இலங்கை

13வது திருத்தம் குறித்து ஜனாதிபதி விசேட அறிவிப்பு

  • August 1, 2023
  • 0 Comments

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலும் அதனை பலப்படுத்துவது தொடர்பில் சகல யோசனைகளையும் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். ​அதனடிப்படையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் அதிகாரத்தை பகிர்வது தொடர்பில், அடுத்தவார பாராளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி விசேட கூற்​றொன்றை விடுத்து உரையாற்றவுள்ளார்.

வட அமெரிக்கா

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவில் முத்தரப்பு உச்சிமாநாடு

  • August 1, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் வருகிற 18ம் திகதி முத்தரப்பு உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் உயர்மட்ட அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அமெரிக்கா செல்ல உள்ளார். இதற்கு முன்னதாக கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த ஜி7 மாநாட்டின்போது முத்தரப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. எனினும் சர்வதேச நிகழ்வுகளுக்கு இடையே அல்லாமல் தனியாக நடைபெறும் முதல் உச்சி மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் […]

இலங்கை

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்!

  • August 1, 2023
  • 0 Comments

கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 100 ரூபாவினால் குறைக்க உள்ளூர் கோழி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை

மின் உற்பத்திக்கு நீர் வழங்குவதில் சிக்கல்!

  • August 1, 2023
  • 0 Comments

தற்போது நிலவும் மழையில்லாத காலநிலை காரணமாக சமனல குளத்தின் நீர் கொள்ளளவு குறைந்துள்ளதால் மின்சார உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஆனால் மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு அவசரமாக கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை

அஸ்வெசும திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்!

  • August 1, 2023
  • 0 Comments

அஸ்வெசும சமூக நலப் பயன் திட்டத்தின் கீழ் சலுகைகளை உடனடியாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி  நலன்புரிப் பலன்கள் வாரியம் நிவாரணத் திட்டத்திற்கு ஆரம்ப சுற்றில் 1 792,265 பயனாளிகளைத் தேர்வு செய்துள்ளது. மேலும் மேல்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகள் எதுவும் பெறப்படாத 1,588,835 பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படவுள்ளது.

இலங்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்த கோபால் பாக்லே!

  • August 1, 2023
  • 0 Comments

இந்திய உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழு ஒன்று சந்தித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (01.08) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கலந்துரையாடலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று பிரசன்னமாகியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இந்திய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதுடன், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் […]

ஆப்பிரிக்கா

91 குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்த நபர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

  • August 1, 2023
  • 0 Comments

91 குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவுஸ்ரேலிய குழந்தைகள் நல அதிகாரி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தல், அவர்களை படம்பிடித்து ஆன்லைனில் வெளியிட்டது உட்பட 1,600க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

முச்சக்கர வண்டிகளின் கட்டணம் குறித்த அறிவிப்பு!

  • August 1, 2023
  • 0 Comments

எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், முச்சக்கரவண்டிகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமான என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் ஊடாக பிரத்தியேகமாக ஒழுங்குபடுத்தப்படும் வரை கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என முச்சக்கரவண்டி சங்கங்கள் வலியுறுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலைகள் திருத்தப்படுவதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியாது என முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்றிரவு (31) மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் திருத்தத்துடன், ஒக்டேன் 92 லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் […]

இலங்கை

யாழ். காரைநகர் முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி

  • August 1, 2023
  • 0 Comments

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது தாக்குதல் முயற்சி ஒன்று நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. காரைநகர் ஆலடி சந்தியில் பிரதேச சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மீன் சந்தைக் கட்டிடம் ஒன்று அமைக்கப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் பிரதேச சபை செயலாளருக்கும் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் க.பாலச்சந்திரனால் முறைப்பாடு செய்யப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையால் குறித்த பகுதிக்கு அவரே நேரடியாக நேற்று (31) காலை சென்றார். இதன்போதே காரைநகர் பிரதேச சபை […]

பொழுதுபோக்கு

பிளாக் பாஸ்டர் ஹிட் வெற்றியை கொண்டாடும் “டிடி ரிட்டர்ன்ஸ்” டீம்

  • August 1, 2023
  • 0 Comments

சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் “டிடி ரிட்டர்ன்ஸ்”. இப்படம் காமெடி கலக்கலாக இருக்க நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வந்தது. இந்நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் வெளிவந்த 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 15 கோடி வசூல் செய்துள்ளதாம். சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் மிகப்பெரும் வசூலை கொடுத்த படமாக டிடி ரிட்டர்ன்ஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது. சந்தனாம் மார்க்கெட் இதன் மூலம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘வேலையில்லா […]

error: Content is protected !!