வட அமெரிக்கா

கனடாவில் அடையானம் காணப்பட்டுள்ள புதிய வகை கோவிட் திரிபு..!

  • August 30, 2023
  • 0 Comments

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த புதிய வகை கோவிட் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பிரிட்டிஷ் கொலம்பிய பொது சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பிஏ 2.86 என்னும் புதிய வகை கோவிட் திரிபு முதல் தடவையாக கனடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வரும் கோவிட் திரிபுகளில் ஒன்றாக இந்த கோவிட் திரிபு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் தொற்று முதல் தடவையாக கனடாவில் பதிவாகியுள்ளதாகவும் இந்த திரிபின் வீரியம் மற்றும் […]

ஐரோப்பா

பிரிகோஜினின் மரணம் குறித்து சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப்படாது – ரஷ்யா!

  • August 30, 2023
  • 0 Comments

வாக்னர் கூலிப்படையினரின் தலைவர் பிரிகோஜினின் மரணம் தொடர்பில் சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமளிக்கப்படாது என ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள க்ரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த விபத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதை கவனத்தில் கொண்டு  விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் போரில்  வாக்னர் குழுவினர் பெரும்பாலான வெற்றிகளை ரஷ்யாவிற்கு தேடி தந்துள்ளனர். போரில் இவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக  பார்க்கப்படுகிறது. இதற்கிடையே போரில் ஈடுபட தேவையான ஆயுதங்களை […]

இலங்கை

மன்னாரில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்(Photos)

  • August 30, 2023
  • 0 Comments

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இலங்கை அரசாங்கத்தின் முப்படைகளால் யுத்ததிற்கு முன்பும் யுத்ததிற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் புதன் கிழமை மன்னார் சதோச மனித புதைகுழிய்யில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி இடம் பெற்றது வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்,பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,சட்டத்தரணிகள்,அருட்தந்தையர்கள்,உட்பட பலர் இணைந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். மன்னார் சதோச மனித புதைகுழியில் ஆரம்பமான குறித்த போராட்டம் […]

இலங்கை

மூவாயிரம் தாதியர்கள் ஆட்சேர்ப்பு! சுகாதார அமைச்சர் உத்தரவு

இலங்கையின் சுகாதாரத் துறைக்கு 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பணிப்புரை விடுத்துள்ளார். ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் அமைச்சரவைப் பிரேரணையைத் தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று (ஆகஸ்ட் 29) நடைபெற்ற அமைச்சின் தாதியர் துறையின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஐரோப்பா

தலைநகர் கீவ் மீது ரஷ்யா குண்டு வீச்சு – இருவர் பலி!

  • August 30, 2023
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் மற்றும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. மேற்கத்திய நாடுகளின் உதவியோடு […]

இலங்கை

மாத்தறைப் பகுதியில் தாயை கொலை செய்த மகன்!

  • August 30, 2023
  • 0 Comments

மாத்தறை பங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இன்று (30.08) கொலை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயதுடைய நபரொருவர் தனது தாயை தெப்பத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். சந்தேக நபர் சில காலமாக மனநல சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வருடம் குணமடைந்து வீடு திரும்பியதாகவும், பல்வேறு கூலி வேலைகளை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த இவர், இரவில்  தனது சகோதரரின் வீட்டில் […]

ஆசியா

10நிமிடங்களுக்கு விடாமல் காதலிக்கு உதட்டு முத்தம்… கேட்கும் திறனை இழந்த சீன வாலிபர்…!

  • August 30, 2023
  • 0 Comments

காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை நல்ல மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகின்றன. என்றாலும் அதிலும் பல்வேறு பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. சீனாவை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி அடிக்கடி பல இடங்களுக்கு சென்று தங்களின் காதலை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் இருவரும் சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றனர். அப்போது […]

இலங்கை

இலங்கை இனியும் வேறு நாடுகளுக்கு சுமையாக இருக்கக்கூடாது – ரணில்!

  • August 30, 2023
  • 0 Comments

இலங்கையின் பொருளாதாரத்தை முற்றாக மறுசீரமைக்க தாம் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாகவும், போட்டியை எதிர்கொண்டு புதிய சந்தைகள், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மூலதனத்தை ஈர்ப்பதற்காக தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளின் பாதையை பின்பற்றுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அரலியகஹா மன்றில் ‘இலங்கையின் நிலையான அபிவிருத்தி நோக்குநிலை’ என்ற தலைப்பில் நடைபெற்ற அறிஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை இனியும் […]

இந்தியா

சர்ச்சையை எழுப்பும் சீனாவின் புதிய வரைபடம்: இந்தியா கடும் எதிர்ப்பு

இந்தியா தனது பிராந்தியத்திற்கு உரிமை கோரும் புதிய வரைபடத்திற்கு சீனாவிடம் “கடுமையான எதிர்ப்பை” தெரிவித்துள்ளதாக கூறுகிறது. இந்த வரைபடத்தில் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பீடபூமி ஆகியவை சீனாவின் எல்லையாக இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் இயற்கை வள அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது. இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், “இந்த கூற்றுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதால் நாங்கள் நிராகரிக்கிறோம். சீனாவின் இத்தகைய […]

பொழுதுபோக்கு

திருமணமாகாமல் நெருக்கம்… ரோபா சங்கர் மகள் வெளியிட்ட புகைப்படம்

  • August 30, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வளம் வருபவர் ரோபோ சங்கர். சில மாதங்களுக்கு முன் அதிகப்படியான மதுப்பழக்கத்தால் மஞ்சள் காமாலை ஏற்பட்டு படுமோசமாக உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். இதுகுறித்து சமீபத்தில் விளக்கமும் அளித்தார் ரோபோ சங்கர். இதனைதொடர்ந்து நோயில் இருந்து மீண்டு வருவதாகவும் நீங்களுக்கு கெட்ட பழக்கத்தை தவிருங்கள் என்றும் தெரிவித்திருந்தார். ரோபா சங்கர் அவரது மகள் இந்திரஜாவை பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்து வைத்தார். பிரபலமான இந்திரஜா, […]

error: Content is protected !!