இலங்கை

இலங்கையில் அதிகாலையிலேயே நடந்த துப்பாக்கிச் சூடு

  • September 10, 2023
  • 0 Comments

இரத்மலானை – ரயில் நிலைய வீதி பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது. வாகனங்களில் பிரவேசித்த இனந்தெரியாத சிலர், வீடொன்றிலிருந்த குறித்த நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஐரோப்பா

ரஷ்யாவுக்காகப் போரிட கியூபாவிலிருந்து ஆட்கடத்தல்

  • September 10, 2023
  • 0 Comments

உக்ரேன் போரில் ரஷ்யாவுக்காகப் போரிட கியூபா மக்களைக் கடத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை ஈடுபடும் கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கியூபாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. போரில் ரஷ்யப் படைகளில் சேர்ந்துகொள்ளுமாறு கியூபர்களை ஈர்க்கும் முயற்சியில் அக்கும்பல் ஈடுபட்டது. கும்பலை உடைத்து செயலிழக்கச் செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. அறிக்கையில் வெளியுறவு அமைச்சு அதிகத் தகவல்களை வெளியிடவில்லை. ஆட்கடத்தல் கும்பல் கியூபா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளிலும் இயங்கி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இரு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தும் புதிய ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • September 10, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லிஸ்டீரியா நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இவ்வருடத்தின் கடந்த 8 மாதங்களில் சுமார் 25 லிஸ்டீரியா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கர்ப்பிணித் தாய்மார்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். அவர்களில், நீரிழிவு இதய-கல்லீரல் அல்லது சிறுநீரக நோயாளிகளுக்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும். உண்ணும் உணவோடு தொடர்புடைய பாக்டீரியா தொற்றுதான் இந்த நோய்க்கு மூலகாரணமாக இருப்பதுடன், தனிநபர்களின் […]

வட அமெரிக்கா

மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்! 2000த்தை கடந்த மரணங்கள்

  • September 10, 2023
  • 0 Comments

மொரோக்கோவின் மத்தியப் பகுதிகளை உலுக்கிய வலுவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000த்தை கடந்துள்ளது. காயமுற்றோர் எண்ணிக்கையும் 2000க்கும் மேல் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் தரைமட்டமாயின. மொரோக்கோவின் அரச மாளிகை 3 நாள்களுக்குத் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கும்படி அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் சுத்தமான குடிநீர், உணவு, கூடாரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்ய ராணுவப் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கட்டட இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுளின் ‘I’m not a robot’ எதற்காக?

  • September 10, 2023
  • 0 Comments

பல சமயங்களில் கூகுளின் உள்ளே சில வலைதளங்களுக்குள் நாம் நுழையும்போது, I’m not a robot என்பதை கிளிக் செய்யுமாறு கேட்டிருக்கும். இதையும் நாம் கிளிக் செய்துவிட்டு அந்த வலைதளத்திற்குள் நுழையும் வேலையை நாம் பார்ப்போம். ஆனால் இதன் பின்னால் உள்ள காரணம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? தற்போது உலகமெங்கும் கூகுளைத் தான் அதிகம் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு கூகுளில் நாம் ஏதாவது தேடும் போதோ, அல்லது ஏதாவது வலைதளத்துக்குள் நுழையும் போதோ I’m […]

உலகம்

எதிர்பார்த்ததை விட வேகமாக உருகும் அண்டார்ட்டிக்கா பனிப்படலங்கள் – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

  • September 10, 2023
  • 0 Comments

அண்டார்ட்டிக்கா பெருங்கடலின் மேற்பரப்பில் உள்ள பனிப்படலம் வேகமாக உருவாக ஆரம்பித்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் அவை உருகிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால் உலகளவில் கடல்நீர் மட்டம் உயரக்கூடும் என விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். முன்னைய ஆய்வுகளில் சொல்லப்பட்டதைவிட வேகமாகப் பனிப்படலங்கள் உருகிவருவதாக ஆய்வொன்று கூறுகிறது. 78 பனிப்படலங்களின் விவரங்களைத் தொகுத்து கடந்த 1,000 ஆண்டுகளில் அவற்றின் தட்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். துருவங்களுக்கு அருகே இருக்கும் பகுதிகள், பூமியின் மற்ற பாகங்களைவிட மிக வேகமாக […]

இலங்கை

பிரான்ஸில் மாணவனுக்கு நேர்ந்த கதி – நான்கு மாணவர்கள் கைது

  • September 10, 2023
  • 0 Comments

  பிரான்ஸில் 17 வயதுடைய மாணவன் ஒருவன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அதேவயதுடைய நாவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் Châlons-en-Champagne (Marne) நகரில் உள்ள lycée polyvalent Jean-Talon லீசே (உயர்கல்வி பாடசாலை) அருகே இடம்பெற்றுள்ளது. காலை 8 மணி அளவில் பாடசாலைக்கு அருகே குறித்தமாணவனைச் சுற்றி வளைத்த நால்வர் கொண்ட மாணவர்கள் குழு, தாக்குதலைமேற்கொண்டனர். மாணவனின் தொடையில் கத்தியால் ஏழு தடவைகள் குத்தப்பட்டுதாக்கப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்ட […]

இலங்கை

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

  • September 10, 2023
  • 0 Comments

இலங்கையர்களை சுற்றுலா வீசா வாயிலாக தொழிலுக்கு அனுப்புவது சட்டவிரோதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வீசா வாயிலாக சர்வதேச நாடுகளுக்கு தொழில்வாய்ப்பிற்காக சென்று பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பட்சத்தில் எவ்வித பொறுப்பினையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்றுக்கொள்ளாது எனவும் அறிவித்துள்ளது. அத்துடன் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா வீசா மூலம் ஓமானுக்கு சென்று […]

இலங்கை செய்தி

புத்தளத்தில் வசிக்கும் ஆபிரிக்க வம்சாவளி இலங்கையர்கள்

  • September 9, 2023
  • 0 Comments

புத்தளம் சீரம்பியாடி பிரதேசத்தில் வசிக்கும் ஆபிரிக்க வம்சாவளி இலங்கையர்களுக்கு சர்வதேச கவனத்தை ஈர்க்கக்கூடிய கலாசார நிலையம் ஒன்று வழங்கப்படவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். சிறம்பியாடி உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இலங்கை சனத்தொகை தொடர்பிலான ஆய்வுக்காக அமைச்சர் அப்பகுதிக்கு சென்ற போது, ​​அமைச்சர் இந்த சான்றிதழை வழங்கினார். சுற்றுலாத்துறைக்காக இந்த சனத்தொகைக் குழுவின் செயலூக்கமான பங்களிப்பைப் பெறவும், அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அவர்களின் கலாச்சார நடவடிக்கைகளைத் […]

இலங்கை செய்தி

ஜப்பான் பிரதமரின் இலங்கை விஜயம் திடீரென இரத்து

  • September 9, 2023
  • 0 Comments

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் இலங்கை விஜயம் இறுதி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமர் முதலில் இலங்கைக்கு ஒரு நாள் பயணத்தைத் திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டதால் அதற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதேவேளை, இந்திய பாதுகாப்பு அமைச்சரும் அண்மையில் இலங்கைக்கு வரவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!