இலங்கை

போலி அடையாள அட்டையை பயன்படுத்தி வங்கி கடன் பெற்ற பெண் கைது : இலங்கையில் சம்பவம்!

  • September 27, 2023
  • 0 Comments

பாணந்துறை   வைத்தியசாலையில் தாதி ஒருவரின் பணப்பையை திருடி அவருடைய தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி தனியார் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த மற்றுமொரு தாதி கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிதுள்ளனர். மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலியர் ஒருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் 16ஆம் திகதி, ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த முறைப்பாட்டாளரின் பணப்பை, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த போது, ​​2,000 ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் அடையாள […]

இந்தியா

வரும் அக்டோபர் 1 முதல் இந்தியாவில் அமலுக்கு வரவுள்ள 15 புதிய விதிமுறைகள்

  • September 27, 2023
  • 0 Comments

இந்தியா முழுவதும் அக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். *செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் பண்டு கணக்குகளுக்கு நாமினி ஒருவரின் பெயரை செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால் உங்களது கணக்குகள் முடக்கப்படும். *2023-24ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில்TCS கட்டணங்களை 5% இலிருந்து 25% ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. * வெளிநாடுகளுக்கு பயணம் செல்பவர்கள் கிரெடிட் கார்டு […]

இலங்கை

கிளிநொச்சி:மனைவியின் கர்ப்பப்பை அகற்றல்…பொலிஸில் முறைப்பாடு செய்த கணவன்

  • September 27, 2023
  • 0 Comments

தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றிய சம்பவம் தொடர்பில் அப்பெண்ணின் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தனது மனைவி செவ்வாய்க்கிழமை (26) பிரசவத்துக்காக அன்று அனுமதிக்கப்பட்டார். தனது மனைவிக்கு புதன்கிழமை (27) சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. இறந்த நிலையில் குழந்தை எடுக்கப்பட்டது. அத்துடன், எனது மனைவியின் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டுள்ளது. இவை மருத்துவ தவறுகளின் காரணமாக இடம்பெற்றது எனத் தெரிவித்து, அந்த பெண்ணின் கணவரான இராதுரை சுரேஸ் என்பவர் தர்மபுரம் […]

இலங்கை

வரி இன்றி வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய அனுமதி?

  • September 27, 2023
  • 0 Comments

முதலீட்டுச் சபையில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு மட்டும் வரியின்றி வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டுக்கு பாரிய வரி இழப்பு ஏற்படும் என அச்சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மிரிஞ்சிகே தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் வாகனங்களை அசெம்பிள் செய்ய முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு […]

பொழுதுபோக்கு

விஜய் சேதுபதி சொன்ன பிளாஷ்பேக் ஸ்டோரி… எத்தனை பேருக்கு இது தெரியும்?

  • September 27, 2023
  • 0 Comments

துணை நடிகராக தன்னுடைய கெரியரை தொடங்கி, பின்னர் ஹீரோவாக மாறி தற்போது வில்லனாக பின்னி பெடலெடுத்து வருபவர் தான் விஜய் சேதுபதி. இவர் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின்னர் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்த விஜய் சேதுபதிக்கு சமீபகாலமாக வில்லன் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. கோலிவுட்டில் கலக்கி வந்த விஜய் சேதுபதியை பாலிவுட்டுக்கு அழைத்து சென்ற அட்லீ, அங்கு ஷாருக்கானுக்கே வில்லனாக நடிக்க வைத்து அழகு பார்த்தார். […]

இலங்கை

அதிபர் சேவையில் 04 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை இணைத்துக்கொள்ள ஒப்புதல்!

  • September 27, 2023
  • 0 Comments

அதிபர் சேவையில் மூன்றாம் தர பதவிகளுக்கான நியமனங்களை பங்குதாரர்கள் செய்துகொண்ட உடன்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சுக்கு உயர் நீதிமன்றம் இன்று (27.09) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 4,718 தொடர்புடைய பணியிடங்களுக்கு நியமனம் செய்ய நீதிமன்றத்தில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. குறித்த நியமனங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வட அமெரிக்கா

தன் பதவியை ராஜினாமா செய்த கனடிய நாடாளுமன்ற சபாநயகர்

  • September 27, 2023
  • 0 Comments

கனடா நாடாளுமன்ற சபாநயகர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாஜி வீரருக்காக தலைவணங்கிய விவகாரத்தில் கடும் விமர்சனம் எழுந்ததையடுத்து, அவர் ராஜினாமா செய்துளதாக கூறப்படுகின்றது. அதேவேளை கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியா – கனடா இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது.இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, கடந்த வாரம் கனடா சென்றார். அங்கு, கனடா நடாளுமன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் ஜெர்மனிய சர்வாதிகாரி அடால்ட் ஹிட்லரின் நாஜிப்படை வீரருக்கு ,பிரதமர் ட்ரூடோ […]

வேலை வாய்ப்பு

இலங்கை மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு – இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

  • September 27, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி முகாமைத்துவ பயிற்சியாளர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குறித்த வெற்றிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர் ஒரு போட்டிப் பரீட்சையை எதிர்கொள்வதுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர்முகத்தேர்வுகளை எதிர்நோக்க வேண்டுமென இலங்கை மத்திய வங்கி குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. பணிக்கான பயிற்சி காலம் ஒரு வருடமாகும். மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வரிக்கு உட்பட்ட நிலையான கொடுப்பனவாக மாதம் ஒன்றுக்கு ரூ. 125,000 பயிற்சிக் காலத்தில் வழங்கப்படும் என்று மத்திய வங்கி மேலும் […]

ஆஸ்திரேலியா

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவானுக்கு சுற்றுப்பயணமான ஆஸ்திரேலிய எம்.பி.க்கள் குழு

  • September 27, 2023
  • 0 Comments

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் கடந்த 1949ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. எனினும் சமீபகாலமாக தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என சீனா கருதுகின்றது. மேலும் தைவானுடன் மற்ற நாடுகள் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலியாவில் இருந்து 6 MPக்கள் கொண்ட ஒரு குழுவினர் தைவான் பயணம் மேற்கொண்டுள்ளனர். தைவானுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, எரிசக்தி மற்றும் செமி-கண்டக்டர் துறை போன்றவை குறித்து இரு […]

பொழுதுபோக்கு

“பயமும் இல்ல… பதுங்கவும் இல்ல” வைரலாகும் விஜய்யின் பதிவு

  • September 27, 2023
  • 0 Comments

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தான நிலையில், 9 ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் போட்ட பதிவு வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான லியோ […]

error: Content is protected !!