இலங்கை

இலங்கையில் கைவிடப்பட்ட வீடுகளில் சமூக சீர்கேடுகள் – இஸ்லாமபாத் பகுதியில் சம்பவம்

  • September 26, 2023
  • 0 Comments

சுனாமி அனர்த்தம் காரணமாக மக்களினால் கைவிடப்பட்டுள்ள வீடுகளில் அண்மைக்காலமாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக பகுதி முழு அளவில் பாதிக்கப்பட்ட வீடுகளில் இவ்வாறு சமூக சீர்கேடுகள் இடம்பெற்ற அடையாளங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக வெளியிடங்களில் இருந்து வருகின்ற சிலரின் சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் பாவனை பாலியல் செயற்பாடுகளுக்கு இவ்விடங்கள் உடந்தையாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. மேலும் குறித்த பகுதியில் இயங்கி வருகின்ற காதி நீதிமன்றத்தை […]

தமிழ்நாடு

சென்னையிலிருந்து டெல்லி செல்ல தயாரான விமானத்தில் இயந்திர கோளாறு – பயணிகள் தவிப்பு

  • September 26, 2023
  • 0 Comments

சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு. இதனால் டெல்லி செல்லும் விமானம் தாமதமாகி, 164 பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக, சென்னை விமான நிலையத்தில் தவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு, டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 164 பயணிகள் டெல்லி செல்வதற்காக, அதிகாலை […]

இலங்கை

திலீபனின் நினைவு நாள் நிகழ்விற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

  • September 26, 2023
  • 0 Comments

திலீபனின் நினைவு நாளை இன்றைய தினம் (26) திருகோணமலை குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படயிருந்த நிலையில் திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது. திருகோணமலை துறைமுக பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஜே.எஸ்.ரணவீர அவர்களினால் 1979ம் ஆண்டு 15ம் இலக்க 106/1 என்ற நிபந்தனைக்கு அமைவாக திருகோணமலை நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட குறித்த அமைப்பின் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனின் நினைவு இன்றைய நாள் கொண்டாடப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் முரண்பாடுகள் ஏற்படலாம் என […]

வாழ்வியல்

கருவளையம் அழகை கெடுக்கிறதா..? உங்களுக்கான பதிவு

  • September 26, 2023
  • 0 Comments

பெரும்பாலானோர் சரும அழகை கருவளையம் கெடுக்கிறது. கருவளையம் என்பது கண்களின் கீழ் காணப்படும் கருப்பு நிறத் தோல் பகுதியாகும். இந்த பிரச்னை தூக்கமின்மை, அதிகப்படியான வேலைப்பளு, ஹார்மோன் மாற்றங்கள், ஒவ்வாமை போன்ற பிரச்னைகளால் ஏற்படுகிறது. கருவளையம் (Dark circles) ஏற்படக் காரணம் கருவளையம் இரவு முழுவதும் தூங்காவிட்டால், கண்களின் கீழ் உள்ள தோல் தளர்வடைந்து, கருப்பு நிறமாக மாறுகிறது. அதிகப்படியான வேலைப்பளு, மன அழுத்தம் போன்றவை கண்களின் கீழ் உள்ள தோலில் இரத்த ஓட்டத்தைக் குறைப்பதாலும் இந்த […]

பொழுதுபோக்கு

சினேகாவின் திருமணத்திற்கு முன்னரான காதல் குறித்து வெளிவந்துள்ள இரகசியம்….

  • September 26, 2023
  • 0 Comments

என்னவளே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் சினேகா. முதல் படத்திலேயே மாதவனுக்கு ஜோடியாக நடித்த சினேகா, அடுத்ததாக லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் படத்தின் மூலம் பேமஸ் ஆனார். இதையடுத்து 10 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக கொடிகட்டி பறந்த சினேகாவிற்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகை சினேகா, பிரசன்னாவை திருமணம் செய்துகொள்ளும் முன்னரே, அவரது முதல் காதல் தோல்வியில் முடிந்துள்ளது. திருமணம் […]

விளையாட்டு

உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

  • September 26, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷானக தலைமையிலான 15 பேர் கொண்ட இந்த அணிக்கு உடல் தகுதி அடிப்படையில் காயங்களால் அவதிப்பட்டு வரும் வனிந்து, மஹீஷ், டில்ஷான் மதுசங்க ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். உலகக் கிண்ணத்திற்கான அணி வருமாறு; தசுன் ஷானக (கேப்டன்) குசல் மெண்டிஸ் (துணை கேப்டன்) பெத்தும் நிஸ்ஸங்க குசல் ஜனித் பெரேரா திமுத் கருணாரத்ன சரித் அசலங்க தனஞ்சய […]

கருத்து & பகுப்பாய்வு

பௌத்த ராஜதானியகப் போகுதாம் திருகோணமலை

  • September 26, 2023
  • 0 Comments

வடகிழக்கில் பௌத்த ஆதிக்கப் பரம்பலை ஏற்படுத்தும் தீவீர முயற்சியில் அரசாங்கத்தின் தூதுவர்களான பௌத்த பிக்குமாரும் அவர் தம் ஆதரவாளர்களும் தீவிரம் காட்டி வருகிறார்கள் என்பதற்கு திருகோணமலையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் இன்னொரு சம்பவம்தான் புல்மோட்டை அரிசி மலை காணிப்பறிப்பும் மக்களின் போராட்டங்களும். தொல்பொருள் அடையாளங்கள் என்றும் பௌத்த தொன்மங்கள் உள்ள இடமென்றும் அனுராதபுரகால பௌத்த அடையாளங்கள் என்றும் கூறிக்கொண்டு பௌத்த பிக்குமார் கேந்திர முக்கியத்தவம் வாய்ந்த இடங்களை பௌத்த மயமாக்கவும் சிங்கள பரம்பலை உண்டாக்கவும் மேற்கொண்டுவரும் முயற்சிகளால் […]

ஐரோப்பா

அதிக சீன பயணிகளை ஈர்க்க விரும்பும் பல்கேரியா

  • September 26, 2023
  • 0 Comments

பல்கேரிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஸரிட்சா டின்கோவா, புதிய சுற்றுலாப் பாதைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் சீன சுற்றுலாப் பயணிகளின் அதிக ஆர்வத்தை ஊக்குவிக்க தனது நாடு உறுதிபூண்டுள்ளதாக அறிவித்துள்ளார். சமீபத்திய அறிக்கையின் மூலம், 2023 ஆம் ஆண்டு முதல் ஏழு மாதங்களில், பல்கேரியா சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 138 சதவீதம் அதிகரித்துள்ளது. கூடுதலாக, பல்கேரியாவின் பிரபலமான குளிர்கால மற்றும் கடலோர ஓய்வு விடுதிகள், அழகிய மணல் நிறைந்த கடற்கரைகள், புத்துணர்ச்சியூட்டும் கனிம நீரூற்றுகள், ஆடம்பரமான ஸ்பா வசதிகள் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தலைமுடி பராமரிப்புத் தவறு – பெண்ணுக்கு நேர்ந்த கதி – 7,862 டொலர் இழப்பீடு

  • September 26, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியா – நியூ சவுத் வேல்ஸ் சிகையலங்கார நிபுணர் ஒருவர், தலைமுடி பராமரிப்புத் தவறினால் தலைமுடி கடுமையாகப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 7,862 டொலர் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்காக 1,091 டொலர்கள் செலவிட்டதாக புகார் அளித்துள்ளார். ஆனால் சில நாட்களில் தனது தலைமுடி முற்றிலும் நிறமாற்றம் அடைந்து அழிந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அதன்படி, அவர் மொத்தம் 12,000 டாலர்கள் இழப்பீடு கேட்டிருந்தாலும், நடுவர் அதிகாரிகள் 7,862 டாலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர். குறித்த சிகையலங்கார நிபுணரும் […]

உலகம்

iPhone 15 வாங்க தயாராகும் எலான் மஸ்க்!

  • September 26, 2023
  • 0 Comments

புதிதாக வெளியாகியுள்ள iPhone 15 கைத்தொலைபேசி உலகெங்கும் பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், செல்வந்தர் எலான் மஸ்க் அதனை கொள்வனவு செய்ய தயாராகுவதாக அறிவித்துள்ளார். தான் iPhone 15 கைத்தொலைபேசியை வாங்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். Apple நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் iPhone 15 கைத்தொலைபேசியின் கமராவின் தரத்தைப் பாராட்டி அது குறித்து அவரது ‘X’ பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு இலோன் மஸ்க், “iPhone 15 கைத்தொலைபேசியின் படங்களும் காணொளிகளும் அற்புதமாக இருக்கின்றன. நானும் […]

error: Content is protected !!