தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து -17 பேர் உயிரிழப்பு!
பங்களாதேஷின் சத்திரகண்டா பகுதியில் உள்ள குளத்தில் பேருந்து ஒன்று கவிழந்து விபத்துகுள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூவர் குழந்தைகள் என அறிவிக்கப்பட்டுள்ளதுன்இ 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்தின் கொள்ளளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.













