பொழுதுபோக்கு

விஜய் டிவி புகழ் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

  • September 27, 2023
  • 0 Comments

பிரபல நகைச்சுவை நடிகரான புகழ் மனைவி பென்சி கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். சில நாட்களுக்கு முன்பு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது, அந்த நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. பென்சிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் புகழ் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் “உங்கள் தாயின் அன்பை இரண்டு முறை அனுபவிக்க விரும்பினால், நீங்கள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. என் திருமணத்தின் மூலம் எனக்கு இப்போது என் […]

ஐரோப்பா

எரிவாயுக் குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: அமெரிக்கா,பிரிட்டன் மீது ரஷ்யா திடீர் குற்றச்சாட்டு

  • September 27, 2023
  • 0 Comments

ஜேர்மனியையும் ரஷ்யாவையும் இணைக்கும் எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில் பிரித்தானியாவும் அமெரிக்காவும் இருப்பதாக திடீரென ரஷ்ய தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. New York Times பத்திரிகை, ஜேர்மனிக்கு ரஷ்யா எரிவாயு வழங்கிவந்த Nord Stream எரிவாயுக் குழாய் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில், புடினுடைய எதிரிகள் இருப்பதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக, முன்பு செய்தி வெளியிட்டிருந்தது. அது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு சதிச்செயல் என்று கூறப்பட்ட நிலையில், உக்ரைன் ஆதரவு அமைப்பு ஒன்று Nord Stream எரிவாயுக் குழாயை சேதப்படுத்தியதாக அமெரிக்க […]

இலங்கை

இலங்கை பணவீக்கத்தின் தற்போதைய நிலை : புள்ளிவிபர திணைக்களம் இன்று வெளியிட்ட சில முக்கிய தகவல்கள்!

  • September 27, 2023
  • 0 Comments

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கத்தின் சமீபத்திய அறிக்கையை மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (27.09) வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 4% ஆக இருந்த பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தில் 1.3% ஆக குறைந்துள்ளது. உணவு வகையின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில்  மைனஸ் 4.8 சதவீதமாக பதிவாகிய நிலையில், செப்டம்பர் மாதத்தில்,  மைனஸ் 5.2 சதவீதமாக குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 8.7% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் செப்டம்பர் […]

இந்தியா

சார்ஜ் செய்து கொண்டிருந்தபோது வெடித்த மொபைல் போன் – மூவருக்கு தீக்காயம்

  • September 27, 2023
  • 0 Comments

சார்ஜ் போட்டு வைத்திருந்த மொபைல் போன் வெடித்து சிதறியதில் 3 பேர் காயமடைந்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. புதன்கிழமை நடந்த குண்டுவெடிப்பில், வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உடைந்தன. நாசிக் மாவட்டம் உத்தம் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெடிவிபத்தில் தீக்காயம் அடைந்த 3 பேர் சிறப்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்யும் போது அருகில் வைத்திருந்த வாசனை திரவியப் போத்தல் விபத்தை […]

இலங்கை

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 26வது பொது பட்டமளிப்பு விழாவில் பட்டம்பெறவுள்ள 1760 மாணவர்கள்

  • September 27, 2023
  • 0 Comments

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 26வது பொது பட்டமளிப்பு விழாவில் 1760 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் 26வது பொது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 07ஆம் 08ஆம் திகதிகளில் ஆறு அமர்வுகளாக நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒக்டோபர் 01ஆம் திகதியுடன் 42வது வருடத்தினை பூர்த்திசெய்யவுள்ள நிலையில் பல்வேறு நிகழ்வுகளை நடாத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இன்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது […]

இலங்கை

அலவ்வ பகுதியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

  • September 27, 2023
  • 0 Comments

அலவ்வ குரகும்புர பிரதேசத்தில் இன்று (27.09) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார் ஒன்றுடன் டிப்பர் ரக வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் காரில் பயணித்த இரண்டு பெண்களும் இரண்டு குழந்தைகளும் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உலக சுற்றுலா தினம் கொண்டாட்டம்

  • September 27, 2023
  • 0 Comments

இன்று (செப். 27) நினைவுகூரப்படும் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்கமுடியாத வகையில் அவர்களை கவரும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் மற்றும் ஏவியேஷன் சர்வீசஸ் (இலங்கை) லிமிடெட், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB) மற்றும் சிலோன் டீ வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து விமான நிலையத்தில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கையின் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்தும் வகையில் […]

பொழுதுபோக்கு

இலட்சக் கணக்கில் பண மோசடி செய்த ஏ.ஆர்.ரகுமான்? பரபரப்பு புகார்

  • September 27, 2023
  • 0 Comments

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் ‘மறைக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், ஏ.ஆர்.ரகுமான் மோசடி செய்ததாக மற்றொரு புகார் எழுந்துள்ளது, திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் இந்த புகாரை கொடுத்துள்ளனர், கொடுத்துள்ள இந்த புகார் மனுவில்… “கடந்த 2018 ஆம் ஆண்டு, இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ரூபாய் 29.50 லட்சம் பணத்தை முன்பணமாக ஏ.ஆர்.ரகுமான் பெற்றுக்கொண்டார். பின்னர் மாநாடு நடத்த […]

பொழுதுபோக்கு

சிம்புவால் தலையை பிச்சுக்கும் ஆண்டவர்… கை கொடுத்தார் கேஜிஎஃப் பிரபலம்

  • September 27, 2023
  • 0 Comments

சிம்பு கமல் கூட்டணியில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் STR48 (எஸ் டி ஆர் – 48) படத்தின் அறிவிப்பு வெளிவந்து மாத கணக்காகிவிட்டது. ஆனால் படம் ஆரம்பிப்பதற்கான அறிகுறி தான் தென்படவே இல்லை. இதற்கிடையில் ஐசரி கணேஷ் உடன் இருந்த கருத்து வேறுபாடு, ரெட் கார்டு, கோர்ட், கேஸ் என்று சிம்புவின் பெயர் மொத்தமாக டேமேஜ் ஆனது. இருந்தாலும் பிரச்சனை எல்லாம் முடியட்டும் என்று கமல் காத்திருந்தார். தற்போது அனைத்தும் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த நிலையில் இப்படத்திற்கு […]

இலங்கை

தனுஷ்க குணதிலக்க வழக்கில் நாளை தீர்ப்பு

  • September 27, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நாளை வியாழக்கிழமை (செப். 28) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. பெண்னொருவர் மீதான வன்புனவு தொடர்பில் அவுஸ்திரேலியாவில் கைதான தனுஷ்க மீதான வழக்கு விசாரணையின் தொடர்ந்து நடைபெற்று வந்தது. சிட்னி நகரின் டவுனிங் செண்டர் மாவட்ட நீதிமன்றத்தில் குணதிலக்க மீதான வழக்கு விசாரணை இடம்பெற்றது இதில் குணதிலக்க மற்றும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணும் முன்னிலைச் சாட்சியம் அளித்தனர். குணதிலக்கவுக்கு எதிராக ஆரம்பத்தில் நான்கு […]

error: Content is protected !!