இலங்கை

அங்கொடை நோயாளி உயிரிழப்பு;சந்தேக நபர்கள் நால்வருக்கும் விளக்கமறியல்

  • July 30, 2023
  • 0 Comments

அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலையின் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நோளாயர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.புதுக்கடை நீதவான் முன்னிலையில் சந்தேக நபர்கள் சனிக்கிழமை (29) ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நோயாளர் உயிரிழந்தமை தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை மொத்தமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் […]

இலங்கை

அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார நிபுணர்கள்!

  • July 30, 2023
  • 0 Comments

சுகாதார பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யாமைக்கு எதிராக அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் வரும் (03.08) திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுற்றறிக்கைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என அச் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகிறார். இதேவேளைஇ 100இ000 கான்டாக்ட் லென்ஸ்கள் கொள்வனவு செய்வதற்கான முறைகேடு தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரை உடனடியாக கைது […]

இலங்கை

மலையக எழுச்சி பயணம்: மன்னார் நகரை வந்தடைந்தது

  • July 30, 2023
  • 0 Comments

மலையக எழுச்சி பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (30) பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் ஆரம்பமான எழுச்சிப் பயணம் மன்னாரை வந்தடைந்தது. மூன்றாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை 6.30 மணியளவில் பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் எழுச்சிப் பயணம் மன்னார் நகரை நோக்கி ஆரம்பமானது. இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அங்கு சென்று ஆசி வழங்கிய நிலையில் மன்னார் நகர் நோக்கி அவர்களின் எழுச்சி நடை […]

இலங்கை

இலங்கை மின்சார சபைக்கு ஏற்படவுள்ள பாரிய நெருக்கடி : மின் கட்டணங்கள் உயர வாய்ப்பு!

  • July 30, 2023
  • 0 Comments

இலங்கை மின்சார சபைக்கு இவ்வருடம் 5000 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படும் என அதன் சிரேஷ்ட பொறியியலாளர்கள் கூறுகின்றனர். இரண்டு தடவைகள் மின்சாரக் கட்டணம் 75% அதிகரிக்கப்பட்ட போதிலும் நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது, ​​டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து, நாட்டின் தேவையை தொடர்ந்து பூர்த்தி செய்ய, மின்சாரம் பெறுவதால், இவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தவிர, நிலக்கரியின் விலை மற்றும் அவற்றை நாட்டிற்கு இறக்குமதி செய்யும் போது கப்பல் தாமதக் […]

ஐரோப்பா

மாஸ்கோவில் சர்வதேச வர்த்தக மைய கட்டிடம் மீது தாக்குதல் – விமான நிலையம் மூடல்

  • July 30, 2023
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 522வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ரஷ்யா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது இன்று அதிகாலை 3 உக்ரைன் டிரோன்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. எஞ்சிய 2 டிரோன்களும் […]

வட அமெரிக்கா

அமெரிக்க அதிபருக்கான போட்டியில் மேலும் ஒரு இந்தியர்…!

  • July 30, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோல் குடியரசு கட்சியின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்து, அதற்கான பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார். அதே சமயம் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்பை தவிர்த்து இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலோ, விவேக் ராமசாமி உள்பட 13 பேர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த போட்டியில் […]

பொழுதுபோக்கு

கைகோர்க்கும் ராணா – துல்கர் சல்மான்… மகிழ்ச்சிக்கடலில் ரசிகர்கள்

  • July 30, 2023
  • 0 Comments

ராணா டகுபதி, துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் காந்தா என்ற புதிய படத்தை இயக்குனர் செல்வமனி செல்வராஜ் இயக்குகிறார். ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபாரெர் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகன் ராணா மற்றும் தெலுங்கு மொழியில் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த மலையாள சூப்பர்ஸ்டார் துல்கர் சல்மான் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். பல மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கர் சல்மானின் வேஃபாரர் […]

பொழுதுபோக்கு

ஆண்டனி தாஸாக மிரட்டும் சஞ்சய் தத்… மாஸ் என்ட்ரி – வீடியோ

  • July 30, 2023
  • 0 Comments

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நேற்று தன்னுடைய 63 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அவருக்கு, பலர் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தொடர்ந்து சமூக வலைதளத்தில் தெரிவித்து வரும் நிலையில், சஞ்சய் தத்தின் பிறந்தநாளில் லியோ பட குழு அவரின் கிலிம்ஸி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பா

கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பில் உக்ரைன் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

  • July 30, 2023
  • 0 Comments

கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தை டிசம்பர் 25ஆம் திகதிக்கு மாற்றுவதற்கு உக்ரைன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கான சட்டமூலத்தில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார். உக்ரைனும் ரஷ்யாவும் பாரம்பரியமாக ஜனவரி 7ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடின. ரஷ்யாவின் பாரம்பரியத்தைக் கைவிடவும் உக்ரைனுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளவும் புதிய சட்டம் முன்மொழியப்பட்டதாகக் கூறப்பட்டது. குறைந்தது 17ஆம் நூற்றாண்டிலிருந்து உக்ரேன் மொஸ்கோ தேவாலயத்தின் தலைமைத்துவத்தைப் பின்பற்றியது. ஆனால் 2019ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனின் ஓர் அங்கமாக இருந்த […]

இலங்கை

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க களமிறங்கும் பிரபலங்கள்

  • July 30, 2023
  • 0 Comments

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, நிமல் லான்சா ஆகியோர் தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம், 2024 ஜனவரியில் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது. இது விடயம் சம்பந்தமாக கொழும்பில் கடந்தவாரம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, லசந்த அழகியவண்ண, நளின் பெர்னாண்டோ, மஹிந்த அமரவீர, பிரியங்கர ஜயரத்ன உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். […]

error: Content is protected !!