இலங்கை

சுகாதார அமைச்சர் போலியான மருந்துகள் இறக்குமதி செய்து தனது பொக்கட்டுக்களை நிறப்பி உள்ளார்-செல்வம் அடைக்கலநாதன் MP

  • September 10, 2023
  • 0 Comments

மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் தற்போதைய சுகாதார அமைச்சர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு,இளமையான புதிய ஒருவர் சுகாதார அமைச்சராக நியமிக்கும் பட்சத்திலேயே இந்த பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது நாட்டை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.இதனால் எமது மக்கள் பல்வேறு […]

இந்தியா

பிரேசிலிடம் கையளிக்கப்பட்ட தலைமை பொறுப்பு..

  • September 10, 2023
  • 0 Comments

டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது. இந்தியாவிடமிருந்து ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பெற்றுக்கொண்ட பின் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா கூறுகையில், பிரேசிலின் தலைமையிலான ஜி20 கூட்டமைப்பு 3 முக்கியத்துவங்களை கொண்டுள்ளது. 1. சமூக ஒன்றிணைப்பு மற்றும் பட்டினிக்கு […]

இந்தியா

சந்திரபாபு நாயுடு கைது: நெல்லூர் மாவட்டம் ராஜமுந்திரி பகுதியில் 144 தடை உத்தரவு!

  • September 10, 2023
  • 0 Comments

திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி மோசடி செய்தது தொடர்பான வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு (73) நேற்று அதிகாலை மாநில சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் இன்று (செப்டம்பர் 10) விஜயவாடா ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சந்திரபாபு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டதாவது: ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த போது இந்த மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. நிதி முறைகேடு […]

இலங்கை

இலங்கை தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • September 10, 2023
  • 0 Comments

தபால் திணைக்களம் அதன் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஊடாக எந்தவொரு ஒன்லைன் பரிவர்த்தணைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்தின் இணைய முகவரியை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே மோசடி நபர்களிடம் இருந்து வங்கிக் கணக்குகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு தபால் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.  

இலங்கை

மனிதப்புதைகுழியில் மீட்கப்பட்ட புலிகளின் தகட்டிலக்கம் – தகவல் தர மறுத்த சட்டவைத்திய அதிகாரி

  • September 10, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் நேற்றைய நான்காம் நாள் அகழ்வாய்வில் விடுதலைப்புலிகளின் த.வி.பு. இ-1333 தகட்டிலக்கம் ஒன்று மீட்கப்பட்டதாக உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகளின் முடிவுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவனிடம் வினவியபோது, அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மறுப்பு தெரிவித்திருந்தார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் புதனன்று (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் நான்காம்நாள் அகழ்வாய்வுகள் நேற்று […]

இலங்கை

பல்கலை மாணவர்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்பு!

  • September 10, 2023
  • 0 Comments

பல்கலைக்கழக மாணவர்களின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஆராயுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை மாணவர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஏற்கனவே 144 வீட்டுத் தொகுதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று நிர்மாணிக்கபபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த குடியிருப்பில், 800 மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இது குறித்த அமைச்சரவை பத்திரம் […]

உலகம்

மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் முன்னிலை?

  • September 10, 2023
  • 0 Comments

மாலத்தீவில் ஜனாதிபதித் தேர்தல்கள் இரண்டு முன்னணி வேட்பாளர்களும் சனிக்கிழமையன்று 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறத் தவறியதை அடுத்து, இரண்டாம் சுற்றுக்கு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் சோலிஹ் தனது பிரதான போட்டியாளரான மொஹமட் முயிஸை விட பின்தங்கியிருப்பதாக ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன, முன்னாள் ஜனாதிபதிக்கு 46% வாக்குகள் கிடைத்துள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டிருந்தது. மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் 2-வது சுற்று தேர்தல் உறுதி […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்ய புதிய குழு நியமனம்!

  • September 10, 2023
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி குறித்து விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் மூளையாக செயல்பட்டதாக முன்னாள் சட்டமா அதிபர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இரண்டு விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் இறுதித் தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னர் ஈஸ்டர் […]

பொழுதுபோக்கு

இனி ஆதி குணசேகரன் இவர்தான்? வெளியான அறிவிப்பு

  • September 10, 2023
  • 0 Comments

சன் டிவியில் முன்னணி தொடராக ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக மாஸ் காட்டி வந்தார் நடிகர் மாரிமுத்து. அவர் உயிரிழந்த நிலையில் அடுத்த குணசேகரன் குறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கேரக்டரில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எதிர்நீச்சல் சீரியல் குறித்து பேசிய நடிகர் வேல ராமமூர்த்தி: நடிகர் மாரிமுத்து நடிகர், உதவி இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், சீரியல் […]

ஐரோப்பா

சீனாவிற்காக உளவு பார்த்த பிரிட்டன் பாராளுமன்ற ஆராய்ச்சியாளர்..!

  • September 10, 2023
  • 0 Comments

பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் நெருக்கமான தொடர்பு கொண்ட பாராளுமன்ற ஆராய்ச்சியாளர் ஒருவர் சீனாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் கைதாகியுள்ளார். 30 வயதுக்கு உட்பட்ட அந்த நபர் பாதுகாப்பு அமைச்சர் டாம் துகென்டாட் மற்றும் காமன்ஸ் வெளியுறவுக் குழு தலைவர் அலிசியா கியர்ன்ஸ் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்களுடன் தொடர்புடையவர் என தகவல் வெளியாகியுள்ளது.மட்டுமின்றி, அரசாங்க ரகசிய ஆவணங்கள் பல கையாளும் அரசியல்வாதிகள் பலரது நம்பிக்கை பெற்றுள்ள அந்த நபர், அந்த ஆவணங்களை பார்வையிடும் அனுமதியும் பெற்றிருந்தார் […]

error: Content is protected !!