இலங்கை செய்தி

யாழ்ப்பாணம்: சிறுமியை துஷ்பிரயோகம் செய்த உறவினருக்கு விளக்கமறியல்.

  • December 11, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் 13 வயதுச் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு சிறுமியை அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பாக கடந்த 08 ஆம் திகதி மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து, பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர் அவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. சந்தேகநபர் குறித்த சிறுமிக்கு மாமன் முறையிலான உறவினர் என […]

உலகம் செய்தி

பிப்ரவரி 12ம் திகதி வங்கதேசத்தில் தேர்தல்

  • December 11, 2025
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) பிப்ரவரி 12, 2026 அன்று தேர்தல் நடைபெறும் என்று நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உதீன்(A.M.M. Nasir Uddin) அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் டிசம்பர் 29ம் திகதிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தலில் இருந்து வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி திகதி ஜனவரி 20 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 127.6 மில்லியனுக்கும் அதிகமாகும். வங்கதேசம் முழுவதும் உள்ள 300 நாடாளுமன்றத் […]

இலங்கை செய்தி

மீள்கட்டமைப்பு நிதியத்திற்கு மெகா பொறியியல் நிறுவனத்தின் நன்கொடை.

  • December 11, 2025
  • 0 Comments

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Maga Engineering (Pvt) Ltd நிறுவனம் 25 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது. குறித்த காசோலையை நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் எம். பியதாச, இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். அந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான ரொஷான் மதரசிங்கவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

இலங்கை செய்தி

இடர்பாடுகள் இருந்தும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி வேகம் அதிகரிப்பு!

  • December 11, 2025
  • 0 Comments

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 8 வரை இலங்கைக்கு 2.15 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுற்றுலாத் துறை வேகமான மீட்சியைக் காட்டுகிறது. 2019 ஈஸ்டர் தாக்குதல்கள், கோவிட்-19, மேலும் அண்மைய டிட்வா புயல் போன்ற சவால்களுக்குப் பிறகு இந்ததுறை மீண்டும் வளர்ச்சி பாதையில் நகர்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் மாத்திரம் 50,222 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். நவம்பர் மாதமும் கடந்த […]

செய்தி

இலங்கைக்குப் பெருமை: சர்வதேச UCMAS மட்டப் போட்டியில் 58 மாணவர்கள் அசத்தல் வெற்றி.

  • December 11, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்கள். இவர்களில் திருநெல்வேலி, நல்லூர், சுண்டிக்குளி UCMAS பயிற்சி நிலைய மாணவர்கள் 8 பேர் பங்கேற்று வெற்றி கிண்ணங்களைப் பெற்று இலங்கைக்கும் யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். அவர்களில் விநாயகிருஷ்ணன் கோபிகிருஷ்னா சம்பியன் வெற்றி கிண்ணத்தத்தையும் மற்றும் அஷ்வினி அனோஜன், அபூர்விகா ரகுநாதன் 1 st runner up வெற்றி கிண்ணங்களையும், வினோஷ்கா […]

இலங்கை

முன்னாள் சபாநாயகர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது

  • December 11, 2025
  • 0 Comments

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி சப்புகஸ்கந்த தெனிமல்ல பகுதியில் இன்று (11) இரவு காருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் காரில் ஒரு பெண்ணும் சிறு குழந்தையும் இருந்துள்ளதுடன், அவர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பெண் கிரிபத்கொடை வைத்தியசாலையிலும், சிறு குழந்தை சிகிச்சைக்காக ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் விபத்தில் காயமடைந்த அசோக ரன்வலவும் சிகிச்சைக்காக கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது விபத்துக்குள்ளான வாகனங்கள் பொலிஸ் பொறுப்பில் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய முதலீடுகளுக்குப் புதிய வழிகாட்டி: ‘இலக்கு சார்ந்த ஆதரவு’ திட்டம் அறிவிப்பு.

  • December 11, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் முதலீடுகள் மற்றும் ஓய்வூதியங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும் மக்களுக்கு உதவுவதற்காக, நிதி ஒழுங்குபடுத்தும் ஆணையம் (FCA) ஒரு புதிய ‘இலக்கு சார்ந்த ஆதரவு’ (Targeted Support) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது அடுத்த ஆண்டு ஏப்ரல் 2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்ற அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், ஒரே மாதிரியான குழுக்களின் அடிப்படையில் முதலீடு மற்றும் ஓய்வூதிய பரிந்துரைகளை வழங்க அனுமதிக்கப்படும். இது தனிப்பட்ட ஆலோசனைக்கும் பொதுவான […]

இந்தியா செய்தி

சென்னை, வேலூர் உட்பட 7 மாவட்டங்களில் ஸ்கரப் டைபஸ் பாதிப்பு உயர்வு.

  • December 11, 2025
  • 0 Comments

தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் என அறியப்படும் ஸ்கரப் டைபஸ் பாதிப்பு பரவாமல் தடுக்கச் சுகாதா​ரத் துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ரிக்​கட்​ஸியா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணி கடிப்பதன் மூலம் இந்த நோய் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் இதன் முக்கிய அறிகுறிகளாகும். சென்​னை, காஞ்​சிபுரம், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆந்திராவில் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், […]

இலங்கை செய்தி

இந்திய இராணுவத்தால் மஹியங்கனை தகவல் தொடர்பு மீளமைப்பு.

  • December 11, 2025
  • 0 Comments

கண்டிக்கு அருகிலுள்ள மஹியங்கனை பகுதியில் டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட முக்கிய தகவல் தொடர்பு உட்கட்டமைப்பு, இந்திய இராணுவத்தின் சத்ருஜீத் படைப்பிரிவின் ஒருங்கிணைந்த பணிக்குழுவால் மீண்டும் செயற்படுத்தப்பட்டது. புயல் காரணமாக ஆப்டிகல் ஃபைபர் கேபிள் (OFC) வலையமைப்பு சேதத்துக்குள்ளானதால் அந்த பகுதியில் முழுமையான தகவல் தொடர்பு துண்டிப்புக்கு உள்ளானதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை டெலிகாம் (SLT-Mobitel) அவசர உதவி கோரியதைத் தொடர்ந்து, இந்திய இராணுவ சமிக்ஞை பிரிவு குழுக்கள் உடனடியாக செயற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இந்தியா செய்தி

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு பறிமுதல் – 11 பேர் கைது

  • December 11, 2025
  • 0 Comments

இந்தியக் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாகச் நுழைந்த பாகிஸ்தான்(Pakistan) மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படை(ICG) பறிமுதல் செய்துள்ளது. மேலும், குறித்த படகில் இருந்து 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குஜராத்தில்(Gujarat) உள்ள ஜகாவ் மரைன்(Jakhau Marine) காவல்துறையிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படை துரித நடவடிக்கையாக பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் 11 பணியாளர்களுடன் ஒரு பாகிஸ்தான் மீன்பிடிப் படகைக் கைது செய்தது என்று குஜராத் […]

error: Content is protected !!