கஞ்சா பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை!
கஞ்சாவை மருத்துவ மூலிகையாக பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கஞ்சாவை மருத்துவ மூலிகையாக பயிரிட அனுமதி வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவு செலவுத் திட்ட முன்மொழிவை முன்வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். நேற்று (05.09) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஆயுர்வேத மூலிகைகளை மூலப்பொருளாக ஏற்றுமதி செய்வதை […]













