ஆசியா

சீனா-நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • August 12, 2023
  • 0 Comments

சீனாவின் சியான் நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் சீனாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்றும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை

மாஸ்கோவில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!

  • August 12, 2023
  • 0 Comments

மாஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமையுடன் (SLFEA) இணைந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாயப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து  மாஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த முயற்சியில் கீழ் முதல் முறையாக 58 தையல்காரர்கள் முன்னணி ஜவுளி ஆலைகளில்  பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல்   இலங்கையின் திறமையான தையல்காரர்களுக்கு 700 இற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு Nizhny Novgorod இல் உள்ள பிராந்திய அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் […]

பொழுதுபோக்கு

பிரபல நடிகைக்கு 6 மாதம் சிறை தண்டனை! சென்னை நீதிமன்றம் உத்தரவு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகைக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கமல்ஹாசன் நடித்த ’மன்மத லீலை’ ’சலங்கை ஒலி’ ’நினைத்தாலே இனிக்கும்’ ’தசாவதாரம்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. இவர் அரசியலிலும் இன்னும் சில கட்சிகளில் இருந்து உள்ளார் என்பதும் தற்போது அவர் பாரதிய ஜனதாவில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த […]

இலங்கை

யாழ். கல்வியங்காடு பகுதியில் வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

  • August 12, 2023
  • 0 Comments

யாழ்.கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் 54 வயதான குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி நேற்றையதினம் திருமணச் சடங்கிற்கு சென்றவேளை குடும்பஸ்தர் தனிமையாக வீட்டில் இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை உறவினரொருவர் இவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்த உறவினர் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து […]

இலங்கை

13ஆவது திருத்தம் குறித்த நிலைபாட்டை கோட்டாபய அறிவிக்க வேண்டும்!

  • August 12, 2023
  • 0 Comments

13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். குறித்த திருத்தத்திற்கு எதிராக ஆணை பெற்று ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச, பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்குத் தயாராகும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடு தொடர்பில்  மௌனமாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் கூறுகிறார். நாட்டின் ஐக்கியத்தை உறுதிப்படுத்தவும் அதற்காகவே புதிய அரசியலமைப்பை கொண்டு வரவும்  கோட்டாபய ராஜபக்ஷ அறுபத்தொன்பது இலட்சம் […]

இலங்கை

கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான வர்த்தமானி!

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு திரைப்படங்கள், மேடை நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்காக எந்தவொரு தனிநபர் / நிறுவனத்திடமிருந்து அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது செயல்திறன் சட்டத்தின் கீழ் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொது செயல்திறன் சட்டத்தின் கீழ் இலங்கையில் பொது கண்காட்சிக்கான சட்டப்பூர்வ உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு நபரும் / நிறுவனமும், கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி அந்தந்த விண்ணப்பத்தின் துணையுடன் உரிமக் கட்டணத்தை செலுத்த வேண்டும்: அதன்படி வெளிநாட்டு படங்களுக்கான உரிமக் கட்டணம் […]

பொழுதுபோக்கு

காதலித்து ஒரே வீட்டில் தங்கிவிட்டு கடைசியில் அமீரை ஏமாற்றிய பாவனி??

  • August 12, 2023
  • 0 Comments

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னதம்பி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி, பிக் பாஸ் 5வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார் நடிகை பாவனி ரெட்டி. பாவனியை அமீர் ஒரு தலையாக காதலித்து வந்தார். பின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் இருவரும் ஒன்றாக இருந்து வருகிறார். ஒரே பிளாட்டில் பாவனி அமீருடன் சேர்ந்து தங்கிக் கொள்ளுமாறு பாவினியின் அம்மாவே ஓகே சொல்லிவிட்டதாகவும். மேலும் அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்க […]

இலங்கை

போலி கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்க வந்த இருவர் கைது!

  • August 12, 2023
  • 0 Comments

போலியாக தயாரிக்கப்பட்ட சீன நாட்டின் கடவுச்சீட்டை பயன்படுத்தி நெதர்லாந்து செல்ல முயற்சித்த இரு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க  விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் வைத்து குறித்த இருவரும் இன்று (12.08) கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைதான இருவரும் திபெத் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சுற்றுலா விசாவில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி இலங்கை வந்துள்ளனர். இந்நிலையில், இன்று சனிக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் அல் […]

இந்தியா

வயநாடு செல்லும் எம்.பி. ராகுல் காந்தி!

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டமையால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிபோனது. இத் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யானார். இந்த நிலையில் அவர் தனது தொகுதியான வயநாட்டை பார்வையிட செல்வதற்காக இன்றும், நாளையும் திட்டமிட்டு உள்ளார். முன்னதாக ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும் பயணம் செய்யவுள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை 9 மணிக்கு கோவை விமான […]

இலங்கை

நீர் கொழும்பில் துப்பாக்கிச்சூடு -ஒருவர் பலி!

  • August 12, 2023
  • 0 Comments

நீர்கொழும்பு கடற்கரைப் பகுதியில் இன்று (12.08) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் சுடப்பட்ட குறித்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிடிபன பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை டங்கல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!