிடப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

முத்துராஜா இலங்கைக்கு மீண்டும் கொண்டுவரப்படாது!

  • July 5, 2023
  • 0 Comments

முத்துராஜா இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரப்படாது என தாய்லாந்து அமைச்சர் தெரிவித்துள்ளார். ‘முத்துராஜா’ (சக் சூரின்) இப்போது எச்.எம். மன்னரின் ஆதரவில் இருப்பதால் அது மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படுவது சந்தேகமே என்று  தாய்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சா தெரிவித்தார். முத்துராஜா தற்போது லம்பாங் மாகாணத்தின் ஹாங் சாட் மாவட்டத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் 30 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை

சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

அடுத்த பெரும் போகத்தில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு, அவர்களின் நிலத்தை தயார் செய்ய ஏக்கருக்கு 20,000 ரூபாய்.வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அநுராதபுரம், அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு, திருப்பிச் செலுத்த வேண்டிய தேவையில்லாத தொகையாக இந்த நிதி வழங்கப்படும் என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சோளச் செய்கைக்குத் தேவையான அனைத்து விதைகள் மற்றும் உரங்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், […]

error: Content is protected !!