இலங்கை

இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்துவது குறித்து மத்திய வங்கி அறிக்கை!

  • August 2, 2023
  • 0 Comments

இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான விசேட அறிவிக்கையொன்றை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,  உள்ளூர் கொடுப்பனவுகள் மற்றும் செட்டில்மென்ட்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாவே பயன்படுத்தப்படும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலாவுக்கு இந்தியா முக்கிய ஆதாரமாக இருப்பதால், வங்கி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய […]

பொழுதுபோக்கு

நண்பரின் மகளுடன் குடித்தனம் நடத்திய 55 வயது நடிகர்… புருஷனின் லீலைகளை சந்தி சிரிக்க வைத்த மனைவி

  • August 2, 2023
  • 0 Comments

சினிமாத்துறையில் உள்ள தன் கணவனைப் பற்றி மனைவியே சொன்ன ஒரு விஷயம் தான் இப்போது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. அதாவது சாமி நடிகர் பற்றி பல கிசுகிசுக்கள் வெளிவந்திருக்கிறது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள செய்தி நம்ப முடியாத ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. அதாவது தன் நண்பரின் மகளுடன் இவர் தனியாக குடித்தனம் நடத்திய செய்தி தான் கோடம்பாக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் அந்த பெண்ணுக்கு 20 வயது தான் இருக்குமாம். 55 வயதான நடிகர் இப்படி […]

ஐரோப்பா

பழி தீர்த்த ரஷ்யா – உக்ரைன் தானிய சேமிப்பு கிடங்குகள் மீது தாக்குதல்

  • August 2, 2023
  • 0 Comments

உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தின் தெற்கில் உள்ள துறைமுகம் மற்றும் தொழில்துறை வசதிகள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் துறைமுகத்தின் அருகாமையில் உள்ள தானிய சேமிப்பு கிடங்கு ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக Izmail பகுதியை இலக்கு வைத்து ரஷ்ய ட்ரோன்கள் புறப்பட்டுள்ளதாக உக்ரைன் விமானப்படை எச்சரித்திருந்தது. உக்ரைன் தானிய ஒப்பந்தம் ரத்தான பின்னர், தொடர்ந்து உக்ரைன் துறைமுகங்களையே, ரஷ்யா குறிவைத்து தாக்கி வருகிறது.இதில் தானிய சேமிப்பு கிடங்குகள் பல சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய […]

வட அமெரிக்கா

தேர்தல் முறைகேடுகள்: ட்ரம்ப் மீது மேலும் நான்கு குற்றவியல் குற்றச்சாட்டுகள்

  • August 2, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது மேலும் நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. 2020 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்ற முற்பட்டமை, நாட்டை ஏமாற்றுவதற்காக சதி செய்தமை, சாட்சிகளைக் குழப்பியமை, அமெரிக்க பிரஜைகளின் உரிமைகளுக்கு எதிராக சதி செய்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த குற்றப்பத்திரிகையானது 2021 ஜனவரியில் ​மேற்கொள்ளப்பட்ட Capitol கலவரம் சார்ந்த விடயங்களின் விசாரணைகளை உள்ளடக்கியுள்ளது. 77 வயதான டொனால்ட் ட்ரம்ப் மீளவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார், இந்த நிலையில் அவர் […]

இலங்கை

ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பில் செல்ல முற்பட்ட இலங்கை தம்பதியினர் கைது!

  • August 2, 2023
  • 0 Comments

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதிகள் நேற்று (01.08) மாலை  கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தம்பதியினர்கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து  இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த  இளைஞனுக்கு 27 வயதும், யுவதிக்கு 28 வயதும் இருக்கும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் மீதான சந்தேகத்தின் அடிப்படையில் குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்கு அழைப்பு செய்து, அவர்கள் கொண்டு […]

இலங்கை

திருமலை – மூதூர் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர்!

  • August 2, 2023
  • 0 Comments

திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி அகஸ்தியஸ்தாபனம் பகுதியில் நேற்றய தினம்(01) காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்தவர் பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை சிவசம்பு (63) என தெரியவருகின்றது. குறித்த நபர் சிகிச்சைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கங்குவேலி – படுகாட்டுப் பகுதியில் மேற்கொண்டுவரும் வயலுக்கு இரவுநேர யானை காவலுக்காக சென்றிருந்தபோது […]

இலங்கை

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைந்துக்கொள்ள நடவடிக்கை!

  • August 2, 2023
  • 0 Comments

5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,  இந்த ஆசிரியர்கள் மாகாணத்தின் பெயருக்கு ஏற்ப விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய முக்கிய பாடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் மாகாணங்களினூடாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் […]

இலங்கை

டொலரின் பெறுமதியில் மாற்றம்!

  • August 2, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (02.08) வலுவடைந்துள்ளது. மத்திய வங்கியின் மாற்று விகிதங்களின்படி இன்றைய தினம் ஒரு டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 309.70 ரூபாவாகவும் விற்பனை விலை 322.68 ரூபாவாகவும் காணப்படுகின்றது. கடந்த ஜூலை 31ஆம் திகதி டொலரின் கொள்வனவு விலை 322.96 ரூபாவாகவும் விற்பனை விலை 335.40 ரூபாவாகவும் காணப்பட்டது.

இலங்கை

13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி முன்னெடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

  • August 2, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் ஆற்றும் உரையில் விசேட அறிக்கையொன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 13வது அரசியலமைப்பு திருத்தத்தை வலுப்படுத்துவது தொடர்பிலான பிரேரணைகளையும் அவர் பாராளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் அதிகாரங்கள் இன்றி திருத்தத்தை வலுப்படுத்தும் வகையில் அது தொடர்பான கட்டளைச்சட்டங்களை கொண்டு வருவது குறித்தும் இங்கு விளக்கமளிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழர்களின் நீண்டகால கோரிக்கையாக இருக்கும் 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் குறித்த […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கட்டுப்பாடு!

  • August 2, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 32 கோடி டன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் 95 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் என நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டியின் அறிக்கை கூறுகிறது. இந்தநிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஹோட்டல்கள் மற்றும் உணவு வினியோக நிறுவனங்களில் பிளாஸ்டிக் டப்பாக்கள், கரண்டி மற்றும் கத்திகள் போன்றவற்றை வாடிக்கையாளர் கேட்காமல் வழங்கக்கூடாது. இதனை மீறும் […]

error: Content is protected !!