ஐரோப்பா

பிரான்ஸ் அபாயா தடை: பள்ளி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது

  • September 9, 2023
  • 0 Comments

பிரான்ஸ் பள்ளிகளில் மாணவிகள் அபாயா அணிய தடை விதிக்கப்பட்ட விடயம் சர்ச்சையை உருவாக்கி வருகிறது. பிரான்ஸ் அரசு, கடந்த மாதம், பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் அபாயா என்னும் உடலை மறைக்கும் அங்கியை அணிய தடை விதித்தது. அது கல்வியில் மதச்சார்பின்மை விதிகளை மீறுவதாகக் கூறி அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பள்ளி துவங்கிய முதல் நாள் அன்று, சுமார் 300 இஸ்லாமிய மாணவிகள் பள்ளிக்கு அபாயா அணிந்துவந்துள்ளனர். அவர்களில் பலர் அதை அகற்ற ஒப்புக்கொண்ட போதிலும், 67 […]

இலங்கை

யாழ். அளவெட்டி வடக்கு பகுதியில் திடீரென பற்றியெறிந்த அரிசி ஆலை

  • September 9, 2023
  • 0 Comments

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி வடக்கு பகுதியில் இன்று காலை திடீரென பற்றியெறிந்த தீயினால் முற்றாக சேதமடைந்த அரிசி ஆலை. இச் சம்பவம் தொடர்பாக, நேற்றய தினம் மாலை அரிசி ஆலையில் வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் பூட்டப்பட்டது பின்னர் இன்று காலை 8 மணி அளவில் அரிசி ஆலையை திறக்கச் சென்றபோது அரிசி ஆலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்ட உரிமையாளர் அயலவர்களை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் இதன்போது பல லட்சம் ரூபாய் பெறுமதியான […]

இலங்கை

தவறான சிகிச்சையினால் கை அகற்றப்பட்ட சிறுமிக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்! அருண் சித்தார்த்

கை அகற்றப்பட்ட சிறுமிக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அருண் சித்தார்த் அரச வைத்தியசாலைகள்தான் ஏழைகளுக்கு இருக்கின்ற ஒரே புகலிடம் எனவும் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே யாழ் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அவர் மேலும் தெரிவிக்கையில், சில தினங்களுக்கு முன்பு யாழ். போதனா வைத்தியசாலையில் தவறான சிகிச்சையினால் தனது கரத்தை இழந்த சிறுமியான வைஷாலி தொடர்பான செய்திகள் சர்ச்சைகள் சமூகத்தில் மேலெழுந்த வண்ணம் […]

உலகம்

(New update) மொரோக்கோ நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை உச்சம் தொட்டது!

  • September 9, 2023
  • 0 Comments

மொரோக்கோவில் நேற்று (08.09) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன. மொரோக்கோவின்   ஹை அட்லஸ் மலைத்தொடர்  பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலடுக்கம் பதிவாகியுள்ளது. பிரபலமான சுற்றுலாத் தலமான மராகேச்சில் இருந்து தென்மேற்கே 72 கிலோமீட்டர்கள் (44.7 மைல்) மையத்தில் மையம் கொண்டிருந்த குறித்த நிலநடுக்கத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 600 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த […]

இலங்கை

அடுக்குமாடி குடியிருப்பொன்றின் மாடியில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் பலி!

கல்கிஸ்ஸை அடுக்குமாடி குடியிருப்பொன்றின் வீட்டில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த பெண் இங்கிலாந்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது. பேஸ்புக் ஊடாக வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவருடன் அறிமுகமாகி பின்னர் இருவருக்கும் இடையில் காதல் உறவு ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், குறித்த பெண் இணையவழியில் முன்பதிவு செய்து அல்விஸ் மாவத்தையில் உள்ள குறித்த […]

பொழுதுபோக்கு

கமலுடன் மீண்டும் இணையும் மக்கள் செல்வன்… உறுதியான அறிவிப்பு

  • September 9, 2023
  • 0 Comments

உலக நாயகன் தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கமல் தனது 233வது படத்தை ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், KH 233 படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விதவிதமான துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் தீவிரம் காட்டி வரும் கமல், KH 233ல் […]

ஐரோப்பா

ஜேர்மன்- பெர்லினில் முக்கிய ரயில் பாதையின் பல இடங்களில் பற்றியெறிந்த தீ

  • September 9, 2023
  • 0 Comments

ஜேர்மன் தலைநகரான பெர்லினுடன் ஹாம்பர்க் நகரை இணைக்கும் ரயில் பாதையில் பல இடங்களில் தீப்பற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரை பெர்லினுடன் இணைக்கும் முக்கிய ரயில் பாதையில் மூன்று இடங்களில் தீப்பற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், யாரோ வேண்டுமென்றே தீவைத்துள்ளது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு வகையான தீவிரவாதம் என்று கூறியுள்ள ஜேர்மன் போக்குவரத்துத் துறை அமைச்சரான Volker Wissing, இந்த மோசமான […]

இலங்கை

எந்தவொரு தேர்தலும் ஒத்திவைக்கப்படாது – பந்துல குணவர்த்தன!

  • September 9, 2023
  • 0 Comments

எந்தவொரு தேர்தலையும் அரசாங்கம் ஒத்திவைக்காது என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது வேறு எந்தத் தேர்தலையோ அரசாங்கம் ஒத்திவைக்காது என்றும், ஒவ்வொரு தேர்தலும் திட்டமிட்ட திகதியில் சட்டப்பூர்வமாக நடைபெறும் என்றும் கூறினார். இதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  

இலங்கை

கிரிமிட்டிய பகுதியில் நீரோடையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

  • September 9, 2023
  • 0 Comments

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிலாரண்டன் பகுதியில் நேற்று (08) இரவு காணாமல்போன ஆண் ஒருவர் இன்று (09) சனிக்கிழமை காலை கிரிமிட்டிய பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நானுஓயா கிலாரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சித்திரபாலன் மகேஸ்வரன்( 49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நீரோடையில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, குறித்த இடத்திற்கு விரைந்த நானுஓயா பொலிஸார் சடலத்தை மீட்டனர். நானுஓயா கிரிமிட்டி […]

பொழுதுபோக்கு

சொந்த ஊரில் மாரிமுத்துவின் உடல் தகனம்: கதறிய மனைவி

தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து, நேற்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள பசுமலை தேரி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (57). அவரது உடலுக்கு பல்வேறு திரையுலகினர் அஞ்சலி செலுத்திய நிலையில் மாலையில் அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட்டது. இன்று அதிகாலை 3மணி அளவில் தேனி மாவட்ட எல்லையை அவரது உடல் அடைந்ததும் அங்கு காத்திருந்த ஏராளமானோர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது கிராமமான […]

error: Content is protected !!