இலங்கை செய்தி

திருகோணமலை சலப்பையாறு: வீதி ஓரத்தில் வயோதிபப் பெண் சடலம்

  • December 12, 2025
  • 0 Comments

திருகோணமலை -சலப்பையாறு பகுதியில் வீதி ஓரத்தில் வயோதிப பெண்ணொருவரின் இன்று (12) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் குச்சவெளி சலப்பையாறு பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரி செல்வராஜா (56வயது) எனவும் தெரியவந்துள்ளது. பக்கத்து வீட்டுக்கு சென்று வராத போது கணவர் தேடிச்சென்ற போது வீதியோரத்தில் குளிர் காரணமாக போத்திச் சென்ற பெட்சீட் வீதி ஓரத்தில் இருந்ததாகவும் சற்று தூரத்தில் அவர் வீசி எறியப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. குறித்த இடத்தில் தடய பொருட்களாக கண்ணாடி துண்டுகள் […]

உலகம்

‘ஒபாமாகேர்’ திட்டம் முடிவுக்கு வருகிறது – அமெரிக்கர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • December 12, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் ஒபாமாகேர் காப்பீட்டுத் திட்டத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதற்கான மானியம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் போட்டி போட்டு செயல்படுவதால் அந்தக் காப்பீட்டுத் திட்டத்திற்கான மானியத்தை நீட்டிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் ஒன்று மற்றொன்றுக்குப் போட்டியாக உத்தேச திட்டங்களை தாக்கல் செய்தன. ஆனால் இரு திட்டங்களையும் இரு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் நிராகரித்துள்ளனர். இதனால் ஒபாமாகேர் திட்டத்திற்கான மத்திய அரசாங்கத்தின் மானியம் 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியுடன் காலவதியாக […]

உலகம்

ஈரான் மற்றொரு பேரழிவை சந்திக்க நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

  • December 12, 2025
  • 0 Comments

ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை ஒப்பந்தம் இல்லாமல் புதுப்பிக்க முயன்றால், அது மற்றொரு பேரழிவு தரும் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி திறன்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். தாக்குதல்களுக்கு முன்பு ஈரான் ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் பேரழிவைத் தவிர்த்திருக்கலாம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். “அணுசக்தியை மறந்துவிடுங்கள். அணுசக்தி […]

செய்தி

மண்சரிவுகளின் எதிரொலி – இலங்கையின் மலைநாட்டு புவியியல் அமைப்பில் மாற்றம்?

  • December 12, 2025
  • 0 Comments

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக இலங்கையின் மத்திய மலைநாட்டின் புவியியலில் அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் நிலப் பயன்பாட்டு வரைபடத் தொடரை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் என்.கே.யு.ரோஹன தெரிவித்துள்ளார். கடந்த 28,29,30ஆம் திகதிகளில் இலங்கையை தாக்கிய டிட்வா சூறாவளி காரணமாக வரலாற்றில் மிகப்பெரிய இயற்கையின் கோரத்தாண்டவத்தை இலங்கை சந்தித்திருந்தது. இந்த சூறாவளியால் இலங்கையின் மத்திய மலைநாட்டின் பகுதிகள் பெரும் அழிவை சந்தித்திருந்தன. நுவரெலியா, பதுளை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு […]

ஐரோப்பா

உக்ரேன் குழந்தைகளை வடகொரியாவிற்கு அனுப்பிய ரஷ்யா!

  • December 12, 2025
  • 0 Comments

ரஷ்யாவால் கடத்தப்பட்ட உக்ரேனிய குழந்தைகள்  வடகொரியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை  பிரச்சாரகர்கள் தெரிவித்துள்ளனர். கியேவை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான பிராந்திய மையம், உக்ரேனிய குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் உள்ள ஒரு முகாமுக்கு அனுப்பப்பட்ட பல  வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது. இவ்வாறு நாடு கடத்தப்பட்ட குழந்தைகள், வடகொரியாவில் இராணுவமயமாக்கல் மற்றும் அரசியல் போதனைகளை” எதிர்கொண்டதாகவும், இது குழந்தைகள் இடையே கடுமையான உளவியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது” என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். டொனெட்ஸ்க் (Donetsk) பகுதியைச் சேர்ந்த 12 […]

இலங்கை

இலங்கையில் அரிசி பற்றாக்குறை ஏற்படுமா? முக்கிய ஆராய்ச்சியாளர் வெளியிட்ட கருத்து

  • December 12, 2025
  • 0 Comments

இயற்கை பேரிடர் காரணமாக இலங்கையில்  நெல் சாகுபிடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் ஆண்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படாதென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உணவு முறைகள் பிரிவின் தலைவரும் மூத்த ஆராய்ச்சியாளருமான டபிள்யூ.எம். துமிந்த பிரியதர்ஷன கூறுகிறார். “இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிவரை, இயற்கை அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து எட்டாயிரம் (108,000) ஹெக்டேர் நெல் சாகுபடி முழுமையாக சேதமடைந்துள்ளது. இந்த சூழ்நிலையானது நெல் சாகுபடிக்கு ஏற்பட்ட சேதத்தைக் கருத்தில் கொண்டு, […]

இலங்கை

பொறுப்பற்ற செயல் – அசோக ரன்வல கைது!

  • December 12, 2025
  • 0 Comments

சப்புகஸ்கந்தையில் நேற்று இரவு நடந்த விபத்து சம்பவம் தொடர்பாக முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் விபத்தைத் தவிர்க்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் எம்.பியாகும் ரணில் 

  • December 12, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணத்தில் இருப்பதாக எதிர்க்கட்சியின் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்திருந்த ரணில் விக்ரமசிங்க, 2021ஆம் ஆண்டு மீண்டும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரகலய போராட்டத்தின் பின்னர் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் நாட்டின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக உருவெடுத்திருந்தார். கடந்த ஆண்டு […]

இலங்கை

கர்ப்பிணி தாய்மாருக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை!

  • December 12, 2025
  • 0 Comments

தற்போது நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு  5,000 ரூபாய் ஊட்டச்சத்து உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 2025 நவம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் தாய்வழி மருத்துவமனைகளில் பதிவுசெய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஒரு முறை உதவித்தொகை வழங்கப்படும். பிரதேச செயலக அலுவலகங்கள் மூலம் டிசம்பர் 16 ஆம் திகதி இந்த தொகை விநியோகிக்கப்படும் பண்டிகைக் காலத்தில் தாய்வழி […]

ஐரோப்பா செய்தி

போர் பேச்சுவார்த்தைகளில் விரக்தியடைந்துள்ள ட்ரம்ப் – அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கை!

  • December 12, 2025
  • 0 Comments

உக்ரைனில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உண்மையான வாய்ப்பு இருந்தால் மட்டுமே ஐரோப்பிய பேச்சுவார்த்தைகளுக்கு பிரதிநிதி ஒருவரை அனுப்பவுள்ளதாக அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போர் பற்றிய அமைதி பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினராலும் ட்ரம்ப் விரக்தியடைந்துள்ளதாகவும், எந்த முன்னேற்றத்தையும் தராத சந்திப்புகளால் சோர்வடைந்துள்ளார் என்றும் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட்  (Karoline Leavitt) கூறினார். தனது சொந்த நலனுக்காக தொடர்ந்து விவாதங்களை நடத்துவதற்குப் பதிலாக, மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைக்கான ட்ரம்பின் விருப்பத்தையும் அவர்  எடுத்துரைத்தார். விரைவான […]

error: Content is protected !!