இலங்கை

நீதிமன்ற தடை உத்தரவை மீறியும் திருகோணமலையில் தியாகி திலிபனின் நினைவேந்தல் நிகழ்வு

  • September 26, 2023
  • 0 Comments

தமிழ் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (26) திருகோணமலை தபால்கந்தோர் வீதியில் அமைந்துள்ள குளக்கோட்டன் மண்டபத்தில் நூற்றுக்கனக்கான பொதுமக்கள் ஒன்றுகூடி நினைவு கூரப்பட்டது. திருகோணமலை நீதிமன்றத்தினால் பொது அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு பேருக்கு பொலிஸார் தடை உத்தரவு கடிதத்தை வழங்கிய போதும் தடையாளர்கள் தவிர்ந்த ஏனைய பொதுமக்கள் இந்த நிகழ்வை நடாத்தியதுடன் நீதிமன்ற தடைஉத்தரவை பாதுகாக்கும் வகையில் பெரும்தொகையான பொலிஸார் குவிக்கபட்டிருந்போதும் நூற்றுக்கனக்கான பொதுமக்களும் முன்னாள் போராளிகளின் உறவினர்களும் ஒன்றுகூடி மெழுகிவர்த்தி தீபம் ஏற்றி மலர்கள் தூவி […]

இலங்கை

2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவு திட்டம் குறித்த அறிவிப்பு!

  • September 26, 2023
  • 0 Comments

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் இதனை சமர்ப்பிக்கவுள்ளார். ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இலங்கை

டீசலை கொள்வனவு செய்ய இலங்கை அமைச்சரவை ஒப்புதல்!

  • September 26, 2023
  • 0 Comments

அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 2024 நவம்பர் 1 முதல் பெப்ரவரி 29 ஆம் திகதிவரையான  காலப்பகுதிக்கு 4 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்த முறையின் கீழ் விலைமனு கோரப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு நிலை கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பெட்ரோசினா இன்டர்நேஷனல் (சிங்கப்பூர்) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் கொள்முதல் செய்ய எரிசக்தி அமைச்சர் […]

தமிழ்நாடு

பொலிஸார் தன்னை துன்புறுத்துவதாக கூறி வீடியோ பதிவு… வாலிபரின் விபரீத முடிவால் பரபரப்பு

  • September 26, 2023
  • 0 Comments

மாங்காடு அடுத்த பரணிபுத்தூர், சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ரூபன்(40), ஆட்டோ ஓட்டி வந்தார் இவர் மீது போரூர் பொலிஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் ஆதிலட்சுமி, லீலாவதி என இரண்டு மனைவி உள்ள நிலையில் 4 பிள்ளைகள் உள்ளனர். நேற்று இரவு ரூபன் தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதில் தன் மீது அளித்திருந்த புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்த அம்பத்தூர் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தன்னை அவதூறாக பேசுயதாகவும் மன உளைச்சலுக்கு […]

பொழுதுபோக்கு

அப்பாவுக்கு மகன் போட்ட பாசக்கட்டளை… சித்து வேலையை ஆரம்பித்த விஜய் டிவி

  • September 26, 2023
  • 0 Comments

அப்பாவிடம் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவருக்கு உடம்பில் பிரச்சினை என்று தெரிந்ததும் ரொம்பவே துடித்து போய்விட்டார் விஜய். எஸ்.ஏ. சந்திரசேகருக்கு சமீபத்தில் தான் உடல்நிலை பிரச்சினை காரணமாக ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது. இதை கேள்விப்பட்டதும் விஜய் மருத்துவமனைக்கு சென்று அப்பாவுக்கு அரவணைப்பாக இருந்து பாசமாக பார்த்துக் கொண்டார். அப்பொழுது அப்பாவிடம் கண்டிஷனாக ஒரு முக்கியமான கட்டளையை போட்டிருக்கிறார். அதாவது இந்த வயதில் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். இப்பொழுது அதுதான் உங்களுக்கு அவசியம். அதனால் நீங்கள் எந்தவித கமிட்மெண்டும் வைத்துக் […]

இலங்கை

ஒன்லைனில் குடிநீர் கட்டணங்களை வழங்க நடவடிக்கை!

  • September 26, 2023
  • 0 Comments

அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணத்தை வழங்குவதற்கு பதிலாக இலத்திரனியல் முறையில் பில்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குறித்த திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தெரிவு செய்யப்பட்ட 04 ஒழுங்குமுறை பிரதேசங்களில் இந்த முறை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின்  பிரதிப் பொது  முகாமையாளர்  பியால் பத்மநாத தெரிவித்தார்.

ஐரோப்பா

நைஜரில் உள்ள 1,500 ராணுவ வீரர்கள் வெளியேற்றம் – மேக்ரான் அறிவிப்பு

  • September 26, 2023
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் முன்பு பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் 1960ம் ஆண்டு நைஜர் சுதந்திர நாடாக உருவானது. ஆனால் அங்கு பிரான்ஸ் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதன்படி அந்த நாட்டின் அதிபரான முகமது பாசும் பிரான்சுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதனால் அவரை ஆட்சியில் இருந்து அகற்றி கடந்த ஜூலை மாதம் அங்கு ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டது. எனினும் பிரான்ஸ் நாட்டின் ராணுவ வீரர்கள் சுமார் 1,500 பேர் அங்கு நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

விரைவில் அழியும் பூமி : விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

  • September 26, 2023
  • 0 Comments

இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் உள்ள உயிரினங்கள் அழிந்துவிடும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின்படி, பூமி அழியும்போது அனைத்து பாலூட்டிகளையும் அழிக்கும் ஒரு வெகுஜன அழிவு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலகட்டத்தில், பூமியில் உள்ள எந்த உயிரினமும் 40 முதல் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எதிர்கொள்ள நேரிடும் என்றும்  பூமியின் அனைத்துக் கண்டங்களும் ஒன்றாகச் சேர்ந்து வெப்பமான, வறண்ட மற்றும் பெரும்பாலும் […]

தமிழ்நாடு

பல கொலைகளை செய்த பழனிச்சாமி – அம்பலப்படுத்திய கனகராஜின் சகோதரர் தனபால்

  • September 26, 2023
  • 0 Comments

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் கனகராஜின் சகோதரர் தனபால் இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜரானார். சிபிசிஐடி விசாரணைக்கு செல்லும் முன்பு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதல் கட்ட விசாரணையில் 40 மேற்பட்ட கேள்விகள் கேட்டிருந்தார்கள். இன்று இரண்டாம் கட்ட விசாரணையில் மீதி கேள்வி கேட்க இருக்கன்றனர். கனகராஜ் எடுத்து வந்த பைகள் யாரிடம் கொடுத்தார்கள் என்பது குறித்தும் தெரிவித்துள்ளேன். இதேபோல பல கொலைகளை பழனிச்சாமி செய்திருக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு […]

தமிழ்நாடு

பிரபல YouTuber TTF வாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

  • September 26, 2023
  • 0 Comments

பிரபல யூடூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 17ஆம் திகதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் உயர்ரக பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்று விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். கை முறிவு காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு சென்ற நிலையில் பாலு செட்டி சத்திரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் டிடிஎப் வாசன் […]

error: Content is protected !!