மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு!
மிஹிந்தலை பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, மிஹிந்தலை தம்மனாவ வெவயில் மீன்பிடிக்கச் சென்ற மூவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிஹிந்தலை பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, மிஹிந்தலை தம்மனாவ வெவயில் மீன்பிடிக்கச் சென்ற மூவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு நடிகர் சத்யராஜின் தாயாரின் இறுதி சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவாரம்பாளையம் மின் மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யபடவுள்ளது. அமொரிக்கவில் இருந்து சத்தியராஜின் தங்கை வருவதால் ஞாயிற்றுக்கிழமை இறுதி சடங்கு நடைபெறும் என தகவல் தெரிவித்துள்ளனர். முதலாம் இணைப்பு… நடிகர் சத்யராஜ் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் ஆகும்.இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் […]
குழந்தைகளின் கூச்சல் பிடிக்காத 43 வயதான நபர் 9 வயது குழந்தையை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரின் போர்ட்கேஜ் பார்க் பகுதியில் தன் தந்தையுடன் வசித்து வந்தவர் சிறுமி ஸெரபி மெதினா (9). அவர்களின் வீட்டின் தெருவின் எதிர் புறத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் மைக்கேல் குட்மேன் (43). இந்நிலையில் அந்த பகுதியில் குழந்தைகள் விளையாடுவதால் சத்தம் அதிகமாக இருப்பதாக குறை கூறி வந்தார். குழந்தைகளால் அதிக சத்தம் […]
பிரபல நடிகையும், முன்னாள் எம்.பியுமான ஜெயப்பிரதாவுக்கு எழும்பூர் நீதிமன்றம் 6 மாத காலம் சிறை தண்டனை விதித்துள்ளது. தமிழில் மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், ஏழை ஜாதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா. தெலுங்கு நடிகையான இவர் இந்தி, மராத்தி, பெங்காலி மொழிப்படங்களிலும் நடித்து பிரபலமானவர். முன்னாள் எம்.பியான இவர் நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான ESI பணத்தை, அரசு தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை […]
கிழக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்ட தாக்குதலில் குறைந்தது 23 சிரிய வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் கிழக்கு டெய்ர் அல்-ஸூர் மாகாணத்தில் உள்ள இராணுவப் பேருந்தை ஜிஹாதிகள் சுற்றி வளைத்ததாக ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் 10 க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காணவில்லை என்று கூறப்படுகிறது. ஐ.எஸ் தீவிரவாதிகளால் […]
யாழ். மண்டைதீவு வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் அனுசரனையில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த இலவச மருத்துவ முகாம், 8ஆம் திகதி காலை 8 மணி முதல் 12 மணி வரை மண்டைதீவு வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த மருத்துவமுகாமில் இலவச நீரிழிவு பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பரிசோதனை தேவையானவர்களுக்கு விஷேட வைத்திய நிபுணர்களின் பரிசோதனையும் மருந்து வழங்கலும் இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் 150 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடியும் […]
வடக்கு மாகாணத்தின் எல்லைகளில் நடைபெறும் சடடவிரோத செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருக்கும் அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (11.08.2023) ஆளுநர் அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் எல்லைப்பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத பயணங்கள், கடல் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்டன் அவுஸ்திரேலியப் எல்லைப்பாதுகாப்பு படையின் முதனிலை செயலாளர் பிராண்ட் இசண்ட அவர்களின் குழு, மற்றும் இலங்கை சுங்கத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் […]
தென் கொரியாவை புரட்டிபோட்டுள்ள கனுன் புயலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனுன் புயல் கரையை கடந்து இருக்கும் நிலையில், தென்கொரியாவில் சங்வோன் உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தண்ணீரில் சிக்கிய பொதுமக்கள் 10,000த்திற்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதே போல் மீட்புப் படை வீரர்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழை மற்றும் வெள்ளப்பாதிப்பு காரணமாக 350 விமானங்கள் மற்றும் […]
வடமாகாண படசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்களை கௌரவித்து வரவேற்கும் நிகழ்வு இன்று (9) வியாழக்கிழமை மாலை பாடசாலையில் இடம் பெற்றது.பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மடு வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.கே.வொலன்ரைன் கலந்து கொண்டார். சாதனை வீரர்கள் பவனியாக பாடசாலை வரை அழைத்து வரப்பட்டு வாத்திய இசையுடன் பாடசாலை மண்டபம் நோக்கி […]
வெள்ளவத்தை, பெட்ரிகா வீதி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் வெள்ளவத்தையைச் சேர்ந்த 24 வயதுடையர் என தெரியவந்துள்ளது. இளைஞர் மயங்கி விழுந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன