ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா பல்கலைக்ழகத்தில் கத்திகுத்து தாக்குதல் – மூவர் காயம்

  • September 18, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பராவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்திக்குள் புகுந்த 24வயது இளைஞர், இரு மாணவிகள் உட்பட மூவர் மீது கத்தி குதுது தாக்குதல் நடத்தியுள்ளர். தகவல் அறிந்து விரைந்த பொலிஸார் இளைஞரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். அவர் அந்த பல்கலைக்கழக மாணவர் இல்லை என தெரிவித்த பொலிஸார் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். படுகாயமடைந்த மாணவி ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் பேருந்து விபத்து : 20 பேர் பலி!

  • September 18, 2023
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் லொறி ஒன்று பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தானது  ஜிம்பாப்வேயின் எல்லைக்கு அருகில் உள்ள வடக்கு லிம்போபோ மாகாணத்தில் நேற்று (17.09) இடம்பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள வைரச் சுரங்கத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றே விபத்தில் சிக்கியுள்ளது. விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.    

தமிழ்நாடு

நாமக்கலில் 14 வயது சிறுமி உயிரிழப்பு: சவர்மா-க்குத் தடை

  • September 18, 2023
  • 0 Comments

சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து துரித உணவக உரிமையாளர் உள்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள துரித உணவகங்களில் சவர்மா கிரில் சிக்கன் உள்ளிட்டவை சமைக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் துரித உணவகத்தில் கடந்த 16ம் திகதி இரவு சவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட இறைச்சி உணவுகளை சாப்பிட்ட நாமக்கல் ஏ எஸ் […]

இலங்கை

பாடசாலையில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு!

  • September 18, 2023
  • 0 Comments

பாடசாலை ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அறை ஒன்றின் மேற்கூரையில் இருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாத்தறை, மெத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் இருந்து இந்த வெடிபொருட்கள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து டி56 தோட்டாக்கள் 20ம், மிமீ 3.2 தோட்டாக்கள் 24ம் , மி.மீ. 9 தோட்டாக்கள் 107 ம் மற்றும் கல்கடஸ் வகை துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. மேலும், தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின் போது, ​​TNT என சந்தேகிக்கப்படும் 194 கிராம் […]

ஐரோப்பா

ஜேர்மனியில் கலாச்சார நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல்: பொலிஸார் 26 பேருக்கு காயம்

  • September 18, 2023
  • 0 Comments

ஜேர்மனியில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில், இருதரப்பினருக்கிடையே மோதல் வெடித்தது. ஜேர்மனியின் Stuttgart நகரில், எரித்ரியா நாட்டின் ஜனாதிபதியான Isaias Afwerkiயின் ஆதரவாளர்கள் கலாச்சார நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சனிக்கிழமையன்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின்போது, எரித்ரியா நாட்டின் ஜனாதிபதியான Isaias Afwerkiயின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. அதைக்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் ஜேர்மன் பொலிஸ் அதிகாரிகள் 26 பேர் வரை காயமடைந்தனர். பொலிசார் மீது பேஸ்பால் மட்டைகள், கம்பிகள், ஆணிகள் மற்றும் போத்தல்களால் தாக்குதல் […]

ஆசியா

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • September 18, 2023
  • 0 Comments

தைவான்  வடகிழக்கு பிராந்தியத்தில் இன்று (18.09) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 6.1 ரிக்டர் அளவில் பதிவானதாக ஜேர்மன் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. சேதவிபரங்களை மதிப்பிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொழுதுபோக்கு

தர்ஷனுடன் ஊர் சுற்றும் லாஸ்லியா! வைரலாகும் வீடியோ…

  • September 18, 2023
  • 0 Comments

கவின் மற்றும் லாஸ்லியா பிக் பாஸ்க்குள் எந்த அளவிற்கு காதல் வலையில் சிக்கி இருந்தார்கள் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் வெளியே வந்த பொழுது எதுவுமே எங்களுக்குள் இல்லாத போல் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டார்கள். பல மாதங்களாக சிங்கிளாக சுற்றிக் கொண்டிருந்த கவின் சமீபத்தில் இவருடைய நீண்ட நாள் தோழியான மோனிகாவை திருமணம் செய்து கொண்டு கல்யாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார். இந்த புகைப்படங்களை பார்த்து சோகமான லாஸ்லியா என்னால் இதையெல்லாம் […]

இலங்கை

மஞ்சள் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

  • September 18, 2023
  • 0 Comments

பதுளை மாவட்டத்தில் இரண்டு பிரதேசங்களுக்கு மஞ்சள் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் ஹப்புத்தளை பகுதிகளுக்கு மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. […]

இலங்கை

திருகோணமலையில் பதற்ற நிலை : வலுக்கும் கண்டனங்கள்!

  • September 18, 2023
  • 0 Comments

திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை தாங்கி வந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடாத்தியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 14 பேரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 06 சந்தேக  நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 06 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆறு பேரில் இரண்டு பெண்கள் அடங்குவதாகவும்,  அவர்கள் 35ற்கும் 50 வயதுக்கும் […]

இலங்கை

முட்டைகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பினால் சட்டநடவடிக்கை!

  • September 18, 2023
  • 0 Comments

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் செயற்கையாக தயாரிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் சுமார் நூறு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த முட்டைகள் தொடர்பில் எந்தவொரு முறைப்பாடும் […]

error: Content is protected !!