இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை :பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை

  • September 16, 2023
  • 0 Comments

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். பாரமுல்லா மாவட்டத்தின் ஹத்லங்கா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் இந்த வாரத்தில் நடந்த 3-வது என்கவுண்டர் சம்பவம் இது. இதற்கு முன் ரஜோரி மற்றும் அனந்தநாக் […]

பொழுதுபோக்கு

இதுவே இப்படி இருக்கே… அப்ப படம் எப்படி இருக்கும்????

  • September 16, 2023
  • 0 Comments

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ‘ஜப்பான்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வீடியோ 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. […]

இலங்கை

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி!

  • September 16, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டை விட 3.1% குறைவடைந்துள்ளது என  மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான தேசிய கணக்கு மதிப்பீடுகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி இரண்டாவது காலாண்டிற்கான கணக்கியல் மதிப்பீடுகளை வெளிப்படுத்திய திணைக்களம், விவசாயத் துறையில் வளர்ச்சி காணப்பட்டதாகவும், ஆனால் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் […]

பொழுதுபோக்கு

My3 Web series: ரோபாவாக ஹன்சிகா…. சீனுக்காக அலையும் சாந்தனு..

  • September 16, 2023
  • 0 Comments

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட சூப்பரான காமெடி படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த ராஜேஷ் எம் இயக்கத்தில் சாந்தனு, பிக் பாஸ் முகேன், ஹன்சிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி வெப் சீரிஸ் My3 விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்நிலையில், அந்த வெப்சீரிஸின் பிரத்தியேக புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் இயக்குநர் ராஜேஷ். எம் தயாரிப்பாளரின் டார்ச்சர் […]

இலங்கை

இலங்கையில் பொலிஸ் நிலையங்களை கண்காணிக்க நடவடிக்கை!

  • September 16, 2023
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக  மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலையில், தற்போது  குறித்த நடவடிக்கைய மீளவும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்  சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். பொலிஸாருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் தற்போது அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகம்

நோபல் பரிசுக்கான ரொக்கப்பரிசு தொகை அதிகரிப்பு!

  • September 16, 2023
  • 0 Comments

நோபல் பரிசுக்கான ரொக்கப் பரிசு ஏறக்குறைய ஒரு மில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளதாக நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதன்படி இந்த ஆண்டு நோபல் பரிசு பெறும் வெற்றியாளர்கள் 924,000 யூரோக்கள் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அதிகாரிப்பானது, கடந்த 100 ஆண்டுகாலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் உயரிய திருத்தம் என விவரிக்கப்படுகிறது.    

ஐரோப்பா

படுக்கையில் கிடைத்த துண்டுச்சீட்டு: சாரா கொலை வழக்கில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள்!

  • September 16, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் வீடொன்றில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாகிஸ்தான் வம்சாவளியினரான சாரா வழக்கில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி, அதிகாலை 2.47 மணிக்கு பாகிஸ்தானிலிருந்து பிரித்தானிய பொலிஸாருக்கு வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, Woking என்னுமிடத்திலுள்ள வீடு ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள் பொலிஸார்.வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார், சிறுபிள்ளைகளுக்கான கட்டில் ஒன்றில் போர்வைக்கடியில் ஒரு சிறுமியின் உடல் இருப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினரை அழைத்துள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவ உதவிக்குழுவினர், அவர் உயிரிழந்துவிட்டதாக, அதிகாலை […]

உலகம்

லிபியாவில் ஏற்பட்ட பேரழிவு : அரசாங்கம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு!

  • September 16, 2023
  • 0 Comments

லிபியாவின் டெர்னா அணை உடைந்தமையினால்  ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11000 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இது குறித்து அரசாங்கத்திற்கு எதிரான பல  குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக டெர்ணா அணை குறித்து நீண்டகாலமாக ஆய்வுகளை மேற்கொண்ட நீரியல் நிபுணர் அப்துல் வானிஸ் அஷூர் இந்த பேரழிவை நீண்ட காலத்திற்கு முன்பே கணித்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக அணையில் ஏற்பட்டிருந்த விரிசல்கள் குறித்து அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பொது நீர் ஆணையத்தின் நிபுணர்கள் மூலமாகவோ அல்லது […]

வட அமெரிக்கா

ஒத்திவைக்கப்பட்ட கனடா வர்த்தகத்துறை மந்திரியின் இந்தியாவிற்கான பயணம்…

  • September 16, 2023
  • 0 Comments

ஜி20 உச்சிமாநாட்டின் போது இந்திய பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ட்ரூடோ இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கனடாவில் உள்ள இந்து மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல்கள் வருவதாகவும் இது தொடர்பாக கனடா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ட்ரூடோவிடம் மோடி வலியுறுத்தினார். காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுக்கு இந்தியா கண்டனம் […]

இலங்கை

கொரியாவில் இலங்கை இளைஞரக்களுக்கு அதிக தொழில்வாய்ப்பு!

  • September 16, 2023
  • 0 Comments

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கொரிய வேலைக்காக இலங்கையில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இரு மடங்காக அதிகரித்துள்ளதாக கொரிய குடியரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் லீ ஜங்சிக் தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் கொரிய தூதுவர் லீ மியுங் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் டெம்பிள் ஹவுஸில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே லீ ஜங்சிக் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொரிய மொழி அறிவு கொண்ட திறமையான தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் […]

error: Content is protected !!