ஆசியா

நாளைய தினம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – ஷெபாஸ் ஷெரீப்

  • August 5, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஆகஸ்ட 9ம் திகதி கலைக்கப்படும் என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். இடைக்கால பிரதமரை தேர்வு செய்ய மூன்று நாட்கள் ஆகலாம் என்றும் அவர் கூறியுள்ளார். 342 எம்பிக்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றம் பிரதமரின் பரிந்துரைக்குப் பின்னர் 48 மணி நேரத்தில் கலைக்கப்பட்டு விடும் இதனியையே அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள தேர்்தலில் போட்டியிருவதற்காக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் திடீரென்று வெடித்து தீப்பிடித்த விமானத்தின் டயர் – தப்பிய பயணிகள்

  • August 5, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்து தீப்பிடித்துள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. வர்ஜினியாவிலிருந்து 190 பயணிகளை ஏற்றிச் சென்ற போயிங் 757 விமானம், கடந்த புதன்கிழமை மாலையில் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது திடீரென டயர் வெடித்து அதிலிருந்து நெருப்பும் புகையும் வெளிப்பட்டது. இதையடுத்து டாக்ஸி வே பகுதியில் நிறுத்தப்பட்ட விமானத்தின் அவசரகால வழியே அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். Passengers […]

வாழ்வியல்

முகத்தில் கரும்புள்ளிகள் மறைய சருமம் பொலிவு பெற இலகு வழி

  • August 5, 2023
  • 0 Comments

காய்ச்சாத பாலை எடுத்துக்கொண்டு அதை பஞ்சில் நனைத்து முகத்தை துடைத்தால் சருமத்தில் அழுக்குகள் வெளியேறும். பாலில் உள்ள லாக்டோ அமிலம் சருமத்திற்கு மிகவும் நல்ல பலனை தரும். ஐந்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் பளிச் முகத்தை பெறலாம். கற்றாழையை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக வெட்டி பிரிஸரில் போட்டு வைத்துக்கொண்டால் இறுகிவிடும். அதில் ஒரு துண்டை எடுத்து முகத்தில் ஐந்து நிமிடம் தடவி மசாஜ் செய்து வர முகம் புத்துணர்ச்சி பெறும். அதன் பிறகு ஒரு […]

பொழுதுபோக்கு

விஜய்யின் குட்டி கதை கேட்க தயாரா? வெளியானது மாஸ் அறிவிப்பு

  • August 5, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  விஜய் லியோ படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்து வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் படத்திற்கான இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஏற்கனவே ஜெயிலர் பட ஆடியோ லான்ச்சின் போது ரஜினி விஜய்யை தான் தாக்கிப் பேசியதாக சொல்லப்பட்டது. இது விஜய்க்கும் தோன்றியிருந்தால், […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் தண்ணீரை குடித்ததால் உயிரிழந்த பெண்

  • August 5, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் அதிக தண்ணீரை குடித்த ஒரு பெண் உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். வெயிலின் தாக்கம் தாங்காமல் அந்த பெண் அதிகளவில் நீர் பருகியுள்ளார். அமெரிக்க நாட்டின் இந்தியானா மாகாணத்தில் ஆஷ்லே சம்மர் எனும் ஒரு 35 வயது இளம்பெண் கடந்த ஜூலை மாதத்தில் தன் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் இந்தியானா மாகாணத்தின் லேக் ப்ரீமேன் எனும் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்கே வெயிலின் தாக்கம் தாங்காமல் அவர் அதிகளவு தண்ணீரை குடித்துள்ளார். அதாவது, 20 நிமிடங்களுக்குள் […]

வட அமெரிக்கா

நியூயோர்க்கில் இலவச பரிசு வழங்குவதாக வெளியான அறிவிப்பு – மக்கள் குவிந்தமையால் பதற்றம்

  • August 5, 2023
  • 0 Comments

நியூயோர்க் நகரில் பெரிய பரிசை இலவசமாக வழங்கப்போவதாக இணையத்தில் வெளியான தகவலையடுத்து ஆயிரக்கணக்கானோர் கூடியதால் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன் போது இந்த கூட்டத்தைக் கலைக்க நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் களமிறக்கப்பட்டனர். Kai Cenat நிறுவனம் நியூயார்க் நகரில் பெரிய பரிசு ஒன்றை வழங்கப்போவதாகத் தமது Instagram பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவர் இலவசமாக PlayStation 5 கருவிகளை வழங்கவிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே மக்கள் கூட்டம் அலைமோதியது. கடையின் கூரை, காரின் மேல் […]

இலங்கை

இலங்கையர்களுக்கு அறிமுகமாகும் டிஜிட்டல் அடையாள அட்டை!

  • August 5, 2023
  • 0 Comments

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானித்துள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கேள்விப்பத்திரம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், உரிய கால வரையறையின்படி, அவை பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது. இதன்படி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முற்பணமாக இத்திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட தொகையில் 15% சதவீதமான, அதாவது 450 மில்லியன் இந்திய ரூபா பெறுமதியான காசோலையை, இந்திய […]

ஆசியா

ஈரானை வாட்டி வதைக்கும் வெப்பம் – மக்களை வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

  • August 5, 2023
  • 0 Comments

ஈரானில் திடீரென்று அதிகரித்த கடும் வெப்பம் காரணமாக ஈரான் நாட்டில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முதியவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட அதீத வெப்பம் பதிவாகி வருகிறது. தெற்கு ஈரானில் பல நகரங்களில் தீயை உமிழ்வது போல வெயில் வாட்டி வதைக்கிறது. தெற்கு ஈரானில் உள்ள ஆவஸ் நகரில் அதிகபட்சமாக 51 டிகிரி செல்ஸியஸ் […]

இலங்கை

யாழ்ப்பாணத்திற்காக ஆரம்பமாகியுள்ள சுற்றுலா ரயில் சேவை ஆரம்பம்

  • August 5, 2023
  • 0 Comments

வடக்குக்கான ‘யாழ் நிலா’ சொகுசுரக சுற்றுலா ரயில் சேவை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை இந்த ரயில் சேவை இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதில் சர்வதேச சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட தரப்பினர் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10 மணியளவில் புறப்படவுள்ள ‘யாழ் நிலா’ […]

ஆசியா

சீனாவில் சுட்டெரிக்கும் வெயில் – செல்லப்பிராணிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

  • August 5, 2023
  • 0 Comments

சீனாவில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் கடுமையாக பாதிக்கப்படும் செல்லப்பிராணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செல்லப்பிராணிகள் பாதுகாக்க மக்கள் பல்வேறு வழிமுறைகளை கடைபிடித்து வருகின்றனர். தாங்கள் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட 4 கால் நண்பர்களை பாதுகாக்க சிறப்பு குளிரூட்டி உடைகள், குளிர்ச்சியான பாய்கள், தொப்பிகள் உள்ளிட்டவற்றை வாங்கி அவற்றுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாய்களின் பிரத்யேக உடைகளுக்கு 70 முதல் 80 டாலர்கள் வரை செலவழிக்க தயாராக உள்ளனர். சீனாவில் தம்பதிகள், குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக செல்லப்பிராணிகளை தத்தெடுத்து […]

error: Content is protected !!