ஐரோப்பா

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 22ஆம் ஆண்டு நினைவு தினம்!

  • September 11, 2023
  • 0 Comments

உலகின் அதிக சக்தி வாய்ந்த ராணுவ படை கொண்ட நாடாக விளங்கும் அமெரிக்காவின், நியூயார்க் நகரத்தில் உலகை உலக்கிய இரட்டை கோபுர தாக்குதல் இதே தேதியில் 22 வருடங்களுக்கு முன் செப்டம்பர் 11 2001 ஆம் ஆண்டு காலை 8:46 மணிக்கு நடந்து முடிந்தது. ஒரு விமானம் கட்டுப்பாட்டை இழந்து இரட்டை கோபுரத்தை நோக்கி பறக்கிறது என்பதாலே. சில நொடிகளில், இரட்டை கோபுரத்தின் வடக்கு கட்டிடத்தின் 93-99 இடைப்பட்ட பகுதியில் விமானம் மோதி வெடித்துச் சிதறியது. இந்த […]

இலங்கை

ஹபராதுவ பிரதேசத்தில் ரஷ்யர்கள் இடையே மோதல்

  • September 11, 2023
  • 0 Comments

ஹபராதுவ, தல்பேயில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றில் வைத்து ரஷ்ய பிரஜை ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் 4 ரஷ்ய பிரஜைகளை கைது செய்வதற்கான விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த 39 வயதான ரஷ்ய பிரஜை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்ய தேடப்பட்டு வரும் ரஷ்ய பிரஜைகள் நால்வரும், தாக்கப்பட்ட ரஷ்ய பிரஜையும் இலங்கை நாணயத்துக்கு ரஷ்ய ரூபிள் பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் என […]

இலங்கை

(update) கொழும்பில் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின!

  • September 11, 2023
  • 0 Comments

ரயில் ஊழியர்கள் கொழும்பில் இன்று (10.09) முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கும் , ஊழியர்களுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலை தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியா – காலில் சுற்றிய விஷப்பாம்பு… காப்பாற்ற முயன்ற நண்பருக்கு நேர்ந்த கதி

  • September 11, 2023
  • 0 Comments

நண்பரை காப்பாற்ற முயன்று விஷப் பாம்பு கடித்ததில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கவுமாலா அரசு பள்ளியின் 100வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட 69 வயதுடைய நபரின் காலில் விஷப் பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டது, இதனை பார்த்த அவருடைய நண்பர் உடனடியாக விஷப்பாம்பை நண்பரின் காலில் இருந்து அகற்றும் வேலையில் ஈடுபட்டார். அப்போது விஷப்பாம்பு அவரது கைகள் மற்றும் நெஞ்சு பகுதியில் […]

இலங்கை

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • September 11, 2023
  • 0 Comments

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 09 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 405 ஆக பதிவாகியுள்ளது அத்துடன், இம்மாதத்தின் கடந்த 06 நாட்களில் மாத்திரம் 22 ஆயிரத்து 896 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  

இலங்கை

வவுனியாவில் மதுபோத்தலுடன் ஆலயத்திற்கு வந்த குருக்களால் சர்ச்சை!

  • September 11, 2023
  • 0 Comments

வவுனியா பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள ஆலயமொன்றில் மகோற்சவத்தின் போது குருக்கள் ஒருவர் மது போதையில் வருகை தந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (10.09) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  வவுனியா பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தரின் கண்காணிப்பின் கீழ் உள்ள ஆலயம் ஒன்றின் மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. குறித்த மகோற்சவத்திற்கு வருகை தந்த குருக்கள் ஒருவர் மது அருந்திவிட்டு வருகை தந்துள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் அவரை எச்சரித்து […]

ஆசியா

04 ஆண்டுகளுக்கு பின் கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம்!

  • September 11, 2023
  • 0 Comments

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திப்பதற்காக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிம் ஒரு சிறப்பு ரயிலில் ரஷ்யாவிற்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான குறித்த சந்திப்பு வரும் புதன்கிழமை இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை கிம் ஜொங் உன்னின் இந்த பயணம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கிம் ஜொங் உன் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணமாக இது […]

பொழுதுபோக்கு

த்ரிஷாவுடன் ரொமான்ஸ் காட்சி கேட்ட விஜய்? லோகேஷூடன் மோதல்? நடந்தது என்ன?

  • September 11, 2023
  • 0 Comments

விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், விஜய் – லோகேஷ் கனகராஜ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் லியோ ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் நேற்று பரபரப்பான செய்தி ஒன்று வெளியானது. எனினும் இது குறித்து படக்குழு உண்மையான செய்தியை வெளியிட்டுள்ளது. லியோ, அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. 7 ஸ்கீரின் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு […]

பொழுதுபோக்கு

பிரபல நடிகை தூங்கும் போது இயக்குநர் செய்த வேலை… கடுப்பாகிய நடிகை

  • September 11, 2023
  • 0 Comments

நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் சில படங்களில் நடித்ததையடுத்து தமிழில் சாட்டை என்ற படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து அவரது மாணவியாக நடித்திருந்தார். இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைகொடுத்தது. நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றுத் தந்தது. சாட்டை படத்தின் வெற்றியை அடுத்து புரியாத புதில், கொடி வீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஆர்யாவுடன் மகாமுனி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச […]

இலங்கை

திருமலை -சட்ட விரோத வலைகள் மூலம் மீன்பிடி… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்

  • September 11, 2023
  • 0 Comments

சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு எதிராக திருகோணமலை சிறிமாபுர மீனவர்கள் இன்று (11) வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை மற்றும் டிஸ்கோ வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக் கோரியும் சிறிமாபுர மீனவ குழுவொன்று இன்று (11) ஜமாலியா பகுதியில் திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை, ஜமாலியா பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் சமுத்ராகம பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் […]

error: Content is protected !!