இலங்கை

தமிழர் பகுதியில் இராணுவ முகாம்கள் -புத்தர் கோவில்கள் அமைக்கப்படுவது மக்களுடைய படுகொலையை மறைப்பதற்கே! செல்வம் அடைக்கலநாதன்

மக்களுடைய படுகொலையை மறைப்பதற்கே அங்கங்கு புத்தர் கோவில்கள் அமைக்கப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”உண்மையிலே […]

பொழுதுபோக்கு

அதிர்ஷ்டத்தை தேடி அலையும் மனிதனின் கதை – யோகிபாபுவின் புதிய டீசர்

  • July 28, 2023
  • 0 Comments

காமெடி நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் லக்கி மேன். இப்படத்தை பாலாஜி வேணுகோபால் என்பவர் இயக்கி உள்ளார். ஆர்.ஜே.வாக பணியாற்றி வந்த இவர், நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இப்படம் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். அதிர்ஷ்டத்தை தேடி அலையும் மனிதனின் கதையை மையமாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளனர். லக்கி மேன் படத்தை தின்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு […]

இந்தியா

திருமணத்துக்கு மறுப்பு சொன்ன மாணவிக்கு நேர்ந்த கதி!

  • July 28, 2023
  • 0 Comments

டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள கமலா நேரு கல்லூரி மாணவி நர்கீஸ், 26 வயதான இர்பான் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது.இவர்களது திருமணத்திற்கு மாணவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பின்பு, நர்கீஸ் இர்பானுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனையடுத்து, நர்கீஸ் தன்னுடன் பேசுவதை நிறுத்திய பிறகு இர்பான் வருத்தமடைந்துள்ளார். இந்த ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்த நர்கீஸ் மாளவியா நகரில் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வந்துள்ளார்.இந்நிலையில், […]

இலங்கை

குறை கூறும் தலைவர்கள் உள்ள வரை இலங்கையின் நீதித்துறை கேள்விக்குறியே -சி.சிறீதரன்

  • July 28, 2023
  • 0 Comments

தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் பிழை என கூறும் இலங்கையின் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை இலங்கையின் நீதித்துறை கேள்விக்குறியே என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே […]

இலங்கை

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜூலை 01 முதல் 27 வரை இலங்கைக்கு 120,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். அதன்படி, ஜூலை மாதத்தில் மொத்தம் 1,23,503 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் இந்த வருடத்தில் இதுவரை 748,377 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அமைச்சர் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்

பொழுதுபோக்கு

திடீரென இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா கிளம்பும் ரஜினிகாந்த்

  • July 28, 2023
  • 0 Comments

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது பல்வேறு திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் இதில் நடித்துள்ளனர். குறிப்பாக கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றிருந்த ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டில் கலந்துகொள்வதற்காக சென்னை […]

இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி! ஐ. நா மன்றம் இனியும் காலதாமதம் செய்யக்கூடாது- க.சுகாஷ்

தமிழர் பகுதிகளில் காணப்படும் எந்தவொரு புதைகுழிக்கும் நீதி கிடைக்கவில்லை எனவும் கொக்குத்தொடுவாயும் அவ்வாறு அரங்கேறிவிடக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் , சட்டத்தரணியுமான க.சுகாஷ் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து […]

வட அமெரிக்கா

முன்னாள் கணவரை முகநூலில் இழிவுபடுத்திய பெண்ணுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

  • July 28, 2023
  • 0 Comments

கனடாவில் சமூக ஊடகத்தில் முன்னாள் கணவனை இழிவு படுத்திய முன்னாள் மனைவிக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.வடக்கு ஒன்றோரியா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இவ்வாறு ஒன்றாரியோ உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தனது முன்னாள் கணவர் பற்றி சமூக ஊடகங்களின் வாயிலாக பொய்யான மற்றும் இழிவுபடுத்தக்கூடிய தகவல்களை வெளியிட்டு வந்தார் என குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.முன்னாள் கணவர் போதை பொருளுக்கு அடிமையானவர் எனவும், பிள்ளைகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்தார் எனவும், குடும்பத்தை […]

இலங்கை

யாழில் சிறுமி உயிரிழந்த விவகாரம்; இரு பொலிஸ் அணிகள் களமிறக்கம்

  • July 28, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் 17 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் இரண்டு பொலிஸ் அணிகள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான இரண்டு அணிகள் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் உரியய சட்ட நடவடிக்கை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்

இலங்கை

வீடு புகுந்து வாள் வெட்டு: வாளை பறித்து திருடனை வெட்டிய வீட்டு உரிமையாளர்

  • July 28, 2023
  • 0 Comments

வவுனியா நொச்சுமோட்டையில் இனந்தெரியாத குழுவொன்று வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதியை வாளால் வெட்டி திருட முற்பட்ட நிலையில் வீட்டு உரிமையாளர் வாளை பறித்து திருடர்கள் மீது பதில் தாக்குதல் நடத்திய நிலையில் திருடர்கள் காயமடைந்த நிலையில் தப்பி ஓடியுள்ளனர். நேற்று (27) இரவு வீட்டில் மாரிமுத்து செல்வநாயகம் (58) அவரது மனைவி செ.செல்வராணி இருவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முகமூடி அணிந்த நிலையில் திருடர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் வீட்டினுள் புகுந்து இருவர் மீதும் வாளால் வெட்டியுள்ளனர். […]

error: Content is protected !!