வட அமெரிக்கா

டிரம்ப் 2024ஆம் ஆண்டு தேர்தலில் களமிறங்குவதில் கடும் சிக்கல்..?

  • August 16, 2023
  • 0 Comments

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டிரம்ப் மீது ஜார்ஜியா விசாரணை குழு 98 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2020 அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டு வென்ற தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி […]

இலங்கை

திருகோணமலையில் வயோதிபரின் மோசமான செயல் – சுற்றிவளைத்த பொலிஸார்

  • August 16, 2023
  • 0 Comments

  திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். கன்தளாய் பிராந்தியத்துக்கு பொறுப்பான குற்றத் தடுப்பு பிரிவினரும் மொரவெவ பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபரின் வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 25,000 மில்லி லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹதிவுல்வெவ -சுவர்ணஜயந்திபுர பகுதியைச் சேர்ந்தவர் (65வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு […]

அறிந்திருக்க வேண்டியவை

வரலாற்றின் மிக வெப்பமான ஆண்டாக 2023ஆம் ஆண்டு பதிவு

  • August 16, 2023
  • 0 Comments

வரலாற்றில் இவ்வாண்டு மிக வெப்பமான ஆண்டாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு 50 சதவீத சாத்தியம் உள்ளதாக அமெரிக்கப் பெருங்கடல், காற்று மண்டல நிர்வாக அமைப்பு கூறியுள்ளது. வரலாற்றில் ஆக வெப்பமான ஆண்டுகளின் பட்டியலில் 2023ஆம் ஆண்டு முதல் 5 இடங்களில் இடம்பெறும் என்று 99 சதவீதம் உறுதியாகச் சொல்லலாம் எனக் கூறப்பட்டது. மிக வெப்பமான மாதமான ஜூலை மாதம் காணப்படும். கடந்த மாதம் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட ஆக வெப்பமான ஜூலை என்று அமெரிக்க விண்வெளி […]

பொழுதுபோக்கு

6வது நாளிலும் கொட்டும் பணமழை.. அக்கட தேசத்திலும் பட்டையை கிளப்பும் ஜெயிலர்

  • August 16, 2023
  • 0 Comments

சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது ஜெயிலர். 5 நாள் கலெக்ஷனே சுமார் 300 கோடியை பார்த்துள்ள நிலையில், விடுமுறை நாளிலும் திரையரங்கில் 80 சதவீதம் பார்வையாளர்கள் நிரம்பி வழிந்தனர். தற்போது இது 400கோடியை நெருங்கி உள்ளது. இத்தகைய கலெக்ஷன் பல பிரமாண்ட படைப்புகளை முறியடித்து சாதனை படைத்து வருகிறது. தற்போது இப்படத்தின் 6 நாள் கலெக்ஷன் அக்கடதேச படங்களின் கலெக்ஷனை முறியடித்துள்ளது. அந்த வகையில், ஆதிபுருஷ், பொன்னின் செல்வன் 2 போன்ற படங்களின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

iPhoneஇல் ஏற்படவுள்ள மாற்றம் – பயனாளர்களுக்கு முக்கிய தகவல்

  • August 16, 2023
  • 0 Comments

iPhone கையடக்க தொலைபேசி யாருடன் அழைப்பில் இருந்தாலும் அதைத் துண்டிக்க, சிவப்புப் பொத்தான் ஒன்று இருக்கும் நிலையில் அதனை மாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுவாக திரையின் கீழ்ப் பகுதியில், நடுவே அந்தப் பொத்தான் இருக்கும். எனினும் இனி அந்தப் பொத்தான், விரைவில் சற்றே இடம்மாறவுள்ளது. மேம்படுத்தப்பட்ட iOS 17 மென்பொருளில், அழைப்புகளை நிறுத்தும் சிவப்புப் பொத்தான் (red end-call button) வலப் பக்கத்துக்கு நகர்த்தப்படும். தற்போது தனியாக இடம்பெறும் ‘அழைப்புகளை நிறுத்தும் பொத்தானுக்கு’ அருகே மற்ற சில பொத்தான்களும் […]

உலகம்

டொமினிகன் குடியரசில் ஏற்பட்ட பரபரப்பு – மர்ம பொருள் வெடித்து 10 பேர் பலி

  • August 16, 2023
  • 0 Comments

கரீபியன் தீவுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசின் தலைநகரான சான் கிறிஸ்டோபலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் மர்மபொருள் வெடித்தது. நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஒரு கட்டிடத்தின் உள்ளே நிகழ்ந்த இந்த சக்திவாய்ந்த வெடிப்பை தொடர்ந்து அருகில் இருந்த கடைகளில் தீ பரவியது. இதில், 4 மாத குழந்தை உட்பட 10 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர். 11 பேர் காணவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் […]

இலங்கை

இலங்கையில் மின்வெட்டு ஏற்படுமா? அமைச்சர் விளக்கம்

  • August 16, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் நிலவரங்கள் தொடர்பான உண்மைகளை விளக்கும் விசேட செய்தியாளர் மாநாடு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் நடைபெற்றது. மின்வெட்டு ஏற்படும் அபாயம் தற்போது வரை இல்லை என்று அமைச்சர் கூறினார். தென் மாகாணம், தேசிய கட்டத்துடன் இணைக்கும் கேபிள் பிரிவு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் திறக்க முடியும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – போரில் கடும் நெருக்கடி

  • August 16, 2023
  • 0 Comments

உக்ரைனின் இராணுவ வளங்கள் பெருமளவு தீர்ந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு இதனை தெரிவித்துள்ளார். கிய்வ் பகுதியில் இழந்த பிரதேசத்தை மீண்டும் கைப்பற்ற ஒரு கடுமையான எதிர் தாக்குதலை உக்ரைன் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘மேற்கத்தேய நாடுகளின் விரிவான உதவிகள் இருந்தபோதிலும், உக்ரைனின் ஆயுதப்படையினரால் இலக்கை அடைய முடியவில்லை” ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த போரின் ஆரம்ப […]

வாழ்வியல்

மனதை பாதிக்க வைக்கும் தூக்கமின்மை!

  • August 16, 2023
  • 0 Comments

நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தூக்கமின்மை தான் காரணமாக இருக்கின்றது. சரிவர தூக்கமின்மை என்பது உடல்நிலை மட்டுமல்லாமல் மனநிலையையும் பாதிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. உடல் மனம் இரண்டும் ஒன்றோடு ஒன்று நிறுத்திய தொடர்பு கொண்டது. உடல் பாதிக்கப்பட்டால் மனம் பாதிக்கப்படும். அதுபோல மனநிலையும் பாதிக்கப்படும். இவற்றை இரண்டையும் சரி வர காப்பாற்றிக்கொள்ள நமக்கு நல்ல தூக்கம் அவசியம். அந்த தூக்கத்தை பெற கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம். தூங்குவதற்கு முன்னதாக ஒரு டம்ளர் பால் அருந்தினால் […]

ஆசியா

ஜப்பானை உலுக்கிய லான் புயல் – ஏற்பட்டுள்ள கடும் சேதம்

  • August 16, 2023
  • 0 Comments

ஜப்பான் நாட்டில் வீசிய லான் புயல் காரணமாக அங்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகின்றது. அந்த புயல் கரையை கடந்த போது அங்கு பலத்த மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் அங்கு பாயும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குறிப்பாக மேற்கு ஜப்பானில் பாயும் ஆற்றில் சேறுடன் கலந்த வெள்ளம் சீறிப் பாய்ந்த படி சென்றது.  

error: Content is protected !!