இலங்கை

இலங்கையில் தொழிற்சங்க நடவடிக்கை – ரயிலின் மேல் ஏறி பயணித்தவர் மரணம்

  • September 12, 2023
  • 0 Comments

ஹொரப்பே பகுதியில் ரயிலின் மேல் ஏறி பயணித்த பயணியொருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் மேல் ஏறி வந்த பயணியொருவர் ஹொரப்பே பகுதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ரயில் சாரதிகள் சிலர் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல ரயில் சேவைகளை இரத்து செய்ய நேரிடும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பொழுதுபோக்கு

‘மூன்றாம் கண்’ முதல் தோற்றம் வெளியானது…

  • September 12, 2023
  • 0 Comments

விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள மூன்றாம் கண் படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சசோ கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மூன்றாம் கண்’. இந்த படத்தில் விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே. சசிகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அஜீஸ் இசை அமைக்கிறார். […]

வாழ்வியல்

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை! அவதானம்

  • September 12, 2023
  • 0 Comments

உணவை சாப்பிட்ட உடனேயே, சில கெட்ட பழக்கங்களை நம்மை அறியாமல் கடைபிடிக்கிறோம். இதன் காரணமாக நமது எடை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நமது செரிமான அமைப்பையும் மோசமாக பாதிக்கிறது. உணவுக்குப் பிறகு சில பழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம், நீங்கள் சிறந்த செரிமானத்தைப் பெறலாம் மற்றும் உடல் பருமன் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம். உணவு உண்டவுடன் ஒரு கோப்பை தேநீர் அல்லது காபி அருந்த விரும்புவவது இயற்கை. நம்மில் பலர் இதை செய்ய நினைக்கிறோம், ஆனால் இது உங்கள் வயிற்றுக்கு மிகவும் […]

கருத்து & பகுப்பாய்வு

கிழக்கின் கொலைக்களம்..!!!

  • September 12, 2023
  • 0 Comments

பைபிளில் ஒருவாக்கியம் இருக்கிறதாக குறிப்பிடுவார்கள் வாள் எடுத்தவன் வாளாலே சாவான். சிலப்பதிகாரம் கூறுவது ஊழ்வினை தானுற்றக்கடை வழி உறுத்தும் பட்டினத்தார் தன்வினை தன்னைச்சுடும். இந்த வாக்கியங்களின் அதிர்வுதான் முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திர காந்தனுக்கு வந்திருக்கிறதோ என்னவோ ! பிள்ளையானை முதலமைச்சர் (2008 – 2012) ஆக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டாராம். “நான் குழந்தைப்புலியை முதலமைச்சர் ஆக்கியிருக்கிறேன்” தற்போது சனல் 4 காணொளியோடு பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் நாலா […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களுக்கு விசேட அறிவிப்பு

  • September 12, 2023
  • 0 Comments

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் அதிக வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வியாழன் மற்றும் சனிக்கிழமைக்கு இடையில் நியூ சவுத் வேல்ஸ், தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் விக்டோரியாவில் மீண்டும் வெப்பமான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சிட்னியில் 27 டிகிரி செல்சியஸ், மெல்போர்னில் 26 டிகிரி செல்சியஸ், கான்பெராவில் 25 டிகிரி செல்சியஸ் மற்றும் அடிலெய்டில் 24 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும். அந்த […]

இலங்கை

இலங்கையில் இன்று பல ரயில் பயணங்கள் ரத்து! கடும் நெருக்கடியில் பயணிகள்

  • September 12, 2023
  • 0 Comments

இலங்கையில் 20 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பல ரயில் நிலையங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்தார். பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிலாபம், கணேவத்தை, அளுத்கமவில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பல ரயில்கள் […]

வட அமெரிக்கா

மொரோக்கோவில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு இடமின்றித் தவிக்கும் குடும்பங்கள்

  • September 12, 2023
  • 0 Comments

மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கம் இன்னும் பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு நில அதிர்வுகள் தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்த தங்களது அன்புக்குரியவர்களை அடக்கம் செய்யப் பல குடும்பங்கள் இடம் தேடிவருகின்றனர். இந்த நிலையில் இந்த எச்சரிக்கை அவர்களுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 6.8 ரிக்டரில் பதிவான நிலநடுக்கத்துக்குப் பிறகு மொரோக்கோவில் இதுவரை 25 தொடர் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதென ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் இயக்குநர் ரெமி மோஸு (Remy Mossu) தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தில் […]

இலங்கை

இலங்கையை அச்சுறுத்தும் ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • September 12, 2023
  • 0 Comments

இலங்கையில் 900 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இம் மாதத்தின் கடந்த 10 நாட்களில் இந்த தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைவடைந்துள்ள போதிலும், தற்போதைய மழையுடன் கூடிய வானிலை காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் […]

வட அமெரிக்கா

உலகின் காரமான சிப்ஸ் – Amazon, eBay தளங்களிலிருந்து அகற்றம்

  • September 12, 2023
  • 0 Comments

Amazon, eBay தளங்களிலிருந்து மிதமிஞ்சிய கார மிளகைக் கொண்ட ‘Paqui Chip’ எனும் சிப்ஸ் அகற்றப்பட்டுள்ளது.. அதை உட்கொண்டதால் அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது Harris Wolobah என்ற சிறுவன் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது. One Chip Challenge அதாவது, காரமான மிளகு சிப்ஸைச் சாப்பிடும் சவாலில் அந்த இளையர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் கடைகளிலிருந்து ‘Paqui Chip’ மீட்கப்பட்டுள்ளது. உலக அளவில் இறக்குமதி செய்யப்பட்ட அந்த வகை சிப்ஸ் இன்னும் விற்பனையில் உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பல நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஆப்பிளின் அடுத்த திட்டம்!

  • September 12, 2023
  • 0 Comments

ஆப்பிள் சில மாதங்களாகவே AI தொழில்நுட்பத்தில் தங்களின் கால்தடத்தை பதிக்கும் வேலைகளில் யாருக்கும் தெரியாமல் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. மேலும் இதற்காக பல மில்லியன் டாலர்களை ஆப்பிள் நிறுவனம் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச் சந்தை நிலவரங்கள் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த வாரம் அமெரிக்க பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்தது. திடீரென ஒரே நாளில் ஆப்பிள் […]

error: Content is protected !!