இலங்கை

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

  • September 7, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் பயண தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் பூதாகாரமாக மாறியுள்ள நிலையில், இது குறித்து பெற்றோர் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த வழக்கு இன்று (07.09) யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பெற்றோர் சார்பில் […]

இந்தியா

G20 உச்சிமாநாட்டிற்காக உலகின் பிரமாண்ட நடராஜர் சிலை ஸ்தாபிப்பு!

உலகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த வார இறுதியில் G20 உச்சிமாநாட்டிற்காக இந்தியா வருகை தரவுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து பல நூற்றாண்டுகள் பழமையான அரச கலை வடிவத்தை பிரதிபலிக்கும் கம்பீரமான நடராஜர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் உள்ள பாரத மண்டபம் G20 அரங்கின் முன்புறத்தில் நிறுவப்பட்ட உலகின் மிகப்பெரிய ‘நடராஜா’ சிலை, வலிமைமிக்க சோழப் பேரரசின் பூமியான தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உள்ள சுவாமிமலையில் செய்யப்பட்ட உலகின் பெரிய நடராஜர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலை இருபத்தி […]

பொழுதுபோக்கு

ஜவான் படம் எப்படி இருக்கு? அட்லீ நீ ஜெய்ச்சிட்டடா… ஜெயிச்சிட்ட

  • September 7, 2023
  • 0 Comments

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என இதுவரை அட்லீ இயக்கிய 4 தமிழ் படங்களும் மெகா ஹிட் அடித்துள்ள நிலையில், முதன்முறையாக ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் அட்லீ இயக்கி உள்ள ஜவான் படத்திற்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஆக்‌ஷன், மாஸ், மிரட்டல், நடிப்பு, எமோஷன் என […]

பொழுதுபோக்கு

லோகேஷ் கனகராஜிடம் கோரிக்கை விடுத்த ஷாருக்கான்… என்ன சொன்னார் தெரியுமா?

  • September 7, 2023
  • 0 Comments

மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று உலகம முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஜவான். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. ஷாருக்கான் – அட்லி கூட்டணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி, சுனில் குரோவர், யோகி பாபு, சன்யா மல்ஹோத்ரா, ரித்தி டோக்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். Wishing the absolute best to @iamsrk sir, my […]

இந்தியா

வெறுப்பு ஒழிக்கப்படும் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை தொடரும்! ராகுல் காந்தி

வெறுப்பு ஒழிக்கப்பட்டு இந்தியா ஒன்றுபடும் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை தொடரும் என்று காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஓராண்டு நிறைவை நினைவுகூர்ந்துள்ள ராகுல் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கடந்த ஆண்டு (2022) இறுதியில் கன்னியாகுமரியில் தொடங்கி இந்தாண்டு (2023) தொடக்கத்தில் காஷ்மீரில் நிறைவடைந்த சுமார் 4,000 கிமீ தூரம் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் மாண்டேஜ் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிந்துள்ள ராகுல் காந்தி […]

இலங்கை

சேனல் -04 காணொலி : தம்மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து கோட்டாபய விளக்கம்!

  • September 7, 2023
  • 0 Comments

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இதே சேனல் ஒளிபரப்பிய முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் முழுமையான பொய்களால் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது ஐரோப்பாவில் தஞ்சம் கோரும் வகையில் ஹன்சீர் ஆசாத் மௌலானா,  மற்றும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலிய வெளியிட்ட பொய்யான கருத்துகள் எனவும்,  2015ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலர் பதவியை விட்டு விலகி […]

இலங்கை

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின்கீழ் ஜுலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் குறித்த அறிவிப்பு!

  • September 7, 2023
  • 0 Comments

அஸ்வசும நலன்புரி திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக உறுதிப்படுத்தப்பட்ட 257,170 பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 1,550 மில்லியன் ரூபா வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதுடன், நாளைய(08.09) தினம் பயனாளிகளின் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். நிவாரணப் பயன் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ஜூலை மாதம் 790,000 பயனாளி குடும்பங்களுக்கு பணம் செலுத்தப்பட்டது. இதில் 48,170 மில்லியன் குடும்பங்கள் பயனடைந்ததாகவும் […]

மத்திய கிழக்கு

வீட்டின் சமையலறையில் கண்டெடுக்கப்பட்ட14 சடலங்கள்… சிக்கிய நபர்!

  • September 7, 2023
  • 0 Comments

ருவாண்டாவில் உள்ள நபர் ஒருவரின் வீட்டின் சமையலறையில் இருந்து 14 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. 34 வயதுடைய குறித்த சந்தேக நபர், இரவு விருந்தில் சந்திக்கும் நபர்களை தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. பின்னர் அவர்களை கொலை செய்து வீட்டின் சமையலறையில் குழி தோண்டி புதைத்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் கொள்ளை, பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட அவர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையை அடுத்து, அவரின் வீட்டில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஆசியா

வட கொரியாவுக்கு எந்த நாடும் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது- அதிபர் யூன் சுக் இயோல் வலியுறுத்தல்

  • September 7, 2023
  • 0 Comments

வட கொரியாவுக்கு எந்த நாடும் ராணுவ ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்று தென் கொரியா வலியுறுத்தி உள்ளது. சர்வதேச அமைதியை கெடுக்கும் வகையில் ராணுவ விவகாரங்களில் வடகொரியாவுடன் ஒத்துழைக்கும் எந்த முயற்சியும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கூறியுள்ளார். இந்தோனேசியாவில் நடைபெறும் தென்கிழக்கு ஆசியாவின் ஆசியான் உச்சி மாநாட்டில் தென் கொரிய அதிபர் இந்த கருத்தை தெரிவித்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஆயுதங்கள் […]

பொழுதுபோக்கு

கமல் கைகளில் விளையாடும் துப்பாக்கி… வெறித்தனமான வீடியோ வெளியானது….

  • September 7, 2023
  • 0 Comments

நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் ‛இந்தியன் 2′ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதற்கு அடுத்து வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்தில் நடிக்க போகிறார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகின. தற்போது அமெரிக்காவில் கமல் முகாமிட்டுள்ளார். இந்த பயணத்தின்போதே தனது அடுத்த 233வது படத்திற்கான ஆயத்த பணிகளிலும் தீவிரமாகி உள்ளார். அதாவது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் […]

error: Content is protected !!