வட அமெரிக்கா

கனடிய அமைச்சரவையில் நான்கு இந்திய வம்சாவளியினருக்கு பதவி

  • July 27, 2023
  • 0 Comments

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்துள்ளார். சில அமைச்சர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், புதிதாக சில அமைச்சர்கள் கேபினட்டுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்த், தற்போது கனடா கருவூல வாரியத்தின் தலைவராக பதவியேற்றுள்ளார். ஏழு அமைச்சர்கள் பதவிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில், முக்கியமான பொறுப்புகள் வகித்த பெரும்பாலானவர்களுக்கு வெவ்வேறு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அனிதா ஆனந்த் தவிர்த்து, இந்திய வம்சாவளியினர்களான Harjit Sajjan, Kamal Khera, புலம்பெயர் பெற்றோருக்குப் […]

இலங்கை

யாழில் தனிமையில் இருந்த மூதாட்டி சடலமாக மீட்பு..!

  • July 27, 2023
  • 0 Comments

யாழ்.தென்மராட்சி மட்டுவில் வடக்கில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டி நேற்று(26) காலையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.அதனையடுத்து சாவகச்சேரி நீதவான் சடலத்தை பார்வையிட்டதோடு உடல்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்புமாறும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தலை மற்றும் கைகளில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும், […]

இலங்கை

இந்திய முட்டைகளை மூன்று நாட்கள் மட்டுமே வெளியில் வைத்திருக்க முடியும்!

  • July 27, 2023
  • 0 Comments

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சதொச உள்ளிட்ட பல்பொருள் அங்காடிகளில் இருந்து 35 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குளிர்சாதன பெட்டியில் இருந்து முட்டைகளை வெளியே எடுத்து சாதாரண சூழலில் மூன்று நாட்கள் மட்டுமே வைக்க முடியும் என மாநகராட்சி கூறியுள்ளது. முட்டைகளை 2-5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் மூன்று மாதங்களுக்கு வைத்திருக்க முடியும் என்றும், வெளியே எடுத்தால் மூன்று நாட்களுக்குள் அவற்றை உட்கொள்ள வேண்டும் என்றும் […]

ஆசியா

அதிபர் கிம்முடன் ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி ஷெர்ஜி ஷோய்கு சந்திப்பு

  • July 27, 2023
  • 0 Comments

கொரிய தீபகற்பம் 1953ம் ஆண்டு வடகொரியா மற்றும் தென்கொரியா என இரண்டாக பிரிந்தது. இருந்தும் இரண்டு நாடுகளும் ஒரே நாளில் தன் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் இருநாடுகள் பிரிந்து 70 ஆண்டுகள் கடந்ததை நினைவுக்கூரும் வகையில் வடகொரியா அரசு பிரமாண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளது. இதில் வடகொரியா அரசு தனது நட்பு நாடுகளான ரஷ்யா, சீனா நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது. இந்த நிலையில் வடகொரியாவின் அழைப்பை […]

இலங்கை

சர்வதேச விசாரணை மூலம்தான் நடந்ததை நிரூபிக்க முடியும்- சாள்ஸ் நிர்மலநாதன்

  • July 27, 2023
  • 0 Comments

சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும்.எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்கின்ற சர்வதேச விசாரணை நியாயமானது. அவர்களுடைய கோரிக்கைக்கு பூரணமான ஆதரவு வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் புதன் மாலை (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,2015ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக சர்வதேச கண் காணிப்பாளர்களின் விசாரணை வேண்டும் […]

பொழுதுபோக்கு

கோலிவுட் பிரபலங்களின் ‘முதலாளி’ கைது… கலக்கத்தில் தமிழ் நடிகர், நடிகைகள்

  • July 27, 2023
  • 0 Comments

சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக கூறி மலேசியாவில் புகழ்பெற்ற தொழிலதிபராக விளங்கி வரும் டத்தோ மாலிக் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மலேசியாவில் தமிழ் திரைப்படங்களை வாங்கி மலேசியாவில் விநியோகம் செய்து நல்ல லாபம் பார்த்தார். அங்கு எடுக்கப்படும் படங்கள் சிலவற்றையும் இவர் தயாரித்துள்ளார். இதுதவிர தங்க, வைர நகை வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். டத்தோ மாலிக் என அழைக்கப்படும் இவர் மலேசியாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன்மூலம் கோடிக் கோடியாய் சம்பாதித்து வருகிறார். தமிழ் திரையுலகை சேர்ந்த […]

இலங்கை

இலங்கை காவல் நிலையங்களில் 20,000 பணியிடங்கள்!

  • July 27, 2023
  • 0 Comments

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் தெரிவித்துள்ளார். உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு  20,000  பொலிஸ் உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில்  எதிர்காலத்தில் ஏனைய அதிகாரிகளின் பற்றாக்குறையும் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்க அழைப்பு!

  • July 27, 2023
  • 0 Comments

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 2500 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்ற நிலையில், அவர்களுக்கு நீதி கோரி நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான துரைராசா ரவிகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நாளை 28.07) நடைபெறவுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், கொக்குத்தொடுவாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வுகளில் இருந்து வெளிபடும் எச்சங்கள் எங்கள் உறவுகளுடையதா என்ற கேள்வி எழுவதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி […]

இலங்கை

நாய்க்கு சொகுசு பஸ் : இலங்கை அமைச்சரின் அட்டகாசம்!

  • July 27, 2023
  • 0 Comments

அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்களுக்குச் சொந்தமான சொகுசுப் பேருந்து ஒன்று ஹப்புத்தளை பிரதேசத்தில் நேற்று (26.07) குன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் போது அமைச்சருக்கு சொந்தமான செல்ல நாய் மற்றும் பேருந்தின் சாரதி மாத்திரமே அங்கு இருந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். விபத்தில் பேருந்து சேதமடைந்துள்ள போதிலும், சாரதிக்கோ நாய்க்குட்டிக்கோ காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். நாய்க்குட்டியின் சுகவீனத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக கொழும்பில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த பேருந்து  சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் விபத்து […]

மத்திய கிழக்கு

சூடான் கலவரம்: துணை ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் பலி

  • July 27, 2023
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த உள்நாட்டு கலவரத்தில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கில் படுகாயம் அடைந்து வருகிறார்கள். இந்தநிலையில் தலைநகர் கார்டூமிற்கு மேற்கே ஒம்துர்மன் நகரில் ராணுவ தளத்தின் முகாம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது துணை ராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இது திசைமாறி அருகே உள்ள […]

error: Content is protected !!