ஐரோப்பா

வெளிநாடொன்றில் ஆப்பிரிக்க பெண்களால் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய பெண் (வீடியோ)

  • September 8, 2023
  • 0 Comments

நெதர்லாந்தில் இந்திய பெண்ணொருவரை ஆப்பிரிக்க பெண்கள் மூவர் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பலரது கண்டனங்களையும் பெற்று வருகிறது. அந்த காணொளியில் இந்தியப் பெண்ணை நோக்கி ஆப்பிரிக்க பெண் ஒருவர் எதிர்ப்பு குரலை எழுப்பினார்.அதற்கு இந்தியப் பெண்ணும் பதில் கூறுகிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாறியது. இந்திய பெண்ணின் கையில் இருந்த கருப்பு கைப்பையை ஆப்பிரிக்க பெண் இழுக்கிறார்.இந்திய பெண் அதை தடுக்கும் நேரத்தில், ஆப்பிரிக்க பெண் […]

பொழுதுபோக்கு

சந்திரமுகி – 2 படத்தை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி செய்தி

  • September 8, 2023
  • 0 Comments

சந்திரமுகி இரண்டாம் பாகம் வெளியீட்டுத் தேதியை மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் நட்சத்திர நடிகரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இத்திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ‘சந்திரமுகி 2’ படத்தின் வெளியீட்டுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. […]

இலங்கை

களனி பல்கலைக்கழ மாணவர் திடீரென உயிரிழப்பு!

  • September 8, 2023
  • 0 Comments

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த போது  மாரடைப்பு ஏற்பட்டதாக நேற்றிரவு (07.09 ) அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் 22 வயதுடைய  அகில இந்திரசேன என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

வட அமெரிக்கா

உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்கவுள்ள அமெரிக்கா

  • September 8, 2023
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதல் நடத்த தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் மற்றும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. மேற்கத்திய […]

இலங்கை

வடகிழக்கில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கையை இராணுவமே செய்து வருகிறது- அருட்தந்தை மா.சத்திவேல்

  • September 8, 2023
  • 0 Comments

வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்திற்கூடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.அவரால் இன்று (08.09.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமய தலைமைகள் தமது சமய உண்மையில் நின்று சமய அமைப்புக்கள் தந்துள்ள அதிகாரத்தையும், சமூக கௌரவத்தையும், பயன்படுத்தி சமூக நல்லிணக்கம் சமயங்களுக் கிடையிலான நல்லுறவு என்பவற்றை வளர்க்கவும், […]

இலங்கை

அதிகளவு செலவு செய்யும் அமைச்சுகளை ஆராய நடவடிக்கை!

  • September 8, 2023
  • 0 Comments

அதிகளவு பணம் செலவிடப்படும் 10 அமைச்சுக்களின் செலவுகளை ஆராய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மூன்று மொழிகளிலும் பகுப்பாய்வு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அரலியகஹா மன்றில் இன்று (08.09) நடைபெற்ற “தேசிய மதிப்பீட்டுக் கொள்கை கட்டமைப்பை” வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தேசிய கொள்கைப் பொறிமுறையின் அடிப்படையில் மின்சார விநியோகத்தை அனுமதிக்க முடியும் எனவும் கூறினார்.

ஆசியா

துபாயில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து : இருவர் பலி!

  • September 8, 2023
  • 0 Comments

இரண்டு விமானிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் துபாய் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று (07.08) இடம்பெற்றுள்ளது. காணாமல் போன விமானிகளை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான பெல் 212 ரக ஹெலிகாப்டரின் விமானிகளில் ஒருவர் எகிப்தியர் மற்றவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையின் சுகாதாரத்துறையை மீட்டெடுக்க 500 மில்லியன் தேவைப்படுகிறது!

  • September 8, 2023
  • 0 Comments

இலங்கையின் சுகாதாரத்துறையை மீட்டெடுக்க 500 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும், அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாட்டை வங்குரோத்து பட்டியலில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை மீது உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த நாடு வங்குரோத்து நிலைமைய அடைந்தமைக்கு ஒருசிலர் மாத்திரம் காரணம் அல்ல எனவும் அதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் […]

இலங்கை

திருகோணமலையில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபரீதம் – பலர் காயம்

  • September 8, 2023
  • 0 Comments

திருகோணமலை -கோமரங்கடவல பகுதியில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது. கோமரங்கடவல திரியாய் சந்தியில் உள்ள விகாரையொன்றில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்ற மொறவெவ -மயிலகுடாவ பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஐவர் காயமடைந்த நிலையில் நான்கு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மஹதிவுல்வெவ மற்றும் -கோமரங்கடவல […]

ஆசியா

ஆசியாவுக்கான எண்ணெய் விலையை உயர்த்திய சவுதி!

  • September 8, 2023
  • 0 Comments

ஆசியாவுக்கான எண்ணெய் விலையைத் தொடர்ந்து 4வது மாதமாக சவுதி அரேபியா உயர்த்தியுள்ளது. எண்ணெய்ச் சந்தையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை நீட்டிக்க அந்நாடும் ரஷ்யாவும் முடிவெடுத்த மறுநாள், விலை உயர்த்தப்பட்டுள்ளது. சவுதி அரசாங்கத்தின் Saudi Aramco நிறுவனம் Arab Light ரக எண்ணெயின் விலையைப் பீப்பாய்க்குப் 10 காசு கூட்டியது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அந்த அளவுக்கு விலை உயர்த்தப்படவில்லை. இருப்பினும் எதிர்பார்க்கப்பட்ட 30 காசு ஏற்றத்தைவிட அது குறைவாகும். OPEC எனும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் […]

error: Content is protected !!