ஐரோப்பா

ரஷ்ய ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் போலியான தேர்தல்! உக்ரைன் கடும் கண்டனம்

உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் உள்ளாட்சி தேர்தல்கள் என அதிகாரிகள் விவரிக்கும் தேர்தலில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உக்ரைனின் வெளியுறவு மந்திரி இந்த வாக்கெடுப்பை “போலி” என்று குறிப்பிட்டுள்ளார். வாக்குகளுக்கு எந்த சட்டபூர்வமான நிலையும் இருக்காது என்றும் கூறியுள்ளர். வேட்பாளர்கள் அனைவரும் ரஷ்ய அல்லது ரஷ்ய சார்பு, மேலும் மாஸ்கோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவர்னர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்பகட்ட வாக்குப்பதிவில் பங்கேற்கும் பலர் ஆயுதமேந்திய ரஷ்ய வீரர்கள் முன்னிலையில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் பங்கேற்க […]

பொழுதுபோக்கு

மற்றுமொரு ஹீரோவுக்கு வில்லனாக மாறும் விஜய் சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியான ‘ஜவான்’ படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். அவர் இரக்கமற்ற ஆயுத வியாபாரி காளி கெய்க்வாட் என்ற பாத்திரத்தில் இளம் மற்றும் வயதான கெட்அப்களில் நடித்தார், இது விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘RC 16’ படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க VJS மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை அணுகியுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. தற்போது […]

ஐரோப்பா

ஹாங்காங் மற்றும் தெற்கு சீனா இடையே வரலாறு காணாத மழையால் வெள்ளம்!

ஹாங்காங் மற்றும் தெற்கு சீன நகரங்களில் பரவலான வெள்ளத்தால் மக்கள் போராடி வருகின்றனர். வெள்ளிக்கிழமை, ஹாங்காங்கில் பள்ளிகள் மற்றும் பணியிடங்களை அதிகாரிகள் மூடியதால் தெருக்களும் சுரங்கப்பாதை நிலையங்களும் தண்ணீரில் மூழ்கின. வியாழன் அன்று தொடங்கிய மழை, சுமார் 140 ஆண்டுகளில் நகரத்தைத் தாக்கிய மிகப்பெரிய மழை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், பல மீட்புப் பணிகள் நடைபெற்றதாகவும் அவசர சேவைகள் தெரிவித்தன.  

பொழுதுபோக்கு

சந்திரமுகி 2 ரிலீஸ் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு

  • September 8, 2023
  • 0 Comments

கடந்த 2005-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். 18 வருடங்கள் கழித்து உருவாகியுள்ள சந்திரமுகி 2 லைகா புரடக்ஷன் தயாரிப்பில், ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை – தோட்டா தரணி. மேலும், கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் சந்திரமுகி 2 செப்டம்பர் 15 வெளியாவதாக இருந்தது. ரசிகர்களும் […]

ஐரோப்பா

பாட்டியை கவனித்துக்கொள்வது கஷ்டமாக இருந்ததால் பேரன் செய்த செயல் !

  • September 8, 2023
  • 0 Comments

ஜேர்மனியில், 100 வயதான தனது பாட்டியை கோடரியால் வெட்டிக் கொலை செய்த ஜேர்மானியர் மீதான வழக்கு விசாரணை துவங்கியுள்ளது. Hamburg நகரில் வாழ்ந்து வந்த தனது 100 வயது பாட்டியை கவனித்துவந்துள்ளார் அந்த 37 வயது நபர். ஆனால், அவருக்கு பாட்டியை கவனித்துக்கொள்வது மிகவும் கஷ்டமாக இருந்துள்ளது.தன்னால் சமாளிக்க முடியாத நிலை ஏற்படவே, அவர் தனது பாட்டியை கோடரியால் தாக்கிக் கொலை செய்துள்ளார். மார்ச் மாதம் 6ஆம் திகதி, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மறதி பிரச்சினையால் அவதியுற்ற […]

இலங்கை

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் நடத்தப்பட்டது. பிரேரணைக்கு எதிராக 113 எம்பிக்களும் ஆதரவாக 73 எம்பிக்களும் வாக்களித்தனர். மேலும், வாக்கெடுப்பின் போது 38 எம்.பி.க்கள் ஆஜராகவில்லை.

இந்தியா

தெலுங்கானாவில் சக மாணவன் தாக்கியதால் கோமா நிலைக்குச் சென்ற மாணவன்! (வீடியோ)

  • September 8, 2023
  • 0 Comments

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தபோது, மாதிரி தேர்வுத்தாள்களை கேட்டும் கொடுக்காத ஆத்திரத்தில் சக மாணவன் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். ஹைதராபாத் சதர்காட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தொழிற்கல்வி படித்து வருபவர் சையத் ஆரிப். இவருடைய சக வகுப்பு மாணவனான கைஃப் தேர்வுக்கு படிக்க சில கேள்வி தாள்களைத் தரும்படி கேட்டுள்ளார். அப்போது தனக்கும் தான் தேர்வு இருக்கிறது. அதனால் தர முடியாது என மறுத்துள்ளார். […]

இலங்கை

திருகோணமலை பூங்காவில் திறந்து வைக்கப்பட்ட மான்களுக்கான உணவு விற்பனை நிலையம்

  • September 8, 2023
  • 0 Comments

மான்களுக்கான இயற்கை உணவை வழங்கும் நோக்குடனும், சுற்றுலா துறையினை ஊக்குவிப்பதற்காகவும் மான்களுக்கான உணவு விற்பனை நிலையம் திருகோணமலை மான் பூங்காவில் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைய கிழக்கு மாகாண சுற்றுலா துறை தவிசாளர் மதனவாசன் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளர் திரு. ஏ.ராஜசேகர் அவர்களது ஆதரவோடு Trinco Aid நிறுவனத்தினால் Lion Club of Trincomalee Town, Lion Club of Centennial […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் தெற்காசிய நகைக்கடைகளை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது

  • September 8, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மாகாணங்களான நியூயார்க், நியூ ஜெர்சி, வெர்ஜீனியா, புளோரிடா மற்றும் பென்சில்வேனியா உள்ளிட்டவற்றில் இந்தியா மற்றும் தெற்காசிய நகைக்கடைகளை குறிவைத்து ஆயுதம் ஏந்திய கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. இதுகுறித்து நாட்டின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. மர்மகும்பலுக்கு வலைவீசி தேடியது. இந்தநிலையில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து தகவல் தெரியவந்தது. அதன்பேரில் தனிப்படை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களை கைது செய்த அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். […]

இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நாட்டின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பகுதியில் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்திலும் குறித்த கடற்பரப்புகளில் 55 முதல் 60 கிலோமீற்றர் வேகத்திலும் வீசும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் மணிக்கு 45 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

error: Content is protected !!