இலங்கையை உலுக்கிய கோர விபத்து – கடவுசீட்டு பெற கொழும்பு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி
அனுராதபுரம் -தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உம்ரா செல்வதற்காக கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) செய்வதற்காக கொழும்புக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருக்கும் வழியில் நேற்றிரவு (03) 11.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இவ்விபத்தில் அனுராதபுரம் -கஹடகஸ்திகிலிய பகுதியில் வசித்து வரும் அப்துல் ஹக் மௌலானா, அவரது மனைவி பாத்திமா வபா, தங்கையான பாத்திமா ஆபிதா, மற்றும் சாரதி நசீம் ஆகியோர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் […]













