மத்திய கிழக்கு

சூடான் உள்நாட்டு மோதலால் 50 லட்சம் பேர் புலம் பெயா்வு – ஐ.நா.தகவல்

  • September 7, 2023
  • 0 Comments

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த மூன்றரை மாதங்களுக்கு மேல் மோதல் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் போ் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சூடான் மோதல் காரணமாக சூடானில் இருந்து 50 லட்சம் போ் தங்களது இருப்பிடங்களைவிட்டு வெளியேறி தவித்து வருகின்றனா். புலம் பெயா்ந்தவர்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனா். 7.50 லட்சம் பேர் சர்வதேச அகதிகளாகியுள்ளனர். அவர்கள், அண்டை நாடுகளான எகிப்து, […]

பொழுதுபோக்கு

“என்மேல வழக்கு போட்ட எவனும் ஜெயிக்கல” மார் தட்டுகின்றார் அட்லீ

  • September 7, 2023
  • 0 Comments

ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகாகி இருக்கும் இயக்குனர் அட்லீ, தன் மீது வைக்கப்பட்ட கதை திருட்டு புகார்களை தான் எதிர்கொண்டது குறித்து பேசி உள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்தை இயக்க வேண்டும் என்பது பல்வேறு ஜாம்பவான் இயக்குனர்களின் கனவாக இருக்கும் நிலையில், அதை தன் 5-வது படத்திலேயே எட்டிப்பிடித்து சாதனை படைத்துள்ளார் அட்லீ. ஷாருக்கனை வைத்து அவர் இயக்கிய ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அட்லீயின் படங்கள் பாக்ஸ் […]

வட அமெரிக்கா

நாடாளுமன்ற கலவரம்: முக்கிய குற்றவாளிக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

  • September 7, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் 2020ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அப்போதைய ஜனாதிபதியும், குடியரசு கட்சி வேட்பாளருமான டிரம்ப் தோல்வி அடைந்தார். இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் வழங்குவதற்காக 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் திகதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது.அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றுத்துக்குள் புகுந்து சூறையாடினர். இந்த கலவரத்தில் 5 பேர் பலியாகினர். அமெரிக்க வரலாற்றில் […]

ஆசியா

வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஜப்பானின் ‘ஸ்லிம்’விண்கலம்

  • September 7, 2023
  • 0 Comments

ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் நிலவை ஆய்வு செய்வதற்கான பயண திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக ‘ஸ்லிம்’ என்ற விண்கலத்தை ஜப்பான் தயாரித்துள்ளது. இந்த விண்கலத்தை எச்.2.ஏ. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டது. இந்த திட்டம் பல்வேறு காரணங்களால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜப்பான் நாட்டின் தென்மேற்கே ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்.2.ஏ. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த […]

இலங்கை

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் தென்மேற்கு பருவமழை!

  • September 7, 2023
  • 0 Comments

நாட்டின் 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு பருவமழை நாட்டின் பலப்பகுதிகளில்  பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை இன்று (07.09) காலை 08:30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை […]

இலங்கை

இலங்கை தொடர்ந்தும் பொறுப்புக்கூறல் இன்றி செயற்படுகிறது – வாக்கர் டர்க்!

  • September 7, 2023
  • 0 Comments

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வாக்கர் டர்க் இலங்கை தொடர்பான தனது வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். குறித்த அறிக்கையில்டு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஆதரவுடன் சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். உண்மையைக் கண்டறியும் புதிய பொறிமுறையொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ள போதிலும், உண்மையைக் கண்டறிவது மட்டும் போதாது எனவும், குற்றவாளிகளை தண்டிக்க போதுமான பொறிமுறையை வழங்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், […]

இலங்கை

கடந்த காலங்களில் செனல்-04 வெளியிட்ட ஆவணப்படங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்!

  • September 7, 2023
  • 0 Comments

இலங்கை குறித்து கடந்த காலங்களில் செனல்-04 வெளியிட்ட முன்னைய ஆவணப்படங்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர், ருக்கி பெர்ணாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கிறி்ஸ்தவ தலைவர்களும், ஏனையவர்களும் விடுத்த வேண்டுகோளை புதிய ஆவணப்படம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற அநீதிகள். பாரந்தூரமான குற்றங்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என  வேண்டுகோள் […]

ஐரோப்பா

ஆஸ்திரேலியாவில் பிரான்ஸ் பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • September 7, 2023
  • 0 Comments

பிரான்ஸ் சுற்றுலாப்பயணிஒருவர், சுறா தாக்குதலுக்கு இலக்கானதை அடுத்து, அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். மரத்தினால் செய்யப்பட்ட படகு ஒன்றில் பயணித்தவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் வடக்குபகுதியான கோரல் கடற்பிராந்தியத்தில் இன்று புதன்கிழமையன்று, சிறிய படகில்மூவர் பயணித்துள்ளனர். அவர்களை திடீரென சுறா கூட்டம் சுற்றிவளைத்தது. படகினை தாக்கி, அதை கவிழ்க்க முற்பட்டது. அப்போது அதிஷ்ட்டவசமாக அங்குவருகை தந்த கார்கோ கப்பல் ஒன்று அவர்களை காப்பாற்றியுள்ளது. படகில் பயணித்த மூவரில் இருவர் இரஷ்யவைச் சேர்ந்தவர்கள் எனவும், […]

பொழுதுபோக்கு

வெளியானது அதிகார பூர்வமான அறிவிப்பு… இன்னும் 100 நாள் தான் இருக்கு…

  • September 7, 2023
  • 0 Comments

நடிகர் தனுஷ், இதுவரை ஏற்று நடித்திராத, மாறுபட்ட கதை களத்தில், வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். பீரியாடிக் கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த படம், மூன்று பாகங்களாக உருவாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் எந்த வித அதிகார பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, தற்போது உருவாகியுள்ள முதல் பாகம் […]

இலங்கை

யாழில் கையை இழந்த சிறுமிக்காக வீதிக்கு இறங்கிய மக்கள்

  • September 7, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டமொன்று இடம்பெற்று வருகிறது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட தாதியை பணி நீக்கம் செய், பணிப்பாளரே விசாரணைகளை மூடி மறைக்காதே உள்ளிட்ட கோஷங்கள் இதன்போது எழுப்பபட்டது. ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மகஜரொன்றை கையளிப்பதற்கு பொதுமக்களிடமும் கையெழுத்து சேகரிப்பு இடம்பெற்றுவருகிறது.

error: Content is protected !!