வட அமெரிக்கா

பூங்காவில் படுத்திருந்த இளம் தாய்க்கு புல் வெட்டும் இயந்திரத்தால் நேர்ந்த சோகம்!

  • July 17, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் புல் வெட்டும் இயந்திரம் 27 வயதுடைய தாயின் மீது ஏறிச் சென்றதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின், கலிபோர்னியாவில், மொடெஸ்டோ பகுதியில் உள்ள பியர்ட் புரூக் பூங்காவில் களைச்செடிகள் மற்றும் புற்கள் அதிகமாக வளர்ந்து இருந்த இடத்தில் 27 வயதுடைய கிறிஸ்டின் சாவேஸ் என்ற பெண் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.அப்போது பூங்கா நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்டு இருந்த தொழிலாளி ஒருவர், புற்களை சீர்திருத்துவதற்காக புல் வெட்டும் கருவியை டிராக்டருடன் இணைத்து அப்பகுதியில் வேலையை […]

ஆஸ்திரேலியா

இரவு வானில் ஜொலித்த சந்திரயான்-3 விண்கலம் ; வைரலான புகைப்படம்

  • July 17, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் இரவு நேரத்தில் வானில் தெரிந்த சந்திரயான்-3 விண்கலத்தின் வசீகரிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வானியல் ஆர்வலரான டிலான் ஓ’டோனல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்தும், ரீ-ட்வீட் செய்தும் வருகின்றனர். இதுகுறித்து வானியல் ஆர்வலர் டிலான் ஓ’டோனல் தனது ட்வீட்டில், சந்திரயான்-3 இன் நேரலை வெளியீட்டை யூ-டியூப்பில் பார்த்ததாகவும், அதன்பிறகு சுமார் 30 நிமிடங்களுக்குப் கழித்து, அது தனது வீட்டைக் கடந்து சென்றபோது, […]

பொழுதுபோக்கு

’விஷால் 34’ படத்தின் நாயகி யார் தெரியுமா? அதிகாரபூர்வ அறிவிப்பு..

  • July 17, 2023
  • 0 Comments

விஷால் நடிக்க இருக்கும் 34ஆவது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் என்று அறிவிக்கப்பட்ட […]

தென் அமெரிக்கா

அர்ஜெண்டினாவில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  • July 17, 2023
  • 0 Comments

அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். அண்டை நாடான சிலியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கம் 171 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று அமெரிக்காவின் அலாஸ்கா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி […]

இலங்கை

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

  • July 17, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (17.07) வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்  நாணய மாற்று விகிதங்களின் படி இன்றைய தினம், டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 313.29 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 327.16 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 310.49 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 324.67 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

ஊசியால் ஏற்படும் மரணங்கள் குறித்து ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்!

  • July 17, 2023
  • 0 Comments

ஊசி செலுத்தப்பட்ட பின்னர் இடம்பெறும் உயிரிழப்புகள் குறித்து ஆராய்வதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையிலான ஐவரடங்கிய குழுவொன்றை நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார். . கடந்த சில மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் நிகழ்ந்த இறப்புகள் குறித்தும் விசாரணை நடத்தும் பணியும் இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், மருத்துவம், செவிலியர் மற்றும் ஒவ்வாமை தொடர்பான விரிவான அறிவும் புரிதலும் […]

வட அமெரிக்கா

கனடாவில் குடியிருப்பு தொகுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு

  • July 17, 2023
  • 0 Comments

கனடாவின் குடியிருப்பு தொகுதி ஒன்றில் பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரண்டு ஆண்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.இந்த தகவல்களின் அடிப்படையில் டொரன்டோ பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஸ்காப்ரோ டான்சிங் மற்றும் மார்னிங் சைட் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் […]

இலங்கை

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்!

  • July 17, 2023
  • 0 Comments

யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். தன் மகள் தொடர்பில் அயல் வீட்டார் இழிவாக பேசியது தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக தெரிவித்தே குறித்த நபர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஆவரங்கால் சர்வோதயா பகுதியில் 18 வயது இளைஞன் ஒருவன் அயல் வீட்டுப் பெண்ணை காதலித்து வந்த நிலையில், இருவரும் சுய […]

ஆசியா

வடகொரியா அச்சுறுத்தல் ; ஜப்பான் கடற்பகுதியில் முத்தரப்பு போர்ப்பயிற்சி

  • July 17, 2023
  • 0 Comments

கொரிய தீபகற்ப பகுதியில் தொடர் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த வாரம் ஹவாசாங்-18 என்ற கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியாவை சேர்ந்த 4 தனிநபர்கள் மற்றும் 3 நிறுவனங்கள் மீது தென்கொரியா தடை விதித்தது. இந்தநிலையில் தற்போது ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை இணைந்து முத்தரப்பு போர்ப்பயிற்சியை நடத்தியது. […]

இலங்கை

மன்னாரில் நடன துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்காக பிரம்மாண்ட பயிற்சிப்பட்டறை

  • July 17, 2023
  • 0 Comments

நடன துறையில் ஆர்வம் உள்ள இளைஞர் யுவதிகளின் திறமையை மெருகேற்றும் விதமாக மாவட்ட ரீதியாக உள்ள சிறுவர், சிறுமியர், இளைஞர் யுவதிகளை ஒன்றினைத்து இரண்டு நாள் நடன பயிற்சி பட்டறை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தினங்கள் மன்னார் வங்காலை டான்ஸிங் டைமன்ஸ் நடன பயிற்சி கல்லூரியில் இடம் பெற்றது. மன்னார் டான்ஸிங் டைம்மன்ஸ் பயிற்சி கல்லூரியின் ஒழுங்கமைப்பில் அதன் நிறுவனர் அர்ஜுன் லெம்பேட்,ரஞ்சித்,நிருஸி,எவரஸ்ரா ஆகிய நடன ஆசிரியர்கள் இணைந்து குறித்த நடன பயிற்சி பட்டறையை நடத்தியிருந்தனர் […]

error: Content is protected !!